Samhitha, Varshethaa Carnatic Vocal Recital

 ஆனியில் ஒரு அரங்கேற்றம்

உறவுகளைக் காண ஒரு உல்லாசப் பயணம். பத்து வருடங்களாக சிந்தனையில் மட்டும் இருந்த ஒரு எண்ணத்தை செயலாக்க சந்தர்ப்பம் தந்தார்கள் கோபாலகிருஷ்ணனும் ஸ்வர்ணஸ்ரீயும்.
உறவு வலுக்க, உணர்வு சிறக்க, புது நட்பு பெருக வரிசையாக மூன்று நிகழ்சிகள்.
அங்கிள், ஆன்ட்டி (திரு பார்த்தசாரதி, திருமதி கனகலட்சுமி) சதாபிஷேகம்,
சம்ஹிதாவின் பள்ளிப்படிப்பு பாராட்டு விழா,
சம்ஹிதா-வர்ஷிதா கர்நாடக சங்கீத அரங்கேற்றம்.

நல்ல செய்திகள் ஒற்றையாக வரவில்லை. ராஜா-லீலா தம்பதிகளிடமிருந்து இன்னொரு அன்பு அழைப்பு. டென்வரில் காவ்யா பட்டம் வாங்கியமைக்கு விருந்து.
பிறந்த வீட்டுகாரர்களைப் பார்க்கப் போக லதாவுக்கு பரம சந்தோசம்
திருநகர் உறவுகளை திரும்பவும் புதுப்பிக்க எனக்கும் விருப்பம்
மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, மாமா மகன்கள், மகள்கள், தம்பிகள், தங்கைகள் அனைவருடன் குதித்து கும்மாளம் போட – மனு சிபிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி

முதலில் டென்வர், கொலராடோ. நள்ளிரவில் காரை ஓட்டி வந்து வீட்டுக்கு கூட்டிப் போனது காவ்யா, கலகலப்பு காவ்யா, non-stop நாயகி. “எதிர்காலம் எங்கள் கையில்” என்று சொல்லாமல் செயலில் காட்டினாள்.
இரவு ரோந்துக்கு போன இளவரசன் வசந்தையும் இடையில் கண்டோம். ஏற்றிக் கொண்டோம், இரவு இரண்டு மணிக்கு வீடு வந்தோம்.
மைல் உயர நகரம் என்றழைக்கப்படும் டென்வரில், மேலும் உயரமான castle rock-கில் லீலா ராஜா வீடு, இல்லை இல்லை, ஆறு அடுக்கு அரண்மனை
எத்திசை நோக்கினும் கண்கொள்ளாக் காட்சிகள்
பறந்து விரியும் சமவெளி ஒரு பக்கம், பள்ளம் மேடு ஒரு பக்கம்
மலைத்தொடர்கள் மறுபக்கம், மனிதர்களைப் பார்த்து பார்த்து போரடித்தால்
தேவலோகத்தை தரிசிக்க தொலை நோக்கியும் இருக்கிறது – ஆறாம் அடுக்கில்.

எனக்கு ரொம்ப பிடித்த இடம், லதாவுக்கு பிடிக்காத இடம் – wine cellar in the basement.

மூன்று நாட்கள் ஓடியது தெரியவில்லை. ஒமாஹாவுக்கு புறப்பட்டோம்,
வேனிற்கால வெய்யிலில், வாடகைக்கு எடுத்த வேனில் (Van)

நெப்ராஸ்கா மாநில ஒமாஹாவுக்கு ஒன்றாகப் போனோம்
நால்வராக வந்த நாங்கள் குன்று சூழ்ந்தாள் லீலாவொடு ஐவரானோம்
குமார்மனைவி வனிதா, செல்லமகள் சுதர்சனாவுடன் எழுவரானோம்

ஓஹோ ஆஹா ஒமாஹா – அது
இருக்கும் மாநிலம் நெப்ராஸ்கா
மிசெளரி ஓடும் நெளிநெளியா
ஆற்றைக் கடந்தா அயோவா

கிழக்கில் அயோவா, மேற்கில் நெப்ராஸ்கா
இடையில் ஓடும் மிசெளரி நதி இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
கோபிக்கு தோள் கொடுத்து உதவ ராஜா புனிதா

பாப்புகோபி பொண்ணுரெண்டும் பாடுவதா சேதிகேட்டு
பாட்டுகேட்கும் ஆசையோடு ஒமாஹா ஓடிவந்தோம்
சேலை தாவணியில் சம்ஹிதையும் வர்ஷிதையும்
சீவி சிகை முடித்து சிங்காரம் சீராய் செய்து
பிரெஞ்சு பின்னலிட்டு பளபளக்கும் நகையணிந்து
பணிவா, பதவிசா அருகருகே அமர்ந்திருக்க

சங்கீத மும்மூர்த்தி திருஉருவ படங்களுடன்
தாத்தா நவநீதன் ஒருபடமும் உடனிருக்க
ஆத்துக்கு இருகரைபோல் பாட்டுக்கு பலம்சேர்க்க
ஒரு பக்கம் வித்வான் சுரேன் சுரேந்திரநாத் (மிருதங்கம்)
மறுபக்கம் மேதை சிவாசங்கல்ப் (வயலின்)

அம்மா அனைவரையும் வரவேற்க, ஸ்ரீ ஜெயராம் இறைவணக்கம் பாட,
ஆசிரியைகள் அம்பிகாவும், சாரதாவும் முதல் வரிசையில்
அமர்ந்து ஆசியுடன் உற்சாகமும் ஊக்கமும் கொடுக்க
வண்ண மேடையில் வர்ணம் பாடி ஆரம்பித்தனர்.

கணீரென்ற குரலில் கதைசொல்லித் தொகுத்தளித்தார் மீராகஷ்யப்
கணக்கில்லா புகைப்படங்கள் கச்சிதமாய் எடுத்தனுப்ப மனு ஆனந்த்
கரவொலி எழுப்ப நட்பும் உறவும், கூப்பிட்ட குரலுக்கு Lincoln ராஜன்
நேரடி ஒளிபரப்புக்கு அப்பா கோபி, நிறைந்த நெஞ்சோடு தாத்தா பாட்டிகள்

ஆனைமுகனிடம் ஆசி வேண்டி ஆரம்பித்த முதல் பாடல்
அடிவோ  அல்லடிவோவில் களை கட்டியது
அலைபாயுதே கண்ணா பாடி நம் மனதை அலைபாயவைத்தார்கள்
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமம் தானோ –
வரிகளில் நம் இதயத்தைத் தொட்டார்கள்
தமிழிலும் தெலுங்கிலும் தடுமாறாமல், தடம் பிரளாமல் பாடி என்னைத் திகைக்க வைத்தார்கள்

தில்லானா நிமிர வைத்தது திருப்புகழ் பெருமை சேர்த்தது
தொடராதா என்று நினைக்கும் பொது நிகழ்ச்சியும் இனிதே முடிந்தது

சரவெடி சம்ஹிதா, சீனி வெடி வர்ஷிதா – நீங்கள் இருவரும்
வளம் பெற வரம் பெற நிறை சுகம் தினம் பெற
இணையற்ற நிம்மதி ஈடற்ற மன அமைதி
என்றென்றும் பெற்றோங்க எழுமலையானை
வணங்கி வாழ்த்தும் – திண்டுக்கல் முருகானந்தன்

7th July 2012

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on July 16, 2012, in Events. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: