Category Archives: Food

Methi Paneer

கடைலே வாங்குன பனீரும், காஞ்ச வெந்தயக்கீரையும்

தேவையான பொருட்கள்:
பனீர் – 200 கிராம்
இதழ், இதழாய் வெட்டிய வெங்காயம் – 1
கலர் கலராய் குடமிளகாய் – 200 கிராம்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப
மிருதுவாக்க, ஊறவைக்க தயிர் – 4 மேசைக்கரண்டி
சுவைகூட்ட, காய்ந்த வெந்தயக்கீரை – கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:
மனைவி சொன்னப்ப கேட்கவில்லை, ஆனால் ஒரு நாய்க்குட்டி என்னை முகநூல் பக்கமே வரவிட மாட்டேங்குது,,,என்ன செய்யறது, சொல்லுங்க,,,,
புது வருஷத்தின் முதல் பதிவு,,,அனைவருக்கும் வணக்கம்,,,
மின்னல் வேகத்தில் கலக்கலான ஒரு பனீர் வதக்கல்

பொடிகளுடன் தயிர் சேர்த்து, பனீரை ஒரு அரைமணி நேரம் ஊறவச்சு,
காய்ஞ்ச எண்ணைலே சோம்ப வதக்கிக்கிட்டு,
பொறவு குடமிளகாய் வெங்காயம் போட்டு பொரட்டிக்கிட்டு, பாதி வெந்தவுடன், ஊறவச்ச பனீரை சேர்த்து கிண்டி விட்டு,
கடைசிலே காய்ஞ்ச வெந்தயக்கீரை தூவி இறக்கி வச்சு,
முகநூலில் ஊர்பார்க்க படமும் எடுத்துக்கிட்டு,
பொறந்த வீடு போனவளை மனதுக்குள் திட்டிவிட்டு
——?????? அப்புறம் என்னா செஞ்சேன்னு ஒன்னையாவது நீங்க சொல்லுங்க,,,சரியா?

IMG_20180125_192320IMG_20180125_192325

Advertisements

Almond Cake

Almond Cake

Ingredients:
Almond Flour (blanched) – 1 cup (250 ml)
Organic coconut flower – 1/2 cup (125 ml)
Baking Powder – 1/2 tsp
Salt – 1/4 tsp
Ground Cardamom – one pinch

Melted butter – 1/2 cup (125 ml)
Eggs – 3 (4 if you like it softer and eggy)
Honey or Maple Syrup – 1/2 cup (125 ml)
Vanilla Essence – 1tbsp

Method:
Set the oven at 375 degrees F (bake) and fire up.
Beat the eggs very well, add in the melter butter, beat again, add honey and essence and beat again.
Make sure there are no course lumps in the almond or coconut flour, use a sieve if needed. Mix the dry ingredients thoroughly with a fork or spoon and add it to the beaten egg mixture and mix well.

Line the cake pan with parchment paper, generously apply melted butter, pour in the cake mix, flatten it with a spatula, sprinkle sliced almonds or cashews on the top to garnish, pop it in the oven and bake to a golden brown. Use a toothpick or fork to test the cake is well done. (should come out clean when poked and taken out).

Let the cake cool down and cook to perfection on the countertop and serve it with your favourite wine or coffee or tea.

Shrimp Sizzler

இறால் வறுவல் (அண்ணாநகர் அம்மா, அமெரிக்கா மகள்)

தேவையான பொருட்கள் >>>
கடலில் பிடித்த இறால் – நானூறு கிராம் (பண்ணையில் வளர்த்தது வேண்டாமே)
மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சப்பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை கொத்து – 1
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை >>> முன்பெல்லாம் ஊருக்கு ஒருவர் வெளிநாட்டில், பிறகு தெருவுக்கு ஒருவர், ஆனால் இப்ப குடும்பத்துக்கு ஒருவர். நீங்கள் அனைவருமே கண்டு, கேட்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இது,,,

தொலைபேசி மணி அடிக்கிறது.
TVயின் வால்யூமைக் குறைத்துவிட்டு,

சுந்தரி: ஹலோஓஓஓ யார் பேசறது?
சுமதி: அம்மா நான்தான், உன்கிட்டே வேறயார் பேசப்போறா?

சுந்தரி: சொல்லு, சொல்லு ஏதாவது விசேஷமா?
சுமதி: ம்ம்ம், எப்பபார்த்தாலும் இதே கேள்வி! வேற நினைப்பே இல்லையா உனக்கு? உன் மாப்பிள்ளை இறால் சமைக்க சொல்லிட்டு ஜிம் போயிருக்காரு. சீக்கிரம் சொல்லு எப்படி செய்யறது?

சுந்தரி: காலேஜ் படிக்கேலே, கூடமாட ஒத்தாசை பண்ணு, புருஷன் வீட்டுலே போனா என்னா செய்வேன்னு கேட்டா, “சமையல்காரனை கட்டுவேன், ஹோட்டல்காரனை கட்டுவேன்” ன்னு என்கிட்டே சண்டை போட்டே. இப்ப அமெரிக்காவில் போய் இருந்துகிட்டு இது எப்படி செய்யிறது, அது எப்படி செய்யிறதுன்னு அனத்து! மகதான் அப்படின்னா, அப்பா அதைவிட மோசம், ஒரு நாள் நான் படுத்துக்கிட்டா குடிக்க சுடுதண்ணி காயவச்சு தரத்தெரியாது.
சுமதி: அம்மா, சுத்து வேலைக்கு மூணு பேரு, சொகுசு காரு, ஏசி ரூமு, வாராவாரம் விருந்து, நினைச்சா புடவை, இதெல்லாம் செய்யறது யாரு, எங்க அப்பா, சுடுதண்ணி வேணுமா உனக்கு – உன் புலம்பல அப்புறம் வச்சுக்குவோம்,,இப்ப சீக்கிரம் சொல்லு..

சுந்தரி: சொல்றேண்டி, கத்தாதே,,,இறால சுத்தமா கழுவி, மிளகாய்ப்பொடி, மஞ்சப்பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலந்து ஒரு அரைமணிநேரம் ஊறவச்சு, வடச்சட்டி காய்ஞ்சவுடன், தேங்காய்எண்ணெய் ஊத்தி, கருவேப்பிலை போட்டு பொரிஞ்சவுடன், ஊறவச்ச இறால போட்டு நல்லா வதக்கி, பொடி வாசம் போனவுடன் இறக்கு. அவ்வளவுதான்…
சுமதி: இதுதான் எனக்கு தெரியுமே,,,சரி போனை வையி…நான் சமைக்கணும்.

சுந்தரி: செஞ்சுட்டு போட்டோ எடுத்து அனுப்பு,,,மாப்பிள்ளைய கேட்டதா சொல்லு…
சுமதி: சரிம்மா, நீ அப்பாவை பாத்துக்கோ, “பிக் பாஸ்” பாத்துக்கிட்டே இருக்காத,….bye

 

 

Bell Pepper Masala

குடமிளகாய் மசாலா

தேவையான பொருட்கள் >>>
குடமிளகாய் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களில் – 1/2 + 1/2 +1/2
பெரிய வெங்காயம் – 1 
ஊறவச்ச பாதாம் – 10
பூண்டு – 2 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
தக்காளி – 2
காய்ந்த வெந்தயக்கீரை – 2 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் (அ) வெண்ணெய் – 4 மேசைக்கரண்டி

செய்முறை >>>
கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? அதுமாதிரி வெந்தயக்கீரை காய்ந்தாலும் மனமும் சுவையும் குறைவதில்லை.

மூன்று நிற குடமிளகாய், முழுசா ஒரு வெங்காயம்
பெரிசு பெரிசா வெட்டி, வெண்ணையிலே வதக்கி வச்சேன்.

சூடான சட்டியிலே இன்னும் கொஞ்சம் வெண்ணை இட்டு,
பூண்டு, சீரகத்தை தட்டிக் கொஞ்சம் உள்ள போட்டேன்.

அரைச்சு வச்ச தக்காளி, மிளகாய், மல்லி, மசாலா
பச்சை மணம் போகும் வரை பதமா வதக்கிக்கிட்டேன்.

ஊறவச்ச பாதாமை அரைச்சி கொஞ்சம் ஊற்றிவிட்டு,
வதக்கி வச்ச வெங்காயம், குடமிளகாய் பிறகு போட்டேன்.

உப்பு போட்டு ருசி பார்த்து, சுண்ட சுண்ட பிரட்டி விட்டு,
கசூரி மேத்திய (காய்ந்த வெந்தயக்கீரை) கடைசிலே தூவிவிட்டு

கட்டிய பொண்டாட்டிக்கு கால் பங்கு கொடுத்துவிட்டு
மீதியத்தான் நான் தின்னேன்.

IMG_20170815_132147IMG_20170815_132152

Ground Chicken Kabaab

கோழி கொத்துக்கறி கபாப்
#பேலியோ,#கோழி,
 
தேவையான பொருட்கள்:
எலும்பில்லா, தோலில்லா, கொழுப்பு நிறை கோழிக்கறி 400 கிராம்
தண்ணீர் விடாத வெங்காயம் சின்னதாக 1
பச்சை மிளகாய் 2
மிளகாய்ப்பொடி 2 தேக்கரண்டி
மஞ்சப்பொடி 1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி 2 தேக்கரண்டி
மிளகுப்பொடி 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை கொஞசம்
அரைத்த இஞ்சி, பூண்டு 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
 
செய்முறை:
கோழிக்கறியை கொத்தி, பொடுசா நறுக்கிய வெங்காயம், மிளகாயுடன் மற்ற அனைத்து பொருட்களயும் சேர்த்து, நன்றாக கலந்து, பிசைந்து,
2, 3 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து, பிடி கொழுக்கட்டை வடிவில் பிடித்து, இரும்பு கம்பி அல்லது நீரில் நனைத்த மரக்குச்சிகளில் கோர்த்து, கிரில்லில் சுட்டு எடுக்கவும். லெட்டஸ் இலைகளில் பசுமஞ்சள் துண்டுகளுடன் பரிமாறவும்

Cheesy Crispy Chicken Wings (CCC Wings)

Ingredients: Tray full of chicken wings, chilli powder, turmeric powder, black pepper powder, salt, butter, lime juice, coriander leaves, home made hot sauce, parmesan cheese

Method: Marinate the wings in chilli powder, turmeric powder, black pepper powder, salt, melted butter, lime juice for 30 minutes and bake in 375 degrees Fahrenheit for 40 minutes.
Remove the from oven and coat with copious amounts of parmesan cheese, finely chopped green coriander leaves and hot sauce and bake for another 15 minutes.

Final result: Hot and spicy, Garlicky, Cheesy Chicken Wings and your friends, relatives and neighbours will love you forever.

IMG_20170716_120651IMG_20170716_165106

Grilled Chicken

What happened?
Mur(u)ga cooked Murgi ( मुर्गा पकाया मुर्गी )
On the grill

How did it go?
Bought 4 chicken thighs and legs with skin, marinated the thighs in black pepper, full fat yoghurt and salt and legs in chilli and turmeric powder, full fat yoghurt and salt for 4 hours.
Fired up the grill to 350 degree F, grill them all for 40 turning once after 20 minutes. Made sure the internal temperature reached around 125-150 degree F and the murgi cooked all the way to the bones.
Served with yellow bell pepper, radish, cucumber salad.

Did we enjoy it?
Yes every bit of it, except Bheem (our puppy) was upset that I didn’t give him even the bones.

IMG_20170705_190820IMG_20170706_124527IMG_20170704_122247

Paneer Kuruma

பனீர் குருமா
 
தேவையான பொருட்கள் >>> நெய்யில் வறுத்த பனீர், பிடித்தால் காளான்(optional), வெங்காயம், தக்காளி, மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு
அரைக்க – துருவிய தேங்காய், கட்டாயம் கசகசா, 1 மேசைக்கரண்டி சோம்பு, பூண்டு நாலு பல், முந்திரி அல்லது பாதாம் பருப்பு, கொஞ்சம் இஞ்சி, ரெண்டே ரெண்டு மேசைக்கரண்டி முழுக்கொழுப்பு பால் அல்லது கிரீம்,
தாளிக்க கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, தூவி இறக்க கொத்தமல்லி தழை
 
செய்முறை >>> குருமா செய்வது எப்படின்னு உங்களுக்குத்தான் தெரியுமே 😉
 

இந்த ஊர்லே ” Arugula அருகுளா”ன்னு ஒரு கீரை கிடைக்குதுங்க…அதை ஒன்னும் சேர்க்காம, பச்சையா சாப்பிடலாமுங்க..கொஞ்சம் கசக்கும், ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும்…

Coconut Shrimps

Simple Shrimps Version 2

இலகுவான இறால்

இறால் – அரைக்கிலோ
உப்பு, வேதாஸ் மீன் மசாலா, மஞ்சள் பொடி, எலுமிச்சை ரசம், வறுத்த, காய்ந்த தேங்காய்த் துருவல், முட்டை, தேங்காய் எண்ணெய் – உங்கள் விருப்பம்
 
செய்முறை >>>
ஓடோட வாங்கி வந்த இறாலை,
ஒவ்வொன்னா உடச்செடுத்து,
வால் நீக்கி, அழுக்கெடுத்து,
புளிப்புக்கு எலுமிச்சை
ஒரப்புக்கு மீன் மசாலா,
உப்பு, மஞ்சள் உடன் சேர்த்து,
மணி நேரம் ஊற வச்சு,
ஒரு முட்டை அடிச்செடுத்து,
ஒவ்வொன்னா உள்ள முக்கி,
தேங்காயில் புரட்டிக்கிட்டு,
எண்ணெயிலே வறுத்தெடுத்தேன்,
V
V
V
இரு மகன்கள் உண்ட பின்பு,
எனக்கு ஒன்னும் மிஞ்சலியே, 😦

Bedouin Barbecue (Zarb)

குழியில் சுட்ட கறி

தேவையான பொருட்கள்:

கால் ஆடு ( ஆட்டுக்கால் இல்லை, கால் ஆடு, மனசு / காசு இருந்தால் அரை அல்லது முழு ஆடு)
எலுமிச்சை – 3
பூண்டு – 20 பல் (விருப்பமிருந்தால், கிடைத்தால் மட்டும்)
கல் உப்பு – தேவைக்கேற்ப
கடப்பாரை, மண்வெட்டி, சாக்கு ,வெள்ளைத்துணி, தண்ணி, விறகு, அடுப்புக்கரி, ஜிம் பாடி நண்பர் / நண்பி / உறவினர் இருவர்

செய்முறை:

வந்துட்டார்யா, திண்டுக்கல்காரரு,  எப்பப்பார்த்தாலும் “அடுப்பப் பத்த வை, சட்டிய மேல வை, வெங்காயத்த வெட்டிப்போடு, வெள்ளைப்பூண்ட தட்டிப்போடு”-ன்னு எழுதி ஒரே போர் என்று புலம்புவர்களுக்காகவே இந்த உணவு முறை. “பெடூயின்” பழங்குடிகளின் உணவுகளில் ஒன்று.   இந்த சமையலை நான் கண்டு, கலந்து கொண்டு, முதலில் பயந்து, பின் ரசித்து உண்டது ரியாத், சவூதி அரேபியாவில் 1984 முதல் 86 வரை (படம் 1).  கடைசியாக ஜெர்மனியில் 89-இல் ஒருமுறை (படம் 2). அப்புறம் என்னாச்சின்னு கேக்குறீங்களா? கல்யாணம் ஆச்சு, அத்தோட, இந்த மாதிரி ஆதிவாசி உணவு முறைக்கு பெரிய முற்றுப்புள்ளி வச்சுட்டாங்க வீட்டுக்காரம்மா 😦 . இப்ப செல்வன் கொடுக்கும் தைரியத்தில் கோடையில் மறுபடியும் குழி தோண்டி சமைக்கப்போறேன்.

வீட்டுக்கு முன்னே, பின்னே இடம் இருப்பவர்களுக்கான சமையல் முறை இது. தோட்டம், காடு, கரம்பு, வயல், பண்ணை இருந்தாலும் சரிதான். அப்ப, அடுக்கு மாடி வீடுகளில் வசிக்கும் மத்தவங்க என்னா செய்யறதுன்னு கேக்குறீங்களா? கல்யாண வயசுலே பொண்ணு, பையன் இருந்தால் அவங்க கூட சம்பந்தம் பண்ணிக்கோங்க, இல்லையா, அவங்களோட “நண்பன்டா” அளவுக்கு ஆயிருங்க 😉

ஓகே, ரெடியா?

This method has many variations perfected over years by several countries and cultures, starting from the primitive Bedouin method to most advanced present day backyard cooking using modern equipment and tools.

பக்கத்துலே கோனார் “கிடை” போட்டிருந்தார்னா, வெள்ளாட்டுக்குட்டி ஒன்னு வாங்கி (வாங்கிட்டு வாங்க, தூக்கிட்டு வரச்சொல்லலே), களத்தூர் கபூர் பாய் அல்லது பேகம்பூர் பஷீர் பாய வரச்சொல்லி “பிஸ்மில்லாஹ்” சொல்லி அறுத்து வாங்கி, கொம்பு, குளம்பு, தோலு, வாலு வுட்டுட்டு, பெரிய பெரிய துண்டா போட்டு, நிறைய உப்பு, எலுமிச்சைச்சாறு தடவி, அங்கங்கே கீறி, தட்டிய பூண்ட உள்ளே சொருகி ஊறவையுங்க.
வடிஞ்ச ரத்தத்தை வாளிலே புடிச்சு நம்ம சுஜாதா, தேன்மொழி தங்கசிகிட்டே கொடுத்தீங்கன்னா கார சாரம பொரிச்சு கொடுத்துருவாங்க.
நம்ம ஜிம்பாடி நண்பர்களை அனுப்பி, வீட்டுக்கு வெளியே இரண்டு அடிக்கு இரண்டு அடி அளவில், மூன்று அடி ஆழத்தில் குழி தோண்டி, மண் சரியாமல் களிமண் அல்லது தீச்செங்கல் (Refractory bricks) வைத்து பூசி, காய்ந்தவுடன், விறகு அல்லது கரி போட்டு எரித்து கண கணவென்று கங்கு (தணல்) வர வைத்துக்கொள்ளுங்கள்.
ஈரச்சாக்கின் மீது வெள்ளைத்துணி விரித்து, பெரிய பெரிய கறித்துண்டுகளை வைத்து மூடி (இங்கதான் ஒரு டுவிஸ்ட் – சோறு சாப்பிடுறவங்களும் விருந்துக்கு வருவாங்கதானே, அதுனாலே கறி, ஊறவச்ச அரிசி, உலர் திராட்சை, வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ஞ்ச எலுமிச்சை, குங்குமப்பூ கரைச்ச தண்ணி, மறுபடியும் கறி; அடுக்கு பிரியாணி மாதிரி அடுக்குங்க), குழிக்குள் தணலின் மேல் இறக்குங்க. (செங்கல் வைத்து கட்டிய குழி இருந்தால் முழு ஆட்டை நாலா வகுந்து கொக்கியில் மாட்டி தொங்கவிட்டு சுட்டு எடுத்தால் இன்னும் சுவை).
குழியை தகரம், இரும்பு, அலுமினியம் மூடி இருந்தால் மூடலாம், மேலே மறுபடியும் தம்முக்கு தணல் போடலாம். மணல் போட்டு மூடுங்க. தண்ணீரை தெளிச்சு விடுங்க. ரெண்டு, மூணு மணி நேரம் ஆகுங்க. அதுவரை விருந்துக்கு வந்த அண்ணன், தம்பி, மாமன், மச்சான், மதினி, கொழுந்தியா எல்லோருடனும் ஜாலியா அரட்டை அடிங்க. (வரதட்சணை பாக்கி பத்தி பேசி சண்டை இழுத்துறாதீங்க.)

சுடுமனலை தள்ளிட்டு, கை காலை சுட்டுக்காம, மூட்டைய வெளிய எடுத்து, சாக்கை திறந்து, பிறகு வெள்ளைத்துணியை பிரிச்சு பாருங்க. வாசம் பக்கத்துக்கு ஊரைக்கூட்டும். அப்புறமென்ன, கறித்துண்டுகளை நாம சாப்டுவோம், சோறை சொந்தகாரங்களுக்கு போடுவோம்.

பிரிஞ்ச சொந்தம், நட்பு மறுபடியும் சேருங்க, என்னா நான் சொல்றது சரிதானே?
lamb-riyadh-19831989 Syed Laqta Germany