போளி சாமியார்

போளி(போலி) சாமியார்Image சாமியார்
தீபாவளிக்கு செய்த தேங்காய் போளியில் சமபங்கு கிடைக்கததால், மனமுடைந்து, சாமியாராக முடிவு செய்து  கதிரவன் கிளம்புமுன்னே காரை எடுத்துக்கொண்டு கிழக்கு நோக்கி சென்றேன். முதல் தப்பு – காரில் சென்றது. முற்றும் துறக்க நினைத்தவன் நடந்தோ, பஸ்ஸிலோ, ரெயிலிலோ அல்லவா சென்றிருக்க வேண்டும்? ரெண்டாவது தப்பு – கட்டியவளிடம் சொன்னது. கொஞ்சம் கூட பதறாமல் “கதவைப் பூட்டிட்டு போங்க” -ன்னு சொல்லிட்டு திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டாள், கல்மனசுக்காரி. நெல்லைச் சீமையிலே அல்வா மட்டும்தான் இளகும் போலிருக்கு, பெண்கள் ரொம்ப ஸ்ட்ராங்.
M.S.சுப்புலட்சுமி அவர்களின் சுப்ரபாதம், பிறகு ABBA, BONEY M (கனடாவில் ABBA, BONEY M கேட்கும் ஒரே ரசிகன் நானாகத்தான் இருப்பேன்), சுகி சிவம், ஞானசம்பந்தன் இவர்களின் சமய, சமுதாய சொற்பொழிவுகள் கேட்டுக்கொண்டே மொண்ட்ரியல் (Montreal) முருகன் கோவில் வந்து சேர்த்து விட்டேன். ஏழு கடல் கடந்து ஏழுமலையான் இங்கு வந்து திருக்கல்யாணக் காட்சி தருவதாகக் கேள்விப்பட்டு உள்ளே சென்றேன். கோவிந்தனைப் பார்க்க காசு கேட்டார்கள், அதுவும் 101 டாலர்கள்.விசிட் விசாவில் வந்திருக்கும் வெங்கடேஷ்வரரைப் பார்க்கத்தான் கட்டாயக் கட்டணம். ஆனால் மருமகன் முருகனுக்கு இடது பக்க சன்னதியில் அபய ஹஸ்தம் காட்டி நிற்கும் பெர்மனென்ட் ரெசிடென்ட் வெங்கடேஷ்வரரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கண்குளிர தரிசிக்கலாம் – பணம் கொடுக்காமல். படைத்தவனிடம் இருந்து பதினாறு செல்வங்களையும் பெறுவதுதான் என் குறிக்கோள். அந்த கோவர்தனனிடம் ஒரு 100 மில்லியன் டாலர்களாவது கறந்துவிடவேண்டுமென்று ப்ரிட்ஜ்வாட்டருக்கும்(New Jersey) பிட்ஸ்பர்குக்கும்(Pennsylvania) நான் அலைவது அவர்களுக்கு தெரியவில்லை. தெரிந்திருக்க நியாயமில்லை. எனக்கும் இறைவனுக்கும் இடையில் தரகன் எதற்கு? கண்மூடி நின்றால் காட்சி தரும் கோபாலனை, closed circuit திரையில் சேவித்தேன். திரக்கில் (busy, பிஸி) அல்பம் நேரம் எனக்கும் தருமாறு திருவேங்கடனிடம் வேண்டி, அப்படியே அந்த 100 மில்லியன் பற்றி நினைவு படுத்திவிட்டு வெளியே வந்தேன்.
வயிறு பசித்தது. வைராக்கியம் குறைந்தது. முனிவனாக முடிவு செய்து மூன்று மணி நேரம் கூட ஆகவில்லை, மனைவியையும் மகன்களையும் மனது தேடியது. மறுபடியும் திரும்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
சுடச்சுட சோறு, பருப்பு, பாவக்காய் – மதிய உணவு அமுதமாய் இனித்தது. ஆனால் பக்கத்தில் இருந்து பரிமாறிய பாரியாள் முகத்தில் இழையோடியது பாசமா பரிகாசமா என்று புரியவில்லை.
Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on November 19, 2012, in Opinions. Bookmark the permalink. 2 Comments.

 1. it was definitely parikasam, poli samiyar

 2. பாலு மாமா சொன்னதை நான் ஆட்சேபிக்கிறேன். ஒண்ணா, ரெண்டா, 100 மில்லியன் அல்லவா, எல்லாம் வல்ல கோவிந்தனிடம் வேண்டி வந்திருகிறீர்கள். நிச்சையமாக பாசம் தான்.

  பின் குறிப்பு : எல்லாம் வல்ல கோவிந்தன் இப்போழுது தான் என் கனவில் வந்து, தங்களை நல்ல சாமியாராக promot
  பன்ன்தாகவும், தங்களிடம் 100 மில்லியனை வாங்கிக் கொள்ளுமாறு ஆசி வழங்கி சென்றார்.
  ஏதோ ஒரு பழமொழி நிணைவுக்கு வருகிறதா.

  அன்புடன்
  இராஜன் சீனிவாசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: