Canada – கனடா – இந்த மண்ணைப்பற்றி …

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

பாகம் – 1

ஆல்பெர்டா

alberta-canada

ஆல்பெர்டா – கனடாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று.

முல்லையும், மருதமும், குறிஞ்சியும், கொஞ்சம் பாலையும் உண்டு.

எண்ணைமண் (Oil Sands) நிறைந்த நிலம்.

கனிம வளங்களுக்கு குறைவில்லை. கடுங்குளிருக்கும் பஞ்சமில்லை.

மேற்கில் ராகிஸ் மலைத்தொடர் இதன் எல்லை (Rocky Mountain).

விளைநிலங்கள் ஏராளம், பண்ணைத்தொழில் பிரதானம்

தலைநகர் எட்மண்டன், எழில் நகர் கேல்கரி அல்லது கல்காரி (Calgary)

Calgary is a Connected City

DSC02418.JPG

விண்ணில் இருந்து நோக்கினும், மண்ணில் இருந்து நோக்கினும்

முதலில் கண்ணைக் கவர்வது நதி சார்ந்த நகர் மையம்

அழகழகான அடுக்குமாடிக் கட்டிடங்கள்

அமைதியாக ஓடுகின்ற ஆறு – பௌ ரிவர் (Bow River)

இயற்கை படைத்த நதியின் இரு கரையும்

மனிதன் படைத்த மரவனம் மலர் வனம்

dsc02378

இரவு பகல் பாராது நடை பயிலும் நன்மக்கள்

சிலர் நடை, சிலர் ஓட்டம், சிலர் காலில் சக்கரம் (Roller Skates, Skate Board)

dsc02376

இடையறாத உடற்பயிற்சி இடைவிடாத நடைப்பயிற்சி

விளைவு,,,ஆணும் பெண்ணும் அத்தனை அழகு

கோடையில் நடை, ஓட்டம், குளிரில் பனிச்சறுக்கு

எந்தப்பருவத்திலும், எல்லாப்பருவத்தினரும் நடக்கத் தோதாக

நகர் மத்தி முழுவதும் ஊசி ஊசியாக நிற்கும்

உயர் கோபுரங்களை நூல் கோர்ப்பது போல

15 அடி உயரத்தில் 70 க்கும் மேலான

பகட்டான பாதசாரி பாலங்கள்

img_20161122_134148

(Climate Controlled, Covered, Pedestrian Bridges – + 15 Skywalk)

ஆங்காங்கே உணவுச் சந்தைகள், உடற்ப்பயிற்சி சாலைகள்

சிறு வணிகர்கள், சலவை அகங்கள், பல் மருத்துவர்கள்

இடை இடையே சிங்காரச் சிற்பங்கள்

மிகமிகக் குறைவாக கையேந்தும் வறியவர்கள்

நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை

எங்கு நோக்கினும் பாரதி கண்ட புதுமைப்பெண்கள்

கம்பன் சொன்ன “இல்லையோ” என எண்ணவைக்கும் இடைகள்

அழகுமிகு சிகை அதரங்களில் நகை

அலைபாயும் விழி தடையில்லா மொழி

ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை

காளை ஏறும் வீரவிளையாட்டு பூமி அல்லவோ (Calgary Stampede)

பலர் கட்டுடல் காளைகள் வேழம் நிகர்த்த விரி மார்பு கொண்டவர்கள்

விரைவு நடை வேங்கைகள்

நேர்த்தியான உடை, நேரான நடை

ஒட்டிய வயிறு கொண்ட விருகோதரர்கள்

அதிதீவிர உடற்பயிற்சி அதன் விளைவு

பலபேருக்கு கைகட்டு கால்கட்டு – ஆனால்

அதைப்பற்றி கவலையில்லா மனப்போக்கு

ஓதிய மரம் பெருத்தால் உத்தரத்துக்கு உதவாது

என்று நன்கு உணர்ந்தவர்கள்

மின்னுயர்த்தி (Elevators) இருந்தாலும்

மாடிப்படிகளைத் தாவிக்கடப்பவர்கள்

மொத்தத்தில், இந்த பத்தொன்பது ஆண்டு வடஅமெரிக்க வாழ்க்கையில்

நல்லுடல் கொண்டோரை நிறைய வாழும் நகரம் கேல்கரி

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on November 24, 2016, in Travelogue and tagged , , . Bookmark the permalink. 2 Comments.

 1. அருமை அருமை மிக அருமை!

 2. அருமை அருமை மிக அருமை!
  ஆனால் சிறுவர்கள் காணத்துடிக்கும் ‘Dynasaur Park’ ஐ மறந்து விட்டீரே!
  இதோ சில குறிப்புகள் (சரித்திரத்தில் வராதவை)
  டைனஸார்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் (தொல் பொருள் ஆய்வாளர்கள் கருத்து). திருச்சியின் அருகே சிலவற்றின் எலும்புகள் கண்டு பிடிக்கப்ப்ட்டுள்ளன
  (Ref: India’s Jurassic nest dug up in Tamil Nadu (Times of India oct 1, 2009))
  அரசியல் சண்டை காரணமாக டைனஸார்கள் குடிபெயர்ந்ததாக ஒரு கருத்து. (இன்றுபோல் அன்றும் DMK(Dynasaur Munnetra Kazhakam), ADMK (Anti Dynasur Munnetra Kazhakam) இரண்டும் சிண்டு முடித்து சண்டை போட்டுக்கொண்டனர்). மற்ற
  கருத்து டைனஸார்கள் குமரிக்கு தெற்கில் லெமூரியா கண்டத்திற்கு சென்றதாகவும் பின்னர் ‘Plate Tectonics’ மூலம் அது கானடாவாக மாறியதாகவும் என்றும் கூறப்படுகிறது. 150 மில்லியன் வருடங்களுக்கு முந்திய (தமிழ் மட்டுமே) இருந்த கதை..
  (கானடா தமிழ் நாடுதான் என்பதில் சந்தேகம் இல்லையே!). இன்றும் கடுமையான ஜலதோஷம் பிடித்து தொண்டை வறண்டால் நாம் பேசுவது டைனஸார் காலத்து தமிழ் மொழியே!

  டைனஸார்களில் முக்கியமாக ப்ராண்டோஸாரஸ் (Brontosauras) சுத்த சைவம். மற்ற சில்லறை அசைவ ஜந்துக்கள் (T Rex etc) அதையே உண்டு வாழ்பவை. (இவை அனைத்தும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் மரபின் அடிப்படையில் குடும்பம் நடத்து பவனாக அறியப்படுகின்றன) முக்கியமாக ப்ராண்டோ ஸாரஸ் சாப்பிடுவது தமிழ் நாட்டு முக்கிய உணவான இட்லி ஸாம்பார்.
  Recipe தெரியாததால் உணவின்றி காலப்போக்கில் அவை இறந்தன. அதன் மூலம் மற்ற அசைவ ஜந்துக்களும் உணவின்றி மாண்டன. (This is the ‘Mass Extinction’ Theory).
  அவற்றின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருப்பதே “Dynasur Park (at Drumheller near Calgary – a UN Heritage Site)”.
  ஒவ்வொரு தமிழ் சிறுவன்/சிறுமி காணவேண்டிய நம் மூதாதையர் கல்லறை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: