Canada – கனடா – 3

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

பாகம் – 3

டிரம்ஹெல்லர் – ஆல்பெர்டா (Drumheller, AB)

கொசுவும், கரப்பானும், குருவியும், காக்கையும், தேளும், பாம்பும், புழுவும், பல்லியும், பூரானும், சிப்பியும், சிலந்தியும், நத்தையும், நாகமும், மானும், மயிலும், அணிலும், ஆடும், மாடும், மனித இனமும் அழியவில்லை.

ஆனால், பயங்கர உருவமும், பலம் பொருந்திய உடலும் கொண்ட டைனசார்கள் இனமே அழிந்து விட்டது. பரவலாக சொல்லப்படும் காரணம் – வானத்தில் இருந்து விழும் விண்கற்கள். அந்த இனத்தின் எச்சமும், சொச்சமும், எலும்புக்கூடுகளும் (Fossils) உலகிலேயே மிக அதிகமாக ஒரே பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் – டிரம்ஹெல்லர் – ஆல்பெர்டா. மிகப் பெரும் அழிவைச் சந்தித்த இந்த பகுதிக்கு பேட்லேண்ட்ஸ் (Badlands) என்று பெயர்.

கேல்கரியில் இருந்து வடகிழக்கே சாலைவழி இரண்டு மணி நேரத்தில் (185 கி.மீ.) இருக்கிறது.

முதலில் பார்க்க வேண்டியது – ஹூடுஸ் ட்ரேய்ல் (Hoodoos Trail)

இலக்கை அடையும்வரை எழுதுவதற்கு எதுவுமில்லை.

செல்லும் வழியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை

சீரான சமவெளியில் விளைநிலங்கள், மாட்டுப்பண்ணைகள்,

ஆழ்துளைக் கிணறுகள், தானியக்கிடங்குகள்

அங்கொன்றும், இங்கொன்றுமாக கிராமங்கள்

வழிதவறி விட்டோமோ என்றுமனம் எண்ணுகையில்

சட்டென்று தோன்றும் சிற்றாறும் பள்ளத்தாக்கும்

கண்முன் விரியும் காணற்கரிய காட்சி

dsc02573dsc02574இயற்கை செதுக்கிய சிற்பங்கள்

காலம் காலமாக காற்றாலும் நீராலும் அரிக்கப்பட்டு

பூவுலகின் தொன்மைக்கு கட்டியம் கூறும்

மணற்குன்றுகள், பாறைபடிவங்கள்

ஓட்டிவந்த தேரை (காரை) ஓரங்கட்டி நிறுத்திவிட்டு

தாவித்தாவி மேலேறி உச்சிசென்று நோக்கினால்

ஆகா, உலகம் இவ்வளவு, அழகா என்ற எண்ணம் தோன்றும்

dsc02580

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்து ராயல் டைரெல் அருங்காட்சியகம் (Royal Tyrell Museum)

DSC02589.JPG

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பேரிடரால் மடிந்த

பெருமிருக இனம் – டைனசார்கள் (தொன்மாக்கள்)

புதைந்து கிடந்தது எலும்புகளை எடுத்து, சேர்த்து, கோர்த்து,

ஒட்டவைத்து, கூடாக உருவாக்கி (Skeleton) விரிவான

விளக்கங்களுடன் காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள்.

அவைகளின் பிரமாண்டம் பிரமிக்கவைக்கிறது.

படைக்கும் இயற்கையின் அழிக்கும் சக்தி மலைக்க வைக்கிறது.

dsc02597dsc02594

img_2830img_2832~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேட்லேண்ட்ஸில் பார்க்க வேண்டிய மூன்றாவது இடம் –

ஹார்ஸ்தீப் (Horse Thief) பள்ளத்தாக்கு. வேகமாக வீசும் காற்று ஆளைத் தூக்கும். குதிரைத் திருடர்கள் ஒருகாலத்தில் நிறைந்த இடமாம். ஒருபக்கம் ஹார்ஸ்சூ, மறுபக்கம் ஹார்ஸ்தீப் பள்ளங்கள். வளைவும், நெளிவுமாய், பாறையும் மணலுமாய் கண்ணுக்கு விருந்து. சறுக்கும் சரிவுகளில் இறங்கி அடிவாரம் செல்ல ஒற்றை அடிப் பாதைகள் உண்டு.

pano_20160827_190513

dsc02613dsc02612dsc02611

எங்கு நோக்கினும் புத்துணர்ச்சி தரும் பல நிறப் பாறைகள்.

ஒரு மழை பெய்தால் சகதியாகும் களிமண் படுகைகள்

முகத்தில் மோதும் சுத்தமான காற்று

மேலிருந்து நம்மை நோக்கும் மேகம்

திரும்ப மனமில்லை.

முக்கிய குறிப்பு >>> வழுக்காத காலனிகளும், வழுக்கினால் தூக்கிவிட நட்பும் உறவும் கட்டாயம் தேவை.

புசிக்கும் நேரம் வந்தவுடன் கப, கபவென்று பசிக்கும்.

ஆசிர்வதிக்கப்பட்டவர்களும்(எந்த நோயும் இல்லாதவர்கள், இல்லை என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்), சக்கரை நோய்க்கு மாத்திரை, இன்சுலின் போட்டு வாழ்ந்தாலும் வாழ்வோம், ஆனால் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, பொங்கல், ரொட்டி, சப்பாத்தி, சோறு இவைகளை விட மாட்டோம் என்பவர்களும் இங்கு செல்லுங்கள் >>>

http://www.madrascafe.ca/

மண்ணின் மைந்தர்கள் ஆக விரும்புவோர், மாமிசம் (இறைச்சி) மட்டும் எண்ணுவோர், உண்ணுவோர் இங்கே செல்லுங்கள் >>>
http://minassteakhouse.com/

http://pampasteakhouse.com/

 

அடுத்து Banf, AB…

அதுவரை அன்புடன் ஆனந்த்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tyrrellmuseum.com/

 

 

 

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on December 4, 2016, in Travelogue and tagged , , . Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: