Winter that never seems to end

கொட்டு பனி நிற்கவில்லை
கடுங்குளிரும் குறையவில்லை

தை மாச தரை நடுக்கம்
மாசி வந்தும் போகவில்லை

ஊசி போலக் குத்தும் இந்த
ஊதக்காத்து நிற்கவில்லை

சாலை ஓரம் ஒதுக்கி வைத்த
உறைபனிதான் உருகவில்லை

வீதி மீது வாகனங்கள்
வழுக்காமல் போவதற்கு

உப்புத்தூள் தூவும் பணி
நகராட்சி நிறுத்தவில்லை

தெக்க போன பறவைக் கூட்டம்
திரும்பும் நேரம் வரவேயில்லை

வெளிச்சம் தரும் சூரியனால்
வெப்பம் தர இயலவில்லை

கையுறையும் குல்லாவும், கனமான காலணியும்
கழற்றி எறிவதற்கு காலம் இன்னும் வரவில்லை

வெப்பமான நாட்டுக்கு விடுமுறையில்
போவதற்கு வானூர்தி நிறுவனங்கள்
இலவச பயணச்சீட்டு ஏன் எனக்குத் தரவில்லை?

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on March 2, 2014, in Poetry. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: