How can we forget….Madurai

                                        மதுரையை எப்படி மறக்க முடியும்?

மதுரையை எப்படி மறக்க முடியும்? – மீனாக்ஷி ஆளும்

மதுரையை எப்படி மறக்க முடியும்? – மங்கம்மா வீற்றிருந்த

மதுரையை எப்படி மறக்க முடியும்? – தங்கம் அரங்கு தந்த

மதுரையை எப்படி மறக்க முடியும்?

தான் பெற்ற சுப்புலட்சுமி (M.S.) தரணிக்குத் தாரை வார்த்த

மதுரையை எப்படி மறக்க முடியும்?

அகில உலகை ஆளும் ஆண்டவனே ஆனாலும்

குற்றம் குற்றமே எனக் குரல் கொடுத்தான் (நக்கீரன்) குடியிருந்த

மதுரையை எப்படி மறக்க முடியும்?

பெருமானே ஆனாலும் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட அந்த

மதுரையை எப்படி மறக்க முடியும்?

அறுபடை வீடுகளில் இரு வீடு கொண்டிருக்கும்

மதுரையை எப்படி மறக்க முடியும்?

மணம் மிகுந்த மல்லிகை மண்வாச மரபுகள் – மிதந்து வரும்

மதுரையை எப்படி மறக்க முடியும்?

நரிமேடு கரிமேடு அரசரடி அனுப்பானடி

பசுமலை, பய்க்காரா, பழங்காநத்தம்

அண்ணாநகர், கேகேநகர், ஷெனாய்நகர்…திடீர்நகர் ஆமாம் திடீர்நகர்

செல்லூர், ஆணையூர், வண்டியூர், விரகனூர்

படித்துறை, புட்டுத்தோப்பு, பொன்னகரம், பூந்தோட்டம்

மாடக்குளம், பீபிகுளம், மகபூப்பாளையம், கோரிப்பாளையம்

மதுரையை எப்படி மறக்க முடியும்? – அய்யா

மதுரையை எப்படி மறக்க முடியும்?

 

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on May 29, 2014, in Poetry. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: