Ganapathy Homam at Vanitha-Kumar’s home

Ganapathy Homam at Vanitha-Kumar's home

விர்ஜினியாவில் ஒரு விசேஷம்
புதுமனை புகுவிழா

வருடப்பிறப்பும், வனிதா-குமார் புது வீட்டு
பால் காய்ச்சுதலும்  ஒரே நாளில், நல்ல நாளில்.
அதிகாலையிலேயே அடுக்களை களைகட்டியது. சமைத்ததை எடுத்துக்கொண்டு சாண்டிலிக்கு (Chantili) புறப்பட்டோம். அத்தையின் வழிகாட்டல், மேலிருந்து மாமாவின் ஆசிகள், முருகன் கோவில் கணேஷபட்டரின் மிக நேர்த்தியான, விளக்கத்துடன் கூடிய கணபதி, நவகிரஹ ஹோமம், உறவு, நட்பு உதவியுடன் எளிய, இனிய முறையில் இறைவன் அருளால் இனிது நடந்தது.

கல, கல சிரிப்புக்கு காயத்ரி, ஹரிணி,
அபிநயா, சுதர்சனா – அழகு தமிழ் மழலை
ஷீலா, சில்வியா அம்மா திவ்யா
அக்காவுக்கு உதவ தப்பாமல் ஸ்ரீதேவி
எக்கணமும் கூடவரும் பூபாலன், வெங்கட்
கும்பகோணத்து முத்துவும் குடும்பமும்
முத்துச்சிரிப்பை மொத்தக் குத்தகைக்கு
எடுத்திருக்கும் இளஞ்செழியன் மற்றும்
சிவா – சுமதி, அழகர் – மனைவி, மகள்
படிக்க வந்திருக்கும் பம்பாய்க்காரன் அர்விந்த்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வாம்.
அனைவரும் சேர்ந்து, ஆறு மணி நேரத்தில்
வீடு விட்டு வீடு பாயும்
வித்தையை செய்து முடித்தோம்
மதுரைக்காரர்களுக்கு விருந்தோம்பல் பற்றி சொல்லியா தர வேண்டும் ?
மிளகு மணக்கும் வெண்பொங்கல்
மிருதுவான உளுந்துவடை
நெய் மிதக்கும் சக்கரைப்பொங்கல்
சுடச்சுட இட்லி, சுவைமிகு சாம்பார், சட்னி
மனமும், வயிறும் நிறைந்த
மறக்க முடியாத நிகழச்சிகளில்
மற்றுமொன்று – வனிதா, குமார்
விர்ஜினியாவில் வீடு மாற்றியது.

Advertisements

Posted on April 17, 2013, in Events. Bookmark the permalink. 1 Comment.

  1. I am very happy that you all joined and made the function , a happy and memorable one.
    Sulo akka told me that you all helped kumar in removing things from the old house to the new one . Even if it is in India , so many people would not have attended .
    Keep it up,

    Bgr

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: