Author Archives: muruganandan

First trip to USA

தொடங்குமுன் முடிந்த பயணம்
1997 அக்டோபர்
 
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்தான் உலகின் மிக நீளமான, படைகளால் பாதுகாக்கப்படாத எல்லை இருக்கிறது, ஏறக்குறைய 8900 கி.மீ. வேலி இல்லை, சுவர் இல்லை, ராணுவம் இல்லை, ஆனால் சட்டப்படி எங்கெல்லாம் எல்லை காவல் நிலையங்கள் இருக்கிறதோ அங்குதான் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குள் போக வேண்டும். It is a “honour” based system.
 
ஐ.நா. தொடர்ந்து உலகின் மிக நல்ல நாடு என்று மூன்று முறை கனடாவை தேர்ந்தெடுத்த காரணத்தால் நான் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தேன். நாங்கள் நால்வரும் 18 ஆண்டு பொறியியல் அனுபவம், 6 மாதங்களுக்கு தேவையான பணம், 8 பெட்டிகளுடன் வந்து இறங்கினோம். குஜராத்தி முஸ்லிம் நண்பர் எங்களுக்கு ஒருவாரம் அடைக்கலம் தந்தார். 
வேலை இல்லாத காரணத்தால் யாரும் வீடு தரவில்லை. உடனே அமெரிக்காவில் இருந்த மச்சினர் வந்து லதா, மனு, சிபி மூவரையும் அழைத்துக்கொண்டு நியூஜெர்சி போய்விட்டார்.
முஸ்லிம் நண்பர் ஒரு ஆண் தனியாக அவர் வீட்டில் இருப்பது அவ்வளவு சரியில்லை என்பதால் என்னைக் கொண்டுபோய் ஒரு விலை குறைவான மோட்டலில் (Motel) இறக்கிவிட்டுப் போய்விட்டார், எட்டு பெரிய பெரிய பெட்டிகளுடன்.
தீபாவளி நெருங்கி விட்டது. மச்சினர் பஸ்ஸில் அமெரிக்கா வருமாறு அழைத்தார். One way ticket எடுத்து வாங்க, திரும்பி போகும்போது நால்வரையும் காரில் விடுகிறேன் என்றார்.
விடிகாலை டொராண்டாவில் இருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஒன்றரை மணி நேரத்தில் அமெரிக்க எல்லை வந்து சேர்ந்தோம். பஸ்ஸில் இருந்த எல்லோரையும் இறக்கி Customs and Immigration அதிகாரியிடம் அனுப்பினார்கள்.
என் முறை வந்தது, இதுதான் நடந்தது.
அதிகாரி: எங்கிருந்து வருகிறாய்
நான்: டொரோண்டோ
அதிகாரி: எங்கிருந்து வருகிறாய்
நான்: டொரோண்டோ
அதிகாரி: எங்கு வசிக்கிறாய்
நான்: மோட்டலில் (அதோடு நிறுத்தி இருக்க வேண்டும், உண்மை விளம்பியான நான் யாரும் வீடு கொடுக்கவில்லை, அதனாலே மோட்டலில் இருக்கிறேன் என்ற கூடுதல் விபரம் கொடுத்தேன்)
அதிகாரி: எங்கே வேலை செய்கிறாய்?
நான்: வேலை இன்னும் கிடைக்கவில்லை, சும்மாதான் இருக்கிறேன்.
அதிகாரி: எந்த நாட்டின் கடவுச் சீட்டு
நான்: இந்தியா
அதிகாரி: எங்கு போகிறாய்
நான்: எடிசன், நியூஜெர்சி
அதிகாரி: எதற்கு போகிறாய்
நான்: தீபாவளி
அதிகாரி: அப்படின்னா?
நான்: விளக்குத் திருவிழா (அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், என் குடும்பம் ஏற்கனவே அங்கே போய்விட்டது என்ற கூடுதல் விபரம் கொடுத்தேன்)
அதிகாரி: பஸ் டிக்கெட் காண்பி
நான்: ஒரு வழி சீட்டை காண்பித்தேன்
அதிகாரி: உனக்கு இருக்க இடமில்லை, வேலை இல்லை, அமெரிக்காவுக்குள் வர விசா இல்லை, கையில் இருப்பதோ ஒரு வழி பஸ் டிக்கெட். நீ திரும்பி கனடாவுக்கு வருவாய் என்று நிரூபிக்க ஒரு சான்றும் இல்லை. எனவே உனக்கு எங்கள் நாட்டுக்கு வர அனுமதி இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். நல்ல வேலை அந்த மறுப்பை பாஸ்போர்டிலோ, கணினியிலோ பதியவில்லை.
நான்: 😦 விதியை நொந்தவாறு வெளியே வந்தேன்.
நான் சொல்லியதெல்லாம் உண்மை. ஆனால் உண்மை சிலநேரங்களில் செல்லுபடியாவதில்லை.
அமெரிக்கர்களின் அணுகுமுறை உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே. ஆணவம், அகங்காரம், அதிகாரம், கர்வம். இருந்தும் அமெரிக்க தூதரக வாசலில் வரிசையின் நீளத்தைப் பாருங்கள். காரணம் – செய்யும் வேலைக்கு அதிக கூலி, உடனே கூலி, தினசரி வாழ்க்கையில் யாரும் யாருக்கும் லஞ்சம் தர வேண்டியதில்லை.
நாம் மட்டும் குறைந்தவர்களா, என்ன, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சொலவடையே நாம் தந்ததுதானே.
1997 தீபாவளி – மனைவியும் குழந்தைகளும் அமெரிக்காவில். நான் கனடாவில்.
Lesson Learned – Common law states everybody is innocent unless otherwise proven guilty. But when it comes to immigration law, everybody is a suspect unless otherwise we prove ourselves to be innocent.
கையில் காசில்லை. கடுங்குளிர். எல்லையில் இருக்கும் ஒரு கடைக்காரன் காப்பி வாங்கிக் கொடுத்து, திரும்பி டொரோண்டோ போக டிக்கெட் எடுத்து என்னை அனுப்பிவைத்தான்.
பின்குறிப்பு: அதே அமெரிக்கா இரு மடங்கு சம்பளம் கொடுத்து எனக்கு வேலை கொடுத்தது நான்கே ஆண்டுகளில் – Stay Tuned.
Advertisements

Niagara Falls

நயாகரா நீர்வீழ்ச்சி

நீர்இன்று அமையாது உலகு – வள்ளுவர் சொல். அவர் எதைச் சொல்லாமல் விட்டார்?

தமிழ்நாடு மேற்குத்தொடர்ச்சி மலை மறைத்துக்கொண்டு இருக்கும் மழைமறைவுப் பகுதி, கொட்டும் மழையெல்லாம் கேரளா பக்கம். அதுவும் எங்க ஊரில் எப்பவும் தண்ணீர் பற்றாக்குறை. “திண்டுக்கல்காரனுக்கு பொண்ணு கொடுக்காதே, ரெட்டைக்குடம் போட்டு தண்ணி எடுத்தே இடுப்பு ஓடியும்”ன்னு பேச்சு வழக்கு உண்டு.

விதி என்னை சேர்த்த இடம் – கனடா. எங்கு பார்த்தாலும் தண்ணீர் –  குட்டை, குளம், ஏரி, ஓடை, கால்வாய், வாய்க்கால், அருவி, ஆறு, நதி, நீர்வீழ்ச்சி, கடல், பெருங்கடல் – அவ்வளவு தண்ணீர்.

ஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) மட்டும் உலகின் மொத்த நல்லதண்ணீரின் 20% தன்னகத்தே கொண்டு ததும்பி வழிந்து கொண்டே இருக்கின்றன. நான்கு ஏரிகள் (SuperiorHuronErie, Ontario) கனடா அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் சொந்தம். Lake Michigan அமெரிக்காவுக்கு மட்டும் சொந்தம்.

இந்த ஐந்து ஏரிகளின் பரப்பளவு நம் தமிழ்நாட்டைபோல ஏறக்குறைய இருமடங்கு, கொள்ளளவோ நம் செம்பரம்பாக்கம் ஏரியைப் போல 2 இலட்சம் மடங்கு. எந்த ஏரியிலும் நீங்க அடுத்த கரையைப் பார்க்க முடியாது. கடலைப் போலவே, அலைகள், சுழல்கள், ஆபத்தான ஆழ்நீரோட்டங்கள், உயிரினங்கள் எல்லாம் உண்டு. பெரும்படகு, கப்பல்கள் கவிழ்ந்து சமாதியும் அடைந்திருக்கின்றன.

ஐந்து ஏரிகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. வசந்தத்தில் உருகுபனியும், மற்ற காலங்களில் மழையும் ஏரிகளை நிரப்புகின்றன. ஒரு ஏரி நிறைந்து, வழிந்தோடி இன்னொன்றை நிரப்பும். நான்காவது ஏரியான “ஏரி”யையும் (ஏரியின் பெயரே ஏரிதான்” ஐந்தாவது ஏரியான “ஒன்ட்டாரியோ”வையும் இணைக்கும் நீர்வழித்தடத்துக்கு (ஆறு) பெயர்தான் நயாகரா. (இராகுவா பழங்குடிச் சொல்).

நயாகரா நதி முப்பது கிலோமீட்டர் வடக்கு நோக்கி ஓடி, மூன்று பிரிவாக பிரிந்து அமெரிக்கா பக்கம் இரண்டு சிறு நீர்வீழ்ச்சிகளாகவும், கனடா பக்கம் ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியாகவும் பெருஞ்சத்தத்தோடு நொடிக்கு முப்பது அடி வேகத்தில், 3200 டன் நீரை கொட்டுகிறது. அதிக உயரமில்லை, 200 அடிக்கும் குறைவுதான். ஆனால் அந்த ஆர்ப்பரிக்கும் அழகைப் பார்க்க ஆண்டு முழுதும் பயணிகள் உலகெங்கிலும் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.

நாள் முழுதும் நடந்து கொண்டே பார்க்கலாம், நின்று நின்று ரசிக்கலாம், பெரும்படகுகளில் மிக மிக அருகே சென்று பஞ்ச பூதத்தில் ஒரு பூதம் இன்னொரு பூதத்துடன் இணைவதை தரிசிக்கலாம்,  ஹெலிகாப்டரில் பறந்து பார்க்கலாம்.

இந்தப் பேரழகியின் வயது – 14,000 என்று புவியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் வனப்பும் யவ்வனமும், களையும், கம்பீரமும் கொஞ்சம் கூட குறையவில்லை. புதுமண தம்பதிகளின் தேன்நிலவுக்கு முதல் இடத்தில இன்று வரை இருப்பதில் விந்தைஇல்லை. நம் தமிழ்நாட்டின் மறைந்த மூத்த தலைவரின் பேத்தியும் தன் கணவனுடன் இங்குதான் வந்தார். (தாத்தா, பேத்தி இருவரின் பெயர் சொன்னால் என்னிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளில் ஒன்று பரிசாகத் தரப்படும்).

விமான நிலையங்கள் – டொரோண்டோ (கனடா), பப்பாலோ (அமெரிக்கா).

தங்கும் இடங்கள் – ஏராளம். ஒரு இரவுக்கு ரூ 4000 முதல் ரூ 20,000 வரை.

உணவுச் செலவு – ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சராசரி ரூ 2500

நான் எங்கு இருக்கிறேன் – ஆட்டோவில் இருந்து நயாகரா 7 மணி நேர கார் பயணம்.

7 மணி தூரமா? பின் எங்க வீட்டுக்கு நீங்க ஏன் வரவேண்டும்? குறை மாவு நிறை கொழுப்பு உணவு நானே சமைத்து உங்களுக்கு கதையோடு பரிமாறுவேன். இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, உப்புமா, வத்தல், வடகம், அப்பளம், ஊறுகாய், சோறு, குழம்பு, ரசம், காய்கறி – என் வீட்டுக்காரம்மாவை அடிக்க ஆளில்லை, அட்லாண்டிக் கடலுக்கு மேற்கே.

இரண்டு நாடுகளுக்கும் விசா எடுத்து விடுங்கள். வானவில் பாதசாரி பாலம் வழியே நடந்தே இரண்டு நாடுகளுக்கும் போகலாம்.

முக்கியமான விடயம் – இந்த அக்டோபரில் இருந்து கனடாவில் கஞ்சா அடிப்பது குற்றமில்லை. 🙂 அரசே நாடு முழுக்க விற்பனை செய்கிறார்கள்.

இன்னொரு விஷயம் மறந்து விட்டேன், இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து 4 மில்லியன் KW மின்சக்தியும் உற்பத்தி செய்கிறோம்.

niagara-2017-2niagara-2017

 

My first bicycle tour

என் முதல் சைக்கிள் பயணம்

9வது படிக்கும்போது என்று நினைக்கிறேன். சனிக்கிழமை. எண்ணெய் தேய்த்துக் குளித்து பத்து இட்லி தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டுக்குக் கிளம்பினேன். “மதியம் உனக்குப் பிடிச்ச சின்ன வெங்காயக்கறி, சீக்கிரம் சாப்பிட வாடா” என்ற அம்மாவின் குரல் எழும்பி, தேயுமுன், பாதி சந்து கடந்துவிட்டேன். பென்சனர் தெரு பெருமாள் அண்ணன் கடையில் ஒரு மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு மேற்கு ரத வீதிக்குப் பறந்தேன்.

மாரிமுத்து எனக்கு ஒரு ஆண்டு மூத்தவன், ஆனால் ஓர் ஆண்டை கோட்டைவிட்டு என்னுடன் படித்தான். அப்பாவுடன் பள்ளிக்கு வந்த என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்து, பின் நண்பன் ஆனவன். முன்கோபி, முரடன். பீடி, சிகரெட் பழக்கம் உண்டு. சாப்பிடாமல் உயிர் வாழும் வித்தை தெரிந்தவன். நாங்கள் இருவரும் எதிர் எதிர் துருவங்கள். எப்படியோ நட்பு மலர்ந்தது. அவன் வீட்டுக்குத்தான் போனேன், கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தான். மூவரும் சேர்ந்து மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும் குமரன் பூங்காவில் உட்கார்ந்து நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டிருந்தோம். எப்பவும் போல, நான் ஏன் குண்டாக மாட்டேங்குறேன் என்று புலம்பினேன். “தொத்தக்குண்டி” என்ற பட்டப்பெயரில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொண்டிருந்தேன்.

மீசைய முறுக்கி யோசித்த மாரி, டக்குனு எந்துருச்சு “வாங்கடா போவோம்”னான். எங்கடான்னு கேட்ட கேள்விக்கு பதிலே இல்லை. போகும் வழியில் இன்னும் மூணு பேர் சேர்ந்து கொண்டார்கள். மூணு சைக்கிள்களில் ஆறு பேர் வக்கம்பட்டி போய்ச் சேர்ந்தோம். மாரிமுத்து மட்டும் ஊருக்குள் போய், சுப்புராஜை கூட்டி வந்தான். அவங்க தோட்டத்துக்கு போனோம். மோட்டார் ரூமில், தென்னை, பனை ஓலைகளுக்கு கீழே இருந்து சின்ன சின்ன பானைகளை வெளியே எடுத்தார்கள். ஒரு பானையை எடுத்து குடித்துக்கொண்டே, என்னையும் குடிக்கச்சொன்னான். என்னடா இது என்று பயந்து கொண்டே கேட்டேன். ஒரு மரத்துக்கள்ளுடா, தினம் குடிச்சேன்ன குண்டாகலாம்-ன்னான். நானும் கிருஷ்ணமூர்த்தியும் தொடவில்லை. வெளியே வந்துவிட்டோம். மீதி ஆறுபேரும் ஒரு மாதிரியா வெளியே வந்தார்கள்.

அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பார் என்று நான் சொல்ல சொல்ல கேட்காமல் எட்டு பேர் நான்கு மிதிவண்டிகளில் காமராஜர் நீர்த்தேக்கம் போனோம். மூவர் நீந்தினர், மூவர் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தோம். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான படகை அவிழ்த்துவிட்டு, எல்லோரும் ஏறி காற்றில் படகு நகர தொடங்கினபிறகுதான் பார்த்தோம், படகில் துடுப்பு இல்லை. எல்லோரும் கத்த, நான் அழ ஆரம்பித்தேன். சாப்பிட போன வாட்ச்மேன் திரும்பி வந்து, எங்களையும் படகையும் இழுத்து கரைசேர்த்து, ஆளுக்கு ஒரு அப்பு அப்பி, சைக்கிள் காற்றையும் பிடுங்கி விரட்டி விட்டார்.

பசிக்க ஆரம்பித்தது. கையில் இருந்த காசைப் போட்டு, ஒரு கிராமத்து டீக்கடையில் வடையும் டீயும் சாப்பிட்டோம். மறுபடியும் தெம்பு வந்தது. அவரிடம் பம்பு வாங்கி காற்று அடித்தோம். அங்கிருந்து கோபிநாதசாமி கோவில் போனோம்.  மலைமேல் ஏறி சாமி கும்பிட்டோம். மாடு கன்னு போட்டவுடன் முதல் பால் (சீம்பால் முடிந்த பிறகு) இங்குதான் கொண்டு வந்து கண்ணனுக்கு பூசை செய்வார்கள். பூசாரியிடம் தேங்காயும் பாலும் வாங்கி சாப்பிட்டோம்.

வீடு வந்து சேரும்போது இரவு ஏழு, எட்டு மணி இருக்கும். வீடே ரெண்டு பட்டது, அம்மாவிடம் கிள்ளு, அக்காக்களிடம் திட்டு, இரவு வீட்டுக்கு வந்த அப்பா, உரம் வாய்ந்த கையால் (இடது கை) ஓங்கி ஒரு அறைவிட்டார். சுருண்டு போய் விழுந்தேன். அம்மா ஓடிவந்து குறுக்கே விழுந்து அழுக, அக்கா, தங்கைகள் கதற, அடித்த அப்பாவும் அழுதார் – காரணம் ஐந்து சகோதரிகள், நான் ஒற்றை ஆண் பிள்ளை.

நான் திரும்பி வரும் வரை யாருமே சாப்பிடவில்லை. குழம்பை சுடவைத்து சோற்றில் பிசைந்து அப்பா எனக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டுத் தான் சாப்பிட்டார்.

ஏறக்குறைய ஒரு வருடம் அந்த அடி மறக்கவில்லை, பிறகு மறுபடியும் வாங்கினேன்..ஏன் ?

குறிப்பு: கதை பழைய கதை, ஆனால் இன்றும் பார்க்க வேண்டிய இடங்கள் இவை இரண்டும் – காமராஜர் அணை, கோபிநாதசாமி கோவில் மலை.
இன்னும் நேரம் இருந்தால், சிறுமலை, பாச்சலூர் பன்றிமலை அனைத்தும் பார்க்க வேண்டிய இடங்கள்.my first cycle trip

Western Karnataka

எதையும் செய்வாள் பத்தினி…
 
Excess Baggage (நான், மகன்கள்) உடன் வராமல் தனியாக போய்வா, உலகம் பார், அனுபவி என்று அடிக்கடி சொல்வேன். பத்துக்கு ஒன்பது முறை கேட்க மாட்டாள்.
அப்படியே போனாலும் நேராக சென்னை, திண்டுக்கல், மதுரை, சங்கரன்கோவில் போய்விட்டு ஆட்டவா திரும்பிவிடுவாள்.
இம்முறை சென்றாள், வென்றாள், வந்தாள் – மேலைக் கருநாடகம்.
மங்களுரு மற்றும் அதைச் சார்ந்த கடல், மலை சார்ந்த ஊர்கள்.
சமணம் தழைத்தோங்கிய இடங்கள்.
இந்த பயணத்திட்டம் உங்களுக்கும் உதவலாம்.
Day 1
Arrive Mangalore airport. Kateel Travel driver picks you from airport and drive to Agumbe.
On the way stop at Karkala Church.
Visit 3 falls and sunset point in Agumbe.
Stay overnight in Agumbe Lodge
———————————————————————–
Day 2
Spend morning in Agumbe and leave around noon
Drive to Kollur Mookambika temple and then to Murudeshwar temple and beach.
Stay overnight at Murudeshwar RNS Residency
————————————————————————
Day 3
After breakfast, drive to Jog Falls and vicinity
Then go to Gokarna beach resort
Stay overnight at Gokarna Resort
————————————————————————-
Day 4
Drive back to Udipi
Visit Sri Krishna temple
Back to Mangalore
—————————————————————————IMG_20180826_134406IMG_20180826_134512IMG_20180826_135841IMG_20180826_140241-editIMG_20180826_140446-suguIMG_20180826_144000IMG_20180826_144017IMG_20180826_144021IMG_20180826_144859IMG_20180826_144859-editedIMG_20180826_144954IMG_20180826_151951IMG_20180826_152007IMG_20180826_152521IMG_20180826_153249IMG_20180827_100646IMG_20180827_114215IMG_20180827_114250IMG_20180827_144138IMG_20180827_144152IMG_20180827_155853IMG_20180827_174034IMG_20180827_174058IMG_20180827_175923IMG_20180827_175929IMG_20180827_180018IMG_20180827_180113IMG_20180827_180121IMG_20180827_180136IMG_20180827_181746IMG_20180827_185121IMG_20180827_185201IMG_20180827_201102IMG_20180827_201712IMG_20180828_064934IMG_20180828_114834IMG_20180828_115051IMG_20180828_121914IMG_20180828_171111IMG_20180828_171423IMG_20180828_171432IMG_20180828_171611-editIMG_20180828_171748IMG_20180828_171824IMG_20180828_172324IMG_20180828_172416IMG_20180828_172459IMG_20180828_172719IMG_20180828_181209IMG_20180829_085329IMG_20180829_085542IMG_20180829_085713IMG_20180829_085846IMG_20180829_151854IMG_20180830_110941IMG_20180831_100505Karnataka Trip
Day 5
Visit Venur and Dharmastala.
Drive back to Mangalore airport before 12 noon.
Drop at airport 1PM
—————————————————————————-
Latha loved this trip and I am sure you would do too.

Rubiny, Rubiny, We Love You Rubiny

Rubiny - Bharath Wedding

Rubiny, Rubiny, We Love You, Rubiny

ஜெயந்தி நவநீ பொண்ணு நீ ரூபினி
செல்லத்தங்கை வைஷுவுக்கு அக்காநீ
நெல்லை விட்டு சென்னை வந்த சிட்டு நீ
கணினி துறையில் பட்டம் பெற்ற சமத்து நீ

படிச்சஉடனே பணியில் சேர்ந்த கில்லாடி
பாத்தஉடனே புடிச்சுப் போகும் பொண்ணு நீ – பரத்துக்கு
பாத்தஉடனே புடிச்சுப் போகும் பொண்ணு நீ – நாம எல்லோருக்கும்
பாத்தஉடனே புடிச்சுப் போகும் பொண்ணு நீ

அடையாறில் அன்றிரவில் மின்னல்மழைமோகினி
கொட்டு மழையில் குடை பிடித்த வள்ளல்நீ
ரூபினி
கலகலன்னு பேசி என்னைக் கவர்ந்துவிட்ட ரூபினி
உரையாடல், உறவாடல், உலகெங்கும் நட்பாடல்
இயல்பாக வரப்பெற்ற (வரம்பெற்ற) ரூபினி

கண்டம் விட்டு கண்டம் தாவும் கன்னிநீ ரூபினி
ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா
கண்டம் விட்டு கண்டம் தாவும் கன்னிநீ
படிக்கப் போன சிகாகோ, பணிக்குப் போன ஒமாஹா
பார்க்கவந்த ஆட்டவா, எங்களைப் பார்க்கவந்த ஆட்டவா

என்றும் எங்கள் வாழ்வில்ஒரு அங்கம்நீ ரூபினி
அதுக்காக சொத்தில் பங்கு கேட்காதே, தரமாட்டேன் ரூபினி

கண்டம் விட்டு கண்டம் போயி கண்டெடுத்த பிரசன்னா – பரத் பிரசன்னா
அண்டம் புகழும் வண்ணம் உனைக் காத்திடுவார்
சொல்லவே வேணாம், யாரும் சொல்லவே வேணாம்

எங்கள் வாழ்த்து என்றும் உண்டு ரூபினி
சீக்கிரம், பொண்ணு ஒண்ணு பெத்துக்கொடு ரூபினி

அன்புடன் முருகானந்தன்                       23 ஆகஸ்ட் 2018

Ottawa Tamil Sangam – October 2018

ஐப்பசி அதிரடி

பார்த்து, பங்கு கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி எழுதுவது சுலபம்,,
போகாமலேயே நம் தமிழ்ச்சங்கத்தின் விளக்குத் திருவிழா, தீப ஒளித்திருவிழா பற்றி,,,,

கனிவுடன் (காசு வாங்கிக்கொண்டு  ) வாங்க வாங்கவெனச் சொல்லும் வரவேற்புக் குழுவினர்,

கல கலவெனச் சிரிப்பைச் சிந்தும் சிறார்கள்,

பூவும் பட்டும் பொட்டுமாக நம் குலப் பெண்கள்,

நுனிநாக்கில் ஆங்கிலம் இருந்தாலும், நினைவெல்லாம் தமிழாக நம் ஆண்கள்,

தமிழ்த்தாய் வாழ்த்து, முதல்வனுக்கு மரியாதை,

அடுக்கு மல்லியாக அடுத்தடுத்து ஆட்டம், பாட்டம், நடனம், நாடகம், வித்தை, விவாதம், சிரிப்பு, கூத்து, கும்மாளம்,

இடையே வயிற்றுக்கும் கொஞ்சம் தீனி, பானம்,

தொடர்ந்து துள்ளல், கலக்கல், அமர்க்களம், ஆர்ப்பாட்டம்,

வயிறு நிறைய சுவையான உணவு, மனது நிறைய உபசரிப்பு,,,

மொத்தத்தில் ,,,,

தவழ்ந்து கொண்டிருந்த தமிழ்ச்சங்கம், தளிர் நடை நடந்து, தாவிக் குதிப்பதைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி…

மேலும் வளர வாழ்த்துக்கள்

அறிஞர்களையும், கலைஞர்களையும் நம் ஊருக்கும் வரவேற்று அடுத்த இலக்கு நோக்கி நகர வேண்டும் என்ற கோரிக்கையுடன்

ஆனந்த் (முருகானந்தன்)

96 Movie

96

நாய்க்குட்டி விட்டுவிட்டு நான்எங்கும் வரமாட்டேன் என்றவனை,
என்னவள் கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்ற படம் 96

சலங்கை ஒலிக்குப் பிறகு என்னை சலனப்படுத்தி, சஞ்சலப் படுத்தி, என்மனதில் சூறாவளி ஏற்படுத்திய காதல் காவியம்.

காதலின் சுகத்தையும், சுகந்தத்தையும், சோகத்தையும்,
மெல்லிய அதிர்வுகளையும், ஏக்கத்தையும்,
தாகத்தையும், தாபத்தையும், தயக்கத்தையும், தடுமாற்றத்தையும், தடமாற்றத்தயும், தவறான புரிதல்களையும்,
காட்சிக்கு காட்சி நம்மேல் அள்ளித்தெளிக்கும் படம் 96

கற்பனைக்காதல் என்னைஎன்ன செய்யும் என்று நினைத்தேன்.
காதல் எதுவும் செய்யும் என்று புரிந்துகொண்டேன்.
கைகூடாக்காதலின் வலி நெஞ்சில் பாறையாய் கனக்கிறது – இன்னும்.

ராம் என்கிற ராமச்சந்திரனாக விஜய் சேதுபதி,
ஜானு என்கிற ஜானகியாக த்ரிஷா,
படம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள், விசுவரூபம் எடுத்திருக்கிறார்கள்,

சின்ன வயசு ஜானகி, ராமச்சந்திரனாக கௌரியும், ஆதித்யாவும் அசத்தியிருக்கிறார்கள்.

கலகலப்புக்கு தேவதர்ஷினி, அவர் மகள் நியாதி ஜானுவுக்கு தோழியாக ஜமாய்திருக்கிறார்கள்.

சிரிக்க வைக்க பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்.

குறைவான நேரமே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கும் ஜனகராஜ், கவிதாலயா கிருஷ்ணன்.

படம் முழுக்க காதை உறுத்தாத இசை, கவிதை மழை,
இளகிய மனங்கள், ஈரச்சாலைகள்.

பயணக்கட்டுரை புகைப்படக்கலைஞராக விஜய் சேதுபதி ஊர் ஊராக (நாடு நாடாக) நம்மையும் இழுத்துச் செல்கிறார்.
தஞ்சையில் தான் படித்த பள்ளிக்குள் செல்லும்போது பழைய நினைவுகளில் ஆழ்ந்து, 1996க்கு கூட்டிச் செல்கிறார்.
கள்ளமில்லா பள்ளிக்காதலை புதிய பரிமாணத்துடன் படைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். (இவருக்கு இது முதல் படம்)

பிரிவுக்கு முன்பும் பின்பும் முத்தமில்லை, சத்தமில்லை, கட்டிப்பிடிக்கவில்லை, காதலியை யாரும் கடத்தவில்லை,
யாரும் யாரோடும் ஓடவில்லை, தடுக்கவில்லை,
வெட்டில்லை, குத்தில்லை – மாறாக

அன்பு, பாசம், காதல், நட்பு கலந்த மெல்லிய உணர்வுகள் தென்றலாக வீசுகின்றன, நம்மைத் தொட்டுத்தடவி தாலாட்டிச் செல்கின்றன,
சேதி ஒன்றை சொல்கின்றன – “காதல் அழிவதில்லை, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்” என்று.

கன்னத்தில் குழிவிழ, கண்களாலும் சிரிக்கும் ஜானுவைக் கண்டால் எந்தப் பையனுக்குதான் காதல் வராது? ராம் ஈர்க்கப்பட்டது இயல்புதானே,

உள்ளம் சொல்வதை உதடுகள் சொல்லவில்லை – விளைவு?
படத்தை பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.

22 ஆண்டுகளுக்குப் பின், பிரிந்த பள்ளித் தோழர், தோழியர் மீண்டும் சந்திக்கின்றனர். பாசமும், பரிகாசமும் அலை அலையாக எழும்பி நம்மீதும் கொஞ்சம் தெறிக்கிறது.

ஜானுவும் (த்ரிஷா) வருகிறாள்…

வந்த நொடி முதல் விடைபெறும் வினாடி வரை பத்தோடு பதினொன்றாக பாதிஉடை அணிந்து ஆடமட்டும் வரும் அழகுபொம்மை தானில்லை என்று நிரூபித்திருக்கிறார்.
பார்வையில், பேச்சில், நடையில், நடத்தையில் கனிவையும், கண்ணியத்தையும் கலந்து கொட்டியிருக்கிறார்.
வரம்பு மீறாக் காதலை வரைந்து காட்டிச்சென்றார்

என்ன நடந்தது, ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்று ஒவ்வொரு முடிச்சாக திரையில் அவிழ அவிழ, நம் இதய நாளங்கள் முறுக்கிக்கொள்கின்றன, கண்கள் குளமாகின்றன.

த்ரிஷா “நான் உன்னைப் பார்க்கலடா”ன்னு சொல்லி குளிலறைக்குக்குள் ஓடி குமுறிக்குமுறி அழுகையில், நமக்குள்ளும் எதோ ஒன்று உடைந்து சிதறுவதை உணர முடியும்.

நெகிழ வைக்கும் தருணங்கள், நெஞ்சை உருக வைக்கும், உறைய வைக்கும்.
அவள் பசி என்றவுடன் அவன் உணவு கொண்டு வருவது, அவன் பசிக்கு அவள் சமைத்து தருவது, “எங்க இருக்க ராம்” என்ற கேள்விக்கு “நீ என்னை எங்கே விட்டுச் சென்றாயோ, அங்கேயேதான்” என்று இரு பொருள்பட சொல்வது.
அவனுக்குப் பிடித்த பாடலை அவனுக்காக, அவனுக்காக மட்டும் அரை இருட்டில் பாடுவது.

படம் முடிந்த பின்பும் அரங்கை விட்டு அகல எனக்கு மனமில்லை.
மூன்று நாட்களாக உறக்கமில்லை. இந்தப்பிறப்பில் கொடுப்பினை இல்லை.
அடுத்த பிறப்பிலாவது காதலிக்கவேண்டும்

அதுவரை காத்திருக்கும் ஆனந்த்.

96

Full Fat Omlette

Ok, Let us have some big fat omlette

Ingredients:
Eggs – 6
Cheese (Cheddar or Mozzarella or mixed) – 6 Tbsp
Mushrooms – 2 big (slice into small pieces)
Full fat cream – 6 Tbsp
Sundried tomato – 3 Tbsp (slice into small pieces)
Green onions – 2 sprigs (slice into small pieces)
Basil leaves – 12 (or Coriander or Curry leaves)
Salt, Pepper, Chili Powder, Garam Masala – to taste
Butter – 1 Tbsp

Method:
Break open the eggs, beat them up with rest of the ingredients except butter.
Take a baking pan, coat it with melted butter, pour the egg mixture, bake for 30 minutes at 350 degree F. You can also pressure cook or slow-cook on a pan over stove but at very low heat, covered.

Enjoy with your better half

 

IMG_20180624_083537IMG_20180624_091303IMG_20180624_091836

Fish Cutlet

மீன் கட்லெட்

சைவம்(வங்காளத்தில் மட்டும்)
 
எங்கும் மீன் மயம்
 
மூணு பக்கம் கடலு
நாடெங்கும் குளம், ஏரி, ஆறு
வகை வகையா மீனு
பின்ன விடுவேனா நானு
 
தேவையான பொருட்கள்:
முள்ளில்லாத, சமைத்த மீன் – 400 கிராம் (Tuna)
முட்டை – 2
தயிர் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
மல்லித் தழை – கொஞ்சம்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது – கொஞ்சம்
 
செய்முறை:
வெந்த மீனை நல்லா தூள் தூளா உதிரி உதிரியா பொடி பொடியா ஆக்கிங்க 🙂
 
ரெண்டு முட்டைய அடிச்சு உள்ளே ஊத்துங்க
வெங்காயம், மிளகாய், மல்லி சின்ன சின்னதா வெட்டி போடுங்க
 
தயிரையும் விழுதையும் போட்டு எல்லாத்தையும் நல்லா பிசைஞ்சு என்ன வடிவில் வேண்டுமோ உருட்டி, தட்டி தயார் செய்து கொள்ளுங்க
 
சட்டி சுட்டவுடன் தட்டி வச்ச வட்டங்களை
எண்ணெய் ஊத்தி ரெண்டு பக்கமும் சுட்டு எடுங்க
 
பாவம் வீட்டுக்காரம்மா, அவங்களுக்கும் ஒண்ணு ரெண்டு கொடுத்துட்டு மீதி எல்லாம் நீங்க சாப்பிடுங்க,,,சரியா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Fish Cutlet

Ingredients:
Cooked Tuna – 400 gms
Eggs – 2
Yoghurt – 1 tbsp
Onion – 1
Green Chilli – 1
Coriander – 3 sprigs
Salt – to taste
Ginger Garlic paste – to taste

Method:
Shred the Tuna or any steamed fish, beat the eggs, add to the tuna. Throw in the yoghurt and some salt, mix them well.

In a pan, add olive or coconut oil, stir fry the finely sliced onion and green chilli in high heat, add ginger garlic paste, any spice to your taste, take it off the pan, let it cool down for 5 minutes. Add to the tuna mixture, mix them well, shape them into cutlet patties, pan fry both sides and serve with raita and / or gooseberry pickle (homemade).

IMG_20180519_180607IMG_20180519_182947IMG_20180519_183003

Buttery Basa

Buttery Basa on a bed of Arugula

மீஈஈஈன் !

எப்ப பார்த்தாலும் மிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள் தானா என்று புலம்புவர்களுக்காக 

 

Buttery Basa

தேவையான பொருட்கள்:
முள்ளில்லாத மீன் – 1/2 கிலோ
வெண்ணை – 30 கிராம்
வெள்ளைப்பூண்டு – 5 பல்
மிளகுத் தூள் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
எலுமிச்சை – 1

செய்முறை:

வெண்ணெயை உருக்கி, மிகமிகப் பொடியாக துருவிய பூண்டை சேர்த்து, எலுமிச்சை சாரை பிழிந்து விட்டு, மிளகு, உப்பு போட்டு, மீன் துண்டுகளை ஊறவிட்டு, பிறகு
அவனிலும் சமைக்கலாம், அடுப்பிலும் சமைக்கலாம், தணலிலும் சுடலாம், தண்ணியிலும் வேகவைக்கலாம் – “நா” சொல்படி “நாம்” கேட்போம்.

நான் மின்னடுப்பில் (Oven) 350 degree F முதலில் 30 நிமிடம் (Bake Mode), 500 degree F (Broil Mode) 10 நிமிடம் வைத்தேன்.

Buttery Basa was on a bed of Arugula