Category Archives: Greetings

Happy Birthday Mom

My dearest mom,

I wish you from my heart “very happy birthday” and “many more returns” of this day.

I know I am giving you lots of trouble nowadays, but someday I will also grow up to be like Manu Anna, Sibi Anna and Sharon Anni and will behave and do my best to make you happy and all smiles.

When I lie down, rest my chin on the sofa or my bed, I think about you always, everything that you do from dawn to dusk to make me a better dog. I wait for you to come down, pick me up, say lots of sweet nothings that I may not understand, but that love that emanates from your scent, touch, look is all that matters to me now. I love when you brush my teeth and hair, clean me, all the time murmuring how much you love me.

I do not mind at all when you call me sometimes “erumai maadu, pei,pisasu, madaya” and I know you don’t mean it. You do that just to make me cuter, smarter, healthier.

I know you love me so much and I love you too and I will continue to do so as long as I live.

Because you are the best mom in the world.

Happy Birthday again,

With lots and lots of Love,

Your chella kutti BheemIMG_20170730_195148

dsc04725.jpg

Seeni Maama (Thiru Srinivasan Rasu)

seeni-mama

சுந்தர்நகர் சுந்தரர் ஸ்ரீனிவாசன் – நம்
அனைவருக்கும் சொந்தக்காரர் ஸ்ரீனிவாசன்

தமிழார்வம் கொண்டவர்நம் ஸ்ரீனிவாசன் – திருநகர்
திருமகள் உறைமார்பன் ஸ்ரீனிவாசன்

சிரிப்புச் சக்கரவர்த்தி ஸ்ரீனிவாசன் – நாம்
சிரிக்க சிரிக்க பேசுபவர் ஸ்ரீனிவாசன்

உள்ளங்கவர்ந்தவர் ஸ்ரீனிவாசன் – நம்
அன்புக்கு உகந்தவர் ஸ்ரீனிவாசன்

கட்டடப் பொறியாளர் ஸ்ரீனிவாசன் – பொழுதுபோக
கதைபல சொல்பவர் ஸ்ரீனிவாசன்

மொத்தத்தில், நாம் அனைவரும் நேசிக்கும்
ஒரு நல்ல மனிதர் ஸ்ரீனிவாசன்

Eshaan’s 2nd Birthday 2014

Eshaan’s 2nd Birthday Greeting

அக்கா மகன் ஆனந்த் அவன் மணந்தான் சக்தி
சக்தி, பெற்றுத் தந்தாள் ஈஷான் – இன்று
ஆண்டு இரண்டு ஓடி – ஈஷானுக்கு
இனிய பிறந்த நாளாம்

வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க
கல்வி, செல்வம், வீரம் பெற்று வாழ்க
ஈசன் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க – ஈஷானுக்கு
நீண்ட ஆயுள் அவன் தருவான் வாழ்க

தங்கத் தட்டில் ஏந்தும் தந்தை வாழ்க – உன்னை
கண்இமை போல் காக்கும் சக்தி வாழ்க
பாட்டி தாத்தா செல்லம்நீ வாழ்க – எங்களின்
அன்பு ஆசி என்றும் உண்டு வாழ்க

Rubiny MS Graduation in USA

                                ரூபினி வாழ்க நீ

முதுகலையில் பட்டம் பெற்ற யுவதி நீ – ரூபினி!
பெற்றவர்க்கு பெருமை சேர்க்கும் பொண்ணு நீ – ரூபினி!

நவநீ என்ற தந்தை பெற்ற தங்கம் நீ – ரூபினி!
தாயுக்கும் தங்கைக்கும் நடுவில் நீ- ரூபினி!

அருமை அம்மா ஜெயந்தி , அன்புத்தங்கை வைஷ்ணவி – ரூபினி!
ஆண்டவனின் அருள் கொடைதான் பெற்றவள்நீ – ரூபினி!
வேறு என்ன பரிசு வேண்டும் சொல்லு நீ – ரூபினி!

இறைவன் தந்த இந்த வாழ்வை எண்ணி நீ – ரூபினி!
என்றென்றும் இன்பமுடன் வாழு, நீ – ரூபினி!

Varsh, Varsh, Varshitha

வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

பாப்பு கோபி பெற்ற மகள் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

இளையமகள் இனியமகள் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

உங்கக்கா தங்கக்கா சம்ஹிதா வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

பனிப்பந்து வருகையினால் நீயும் ஆனாய் ஒரு அக்கா வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

பாசத்தை பங்கு போட பனிப்பந்து வந்தபின்னால் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

நேசமிகு அக்காவாக நீயும்தான் ஆகிவிட்டாய் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

பள்ளிக் கூடம்விட்டு பல்கலைக் கழகம்போகும் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

கல்வி அறிவுபெற கல்லூரி போகப்போகும் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

ஊரு விட்டு ஊரு போகும் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

பேரும் புகழும் நீ பெறுவாய் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

நலம் பலவும் நீ பெறுவாய் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

வளம் பலவும் நீ பெறுவாய் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

புது நட்பு நீ பெறுவாய் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

புது உலகம் நீ காண்பாய் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

ஆனா, லானா, மானா, சீனா வாழ்த்துகிறோம் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

ஆண்டவனின் அருள் நிலைக்கும் வர்ஷ், வர்ஷ், வர்ஷிதா

Dear Varshitha,

From school you go to university
We wish you always prosperity

Life may take you East or West
We wish you always the best of best

Life may take you North or South
We wish you always healthy growth

Ups and downs may come across
Values learned will make you cross

Turns and twists may slow you down
Waver not, you’ll get your crown

Duedates and deadlines will stress you out
Yoga you practise will get you out

God-given sister and parents are with you
Carefully chosen friends and family are with you

Culture and tradition you have learned
Common sense you also gained

Life may make you run run run
Knowledge will make you win win win

We wish you always the best of best

 

Happy New Year 2012

தரணி எங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு மட்டுமல்ல இனி ஒவ்வொரு ஆண்டும்
நமக்கும் நம் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் எல்லோருக்கும்
நிறைந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம், கூடி வாழும் குணம்,
மட்டற்ற மகிழ்ச்சி, மேலான மனநிம்மதி இவை அனைத்தும் அருள வேண்டி,
அம்மா, அப்பா, ஆண்டவனை வணங்கும்,
முருகானந்தன் (ஆனந்த்)

Happy Birthday to my dearest wife, Latha Alias Sundaravalli

Ottawa, Canada
3 August, 2011

பிறந்த நாள் காணும் அன்பு மனைவிக்கு அத்தானின் வாழ்த்துக்கள்

பிறந்தது புரத்தில் வடமலாபுரத்தில் – நீ
வளர்ந்தது கோவிலில் சங்கரன்கோவிலில்
புகுந்தது கல்லில் திண்டுக்கல்லில் – மகன்களை
பெற்றது நகரில் மதுரைமாநகரில் – நாம்
வாழ்ந்தது வனத்தில் (அரேபிய) பாலைவனத்தில் – உன்னால் புலம்
பெயர்ந்தது கனடாவில் பனிமிகு குளிர்மிகு கனடாவில்

இருவருடன் பிறந்தாய் இருவரைப் பெற்றாய் – ஆண்கள்
இருவருடன் பிறந்தாய் இருவரைப் பெற்றாய்
இனியவளே உன்னைப்போல் மகள்ஒன்று ஏன்எனக்கு பெற்றுத்தான் தரவில்லை
இப்பிறப்பில் இல்லை என்றால் மறுபிறப்பும் உனை மணப்பேன்
எப்பிறப்பும் நீஎனக்கு வேண்டுமடிவள்ளியே சுந்தரவல்லியே

முருகா நந்தனுக்கு எப்பிறப்பும்நீ வேண்டுமடி வள்ளியே சுந்தரவல்லியே
பிறந்த நாள் காணும் ஆசைமனைவிக்கு அன்புஅத்தானின் வாழ்த்துக்கள்

Birthday greeting to Aswini

Dear Jessica,

How are you? I know you will be very busy getting ready for the party tonight. Did you go to the vet lately? Make sure someone brushes your beautiful hair so that it is more shining than the other girl in your home, Ashwini who is celebrating her birthday this evening. Please don’t get us wrong, we are coming over there just to see you, spend some quality cat / pet time with you.  If you happen to notice some of us hanging out with Ashwini a bit more, take it easy, don’t be jealous, Jessi. Then everyone will start calling you jealousy Jessica. We don’t want that and you don’t like that either, right?

This Ashwini girl, did she buy any new dress for this evening? Did she show it you yet? Do you like it? How old is she, do you know, do you care? No, we don’t care either, we are here only to see you, just curious Ashwini.

How is the third girl in your home, Aarthi? Is she nice to you? I think they both learnt those graceful dance movements from watching you all day and all night.

You are a much matured girl. So, would you please join us to wish that little girl “HAPPY BIRTHDAY ASHWINI”?

Thanks Jessica. I love you.

Anand, Latha, Manu, Sibi

அஸ்வினியே , ஆர்த்தியின் தங்கையே

நீ வீட்டில் இரண்டாவது மகள், ஆனால் நட்சத்திரங்களில் முதலாமவள்

இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருப்பாயாக என்று வாழ்த்தும்

ஆனந்த், லதா, மனு, சிபி

ஆட்டவா

5th March, 2011

 

 

 

Pongal – 2011

பொங்கல் வாழ்த்து

15.11.2011

ஆட்டவா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் ஆனந்த் குடும்பத்தாரின் அன்பு நிறை பொங்கல் வாழ்த்துக்கள். நன்னாளாம் இந்நாளும் தொடர்ந்து வரும் எந்நாளும்  உங்கள் அனைவரின் வாழ்விலும்

அன்பு பொங்கட்டும் அறம் பொங்கட்டும்

அறிவு பொங்கட்டும் ஆன்மீகம் பொங்கட்டும்

ஆனந்தம் பொங்கட்டும் ஆரோக்யம் பொங்கட்டும்

இனிமை பொங்கட்டும் இளமை பொங்கட்டும்

இன்பம் பொங்கட்டும் இறைமை பொங்கட்டும்

ஈகை குணம் பெருகட்டும்

உயர்வு பொங்கட்டும் உற்சாகம் பொங்கட்டும்

எழுச்சி பொங்கட்டும் ஏற்றம் பொங்கட்டும்

ஐஸ்வர்யம் பெருகட்டும் ஒற்றுமை நிலவட்டும்

நல்ல நட்பும் உயரிய உறவும் உறுதுணையாக இருக்கட்டும்

முருகானந்தன் லதா மனு சிபி

Best Wishes to Ravi + Narayani

Congratulations Ravi & Narayani

Ravi & Narayani Wedding

Madurai, India

12 December 2010

சுப்ரமணியர் தெய்வானை சன்னதியில், நன்னாளாம் இந்நாளில்   பெற்றோரும் உற்றோரும் ஆசி கூற, சுற்றமும் நட்பும் கூடி வாழ்த்த,   மங்கள மேளம் ஒலி முழங்க, மாலை மாற்றி, மாங்கல்யம் பூட்டி       மனம் விரும்பி மணம் புரியும்  மதுரை மாநகர் வாழ் மணமக்கள் ரவிச்சந்திரன் நாராயணி இருவரும்

1. கல்வி 2. அறிவு 3. ஆயுள் 4. ஆற்றல் 5. இளமை 6. துணிவு 7. பெருமை

8. பொன் 9. பொருள் 10. புகழ் 11. நிலம் 12. நன்மக்கள் 13. நம்பிக்கை

14. நோயின்மை 15. முயற்சி 16. வெற்றி

ஆகிய பதினாறு செல்வங்களும் பெற்று வாழ எங்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்து சொல்கின்றேன்

ஆனந்த் (முருகானந்தன்) லதா மனு சிபி

ஆட்டவா, கனடா

கவி காளமேகத்தின் மூலப் பாடல் இதோ உங்களுக்காக è

துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் – அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோவுஅகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!