Uncle Aunty Sathabishegam 26 June 2012

திரு பார்த்தசாரதி – திருமதி கனகலட்சுமி
சதாபிஷேகம்26 June 2012
வணக்கம், ஆயிரம் முழு நிலவு கண்ட அங்கிளுக்கும் அவர் துணை ஆன்டிக்கும்
என் மரியாதை, வியப்பு, பயம், ஆச்சரியம், ஆனந்தம் கலந்த வணக்கங்கள்.
எனக்கு மட்டுமா, எல்லோருக்கும் இவர்கள் uncle  aunty
It is not a small feat to survive 83, 84 years as a human being in this world.
And it is equally admirable to live together for so many years (55) as husband and wife.
சுகித்தலில் ஆரம்பிக்கும் மணவாழ்க்கை சகித்தலில் தொடர்கிறது.
சாமியாக இருப்பது சுலபம். சந்து, தெருமுனை, முச்சந்தி, நாற்சந்தி,
நகர்மத்தி, மலை, மலையடிவாரம் என்று எங்கு வேண்டுமானாலும்
கல்லாகச் சமைந்து காலம் காலமாய் இருந்து கொள்ளலாம்.
ஆனால் மனித வாழ்க்கை அப்படியா ?
கருவாகி, உருவாகி, வெளியாகி, வீறிட்டு அழுது,
பாலமுது அருந்தி, பகல் இரவு உறங்கி,
சிணுங்கி, சிரித்து, கைகால் உதைத்து, குப்புறக் கவிழ்ந்து,
தவழ்ந்து, அமர்ந்து, நின்று, நடந்து, ஓடி, விழுந்து, எழுந்து,
படித்து, பணிசெய்து, துணை தேடி, மணந்து,
முத்து முத்தாய் மூன்று பெண்களைப் பெற்று எடுத்து,
(உஷாஸ்ரீ, மனோன்மணி, ஸ்வர்ணஸ்ரீ)
அவர்களை வளர்த்து, அவர்களுக்கு மணமுடித்து,
பிள்ளைகளைச் சுமந்த தோளில் பேத்திகளைச் சுமந்து,
பாசத்தைக் காட்டி, பண்பைச் சுமந்து,
சுற்றம், சமூகம், நட்பு, விருந்து நலமுடன் பேணி,
நோய் கண்டு, நோய் நீங்கி, துவண்டு, துணிந்து,
சரிந்து, சரியாகி, தொழுது, சிரித்து, சினந்து,
சீராகி, சமனாகி – அப்பப்பா இப்படி
எல்லாம் கடந்து இங்கு வரை வந்திருக்கும்
உங்களைச் சந்தித்தால் மரியாதை, வியப்பு,
பயம், ஆச்சரியம், ஆனந்தம் வரத்தானே செய்யும்
பதினாறு பேறும் பெற்ற உங்களிடம் ஆசி வேண்டி
அடி பணிந்து வணங்கும் திண்டுக்கல் முருகானந்தன்
Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on July 2, 2012, in Events. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: