ஆண்

ஒவ்வொரு ஆணும் ஒரு தென்னை,,,
விதைத்தது தந்தை, வளர்த்தது அன்னை,,,

முகநூல் (FaceBook) எங்கே மறக்குமோ என்னை,,,
எனப்பயந்து பதிந்தேன் மேற்சொன்ன கருத்தை,,,

பதிவிட்ட பத்தே நிமிடங்களில் தொலைபேசியில் மனைவி
எழுதிய இருவரிகளுக்கு எதிர்க்கருத்துச் சொன்னாள் துணைவி

இளநீரும் தேங்காயும் மனைவிக்கும் மக்களுக்கும்தான் என்று
மறைமுகமாகச் சொல்லும் உங்கள் உட்கருத்து தெரியாதா என்றாள்

ஆண் மட்டுமா தென்னை, பெண்ணை ஏன் விட்டீர் என்றாள்
நாற்றாக வளரும் பெண் நெல்லாக விளைவது எங்கே என்றாள்
பிறந்த வீட்டிலா இல்லை புகுந்த வீட்டில்தானே என்று படபடத்தாள்

செல்லமாய் வளர்ந்த பெண்கள் புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும்
உறவுக்கும், நட்புக்கும் பொங்கி பரிமாறி, கழுவி, துடைத்து, தூர்த்து, பெருக்கி, துவைத்து, தேய்த்து, அடுக்கி, செலவைச் சுருக்கி சேமிப்பைப் பெருக்கி, வீடு வாகனம் வாங்க உதவி, வேலைக்கும் போய் வந்து இல்விருத்தி செய்யும் இல்லத்தரசிகள் – இவர்கள் மட்டும் தென்னை இல்லையோ என்று பிடி பிடி என்று பிடித்துவிட்டாள்.

தேன் கூட்டில் கை வைத்த திருடன் போல் திகைத்து நின்றேன்.
எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவனை நினைவில் கொண்டேன்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் இந்த ஆண்டி
வம்பை விலை கொடுத்து வாங்கினேனே விரும்பி வேண்டி

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on February 8, 2014, in Opinions. Bookmark the permalink. 1 Comment.

  1. காணி நிலமும், பத்து பன்னிரண்டு தென்னை மரமும், பாட்டுக் கலந்திட ஒரு பத்தினிப் பெண்ணும் வேண்டுமெனக் கேட்ட மீசைக்காரனை ஒரு நிமிடம் நினைத்திருந்தால், இப்படி தென்னை ஆணா-பெண்ணா என்ற சர்ச்சை ஏற்பட்டிருக்குமா?. சிவபெருமானே கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற சர்ச்சையில் அடிவாங்க்கியவர்தானே? இதெல்லாம் சகஜமய்யா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: