Category Archives: Opinions

Dindigul – Shallots Connection

திண்டுகல்லும் வெங்காயமும் – பின்னணி

தொலைபேசி எண்கள் ஒற்றை இலக்கங்களாக இருந்த காலம். PNG தரகு மண்டியின் எண் – 7. போனில் சுழற்றும் டயல் இருக்காது. போனை எடுத்தால், Exchange-உடன் connect ஆகும்.
தாடிகொம்பு ரோடு, பழனி ரோடு, பென்சனர் தெரு, சொசைட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் தரகுமண்டிகள் ஏராளம்.
பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட பேட்டைகளும் உண்டு – நாயக்கர் பேட்டை, நாடார் பேட்டை, புதுப்பேட்டை.
மிக அதிகமாக வாங்கி, விற்க பட்ட பொருள் – சின்ன வெங்காயம். தமிழ்நாட்டிலேயே, ஏன், தென்னிந்தியாவிலேயே மிகபெரிய (சின்ன)வெங்காய சந்தை திண்டுக்கல்தான்.
வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் நடக்கும். ஆந்திராவில் இருந்து வெங்காயம் வாங்க வரும் முதலாளிகளின் ஆகிருதி கண்டு மலைப்பதுண்டு.
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வண்டி வண்டியாக சாக்குகளில் வெங்காயம் வந்து இறங்கும். மூட்டை சுமப்பவர்கள் இடுப்பில் கொக்கி சொருகி வைத்திருப்பார்கள்.
ஒரு கொத்து கொத்தி, லாகவத்துடன் மூட்டைகளை முதுகில் சுமந்து, இறக்கி, அம்பாரம், அம்பாரமாக குவிப்பார்கள்.
ஜிம்முக்கு போகாமலேயே பலருக்கு சிக்ஸ் பேக் வயிறு இருக்கும்.
கூலிப்பெண்கள் குப்பை அகற்றி, அழுகிய வெங்காயம் ஒதுக்கி, சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள்.
சிலேடைப் பேச்சுக்கு குறைவிருக்காது. அன்று புரியவில்லை. வளர வளர புரிந்தது.
நிறையப்பேர் வெற்றிலை, புகையிலை போடுவார்கள். (அங்குவிலாஸ் புகையிலை திண்டுக்கல்லின் மற்றொரு பெரிய தொழில் நிறுவனம்).
அப்பா ஆறுமணிக்கு வாணிவிலாசில் முதல் காப்பி குடித்துவிட்டு, முதல் சுற்றில் வெங்காய வரத்து, ரகம், தரம் பார்த்து விடுவார்.
எட்டு மணியில் இருந்தே வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். வாங்குபவர்கள் துண்டுக்குள் கை நுழைத்து, விற்பவர்களின் விரல்களைத் தொட்டு, தடவி விலை பேசுவார்கள். (Silent Auction)
திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும். கால் ரூபாய், அரை ரூபாய் விலை வித்தியாசத்தில் கூட ஆயிரம், இரண்டா யிரம் மூட்டைகள் கிடைக்கும், கிடைக்காமலும் போகும்.
அந்த விரல் பாஷையை அப்பா சொல்லிக்கொடுக்கவேயில்லை. படித்து நல்ல வேலைக்குப்போ என்பார்.
தொழிலாளர்களை சுரண்டுவது உலகம் முழுவதும், எல்லாக் காலத்திலும் நடப்பதுதானே. திண்டுக்கல்லும் விதிவிலக்கு அல்ல.
தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்கம், மூட்டை தூக்குவோர் சங்கம், வண்டிக்காரர்கள் சங்கம் தொடங்கி வளர ஆரம்பித்தன.
உரிமைகளை கேட்டு, கொடுப்பதை வாங்கிக் கொள்ளவேண்டும். பணத்தை எதிர்த்து போராடி வெற்றி கொள்ள முடியாத நேரம்.
சில நல்ல முதலாளிகளும் இருந்தார்கள். எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து, 1500 ரூபாய் இல்லாமல் நின்றபோது
KTN தண்டபாணிப்பிள்ளையும், சௌடப்பக்கவுண்டரும் உதவினார்கள்.
அவர்களுக்கு எப்பிறப்பிலும் நன்றிக்கடன் பட்டவனானேன்.
தொழிலில் போட்டி இருக்கும். வஞ்சகம் இருந்ததாக நினைவில்லை. ஜாதி, மதப் பிரச்சினை இல்லை.

எனவே, சின்ன வெங்காயம் எங்கள் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும். பழைய சோறும் சின்ன வெங்காயமும் பலருக்குக் காலை உணவு.
தயிர் சாதமும், உப்பு போட்டு பொடுசா நறுக்கி வதக்கிய சின்ன வெங்காயமும் பச்சைமிளகாய் வெஞ்சனம் தான் பலருக்கு மதிய உணவு.
பக்கோடாவில் சின்ன வெங்காயம், தூள் பஜ்ஜியில் சின்ன வெங்காயம், வடையில் சின்ன வெங்காயம், வடகத்திலும் சின்ன வெங்காயம்
பங்காருசாமி நாயுடு “பச்சைக் குருமா” வில் சின்ன வெங்காயம், எங்க ஊரில் எங்கும் எதிலும் சின்ன வெங்காயம்…

அம்மா அடிக்கடி செய்யும் “வெங்காயக் கறி” நட்பு, உறவு வட்டத்தில் மிகப் பிரபல்யம். அந்த கைவண்ணம் அம்மாவிடம் இருந்து இரண்டு அக்காக்களுக்கு போய், இப்ப என்னிடம் வந்திருக்கிறது.

img_20170116_132531

திண்டுக்கல் வெங்காயக் கறி
#அசைவம் #Non-Veg #Lamb

செய்முறை உபயம் – அக்கா ஜமுனா ரமனிகரன் (திண்டுக்கல்)

தேவையான பொருட்கள் :
இளம் ஆட்டுக்கறி – 1 கிலோ
சின்ன வெங்காயம் 1 கிலோ
மிளகு – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 25 கிராம்
பூண்டு – 50 கிராம்
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :
அடுப்பில் சட்டி, அதற்குள் எண்ணெய்,
காய்ந்தவுடன் கருவேப்பிலை, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் பாதி வெந்தவுடன், உப்பு, அரைத்த இஞ்சி பூண்டு சீரகம், வாசம் போகும் வரை வதக்கி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிய கறி போட்டு,
மஞ்சள், மிளகு, சீரகம் அரைத்து உள்ளே போட்டு, கொஞ்சமாய் தண்ணி ஊத்தி,
அது கொதிக்கும் இசையிலும், மிதந்து வரும் மணத்திலும், மனதைப் பறி கொடுத்து,
கறி சுருள, சுருள சுண்டும் வரை வதக்கி, துணைக்குத் தயிர் பச்சடியுடன்
மூவர் பகிர்ந்து சாப்பிட…..ஆஹா, இதுவன்றோ சொர்க்கம் என்று
நிச்சயம் எண்ண வைக்கும் எங்க ஊர் (திண்டுக்கல்) வெங்காயக்கறி.

Advertisements

Churrascaria – Brazilian Steak Houses

வணக்கம், இந்தப் பதிவு சமையல் குறிப்பு அல்ல. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் நம் குழும உறுப்பினர்களில் சமைக்கத்தெரியாதவர்களுக்கு, சமைக்க முடியாதர்களுக்கு, வாரத்தில் ஒரு நாளாவது வெளியில் சாப்பிட விரும்புவர்களுக்கு, பறந்து பறந்து பல ஊர்களில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவுமே என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.
 
This is about Brazilian Steak Houses which are all over the American Continent in most major cities.
 
பல அமெரிக்கப் பெரு நகரங்களில் பிரசிலியன் ஸ்டேக் உணவகங்கள் இருக்கும். இந்த வகை உணவகங்களின் பூர்விகம் போர்துகீஸ் நாடு. அவர்கள் குடியேறி, பிறகு ஆதிக்கம் செலுத்திய நாடு பிரேசில். அங்கிருந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த உணவு பிரசித்தம் பெற்றது.
 
என்ன கிடைக்கும் இங்கு? இறைச்சி – Churrasco Styleலில் சமைத்த முதல் தர மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி. கோழியும் கிடைக்கும். கோழி சாப்பிட இங்கு போவதில் அர்த்தம் இல்லை. (மெக்காவுக்குப் போய் நொண்டி பக்கீர் காலில் யாராவது விழுவார்களா? 🙂 கடவுளை வணங்குவதை விட்டு விட்டு )
 
எவ்வளவு விலை? ஒரே விலை (About US $40) – அளவில்லா உணவு. பச்சைக் காய்கறிகள், ஒரு சில பழங்கள், சில இடங்களில் சாதம், பருப்புகள் , ரொட்டி, இனிப்புகள், அப்புறம், கறி, கறி, கறி, மேலும் கறி, மீண்டும் மீண்டும் கறி, நாம் போதும் என்று சொல்லும் வரை (கையில் தந்த அட்டையை பச்சை பக்கம் தெரிய வைத்தால் வேண்டும் என்று அர்த்தம், சிவப்பு தெரிய வைத்தால் போதும் என்று அர்த்தம்.) இறைச்சி தவிர எதையும் தொடாதீர்கள். என் மனைவி மாதிரி ஆட்கள் இறைச்சி தவிர மற்ற அனைத்தும் சாப்பிடுவார்கள். 
எப்படி சமைக்கிறார்கள் ? சுடுகிறார்கள். குறைந்த வெப்பத்தில் அதிக நேரம் நிலக்கரி மேல்  கிரில் செய்கிறார்கள், நம் கண் எதிரே. மிளகாய் இல்லை, இஞ்சி இல்லை, பூண்டு இல்லை, மஞ்சள் இல்லை, வெங்காயம் இல்லை, எதுவும் இல்லை. அதிக பட்சம் உப்பு தடவுகிறார்கள். (உப்பைக் கொட்டுவதில்லை). இந்த சமையல் முறைக்குப் பின் இருக்கும் சித்தாந்தம் –  Meat has its own flavour when marinated and cooked right. சில சமயம் எலுமிச்சை சாறு தெளிக்கிறார்கள்.
ஒரே ஒரு வகை மாட்டிறைச்சி மட்டும் வெண்ணையில் வறுத்த பூண்டு, பார்மிசான் சீசுடன்  பூசுகிறார்கள் (Garlic Parmesan Beef). சுத்தமான முறையில் அறுத்து, பதப்படுத்தி, சமைப்பதால், சிலர் ஏறக்குறைய பச்சையாகவே (Rare) உண்கின்றனர். சில இடங்களில் புகையில் மட்டுமே வெகு நேரம் சுட்ட கறியும் (Smoked Meat) கிடைக்கிறது.
You can ask for rare, medium rare, well done meat, the way you like it cooked.
எப்படி பரிமாறுகிறார்கள்? கத்திச்சண்டை பயின்ற வீரனின் லாகவத்துடன், கம்பியில் கோர்த்து கரியில் சுட்ட  கறியை செதுக்குகிறார்கள். நாம் பிடிப்பான் (Tongs) கொண்டு பிடித்து நம் தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டும்.
Those meat carvers are called “Passadores (meat waiters)”.
எப்படி இருந்தது சாப்பாடு? சொல்லவும் வேண்டுமோ? சுவையோ சுவை, மணமோ மணம். அருமையான அனுபவம்.
பேலியோ (குறைந்த மாவுச்சத்து உணவு முறை) மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு முறையாவது போக வேண்டிய உணவகம்.
பின் குறிப்பு: இரண்டு மணி நேரம் கழித்து ரத்த  சக்கரை அளவு – 6.5 (117)

ஆண்

ஒவ்வொரு ஆணும் ஒரு தென்னை,,,
விதைத்தது தந்தை, வளர்த்தது அன்னை,,,

முகநூல் (FaceBook) எங்கே மறக்குமோ என்னை,,,
எனப்பயந்து பதிந்தேன் மேற்சொன்ன கருத்தை,,,

பதிவிட்ட பத்தே நிமிடங்களில் தொலைபேசியில் மனைவி
எழுதிய இருவரிகளுக்கு எதிர்க்கருத்துச் சொன்னாள் துணைவி

இளநீரும் தேங்காயும் மனைவிக்கும் மக்களுக்கும்தான் என்று
மறைமுகமாகச் சொல்லும் உங்கள் உட்கருத்து தெரியாதா என்றாள்

ஆண் மட்டுமா தென்னை, பெண்ணை ஏன் விட்டீர் என்றாள்
நாற்றாக வளரும் பெண் நெல்லாக விளைவது எங்கே என்றாள்
பிறந்த வீட்டிலா இல்லை புகுந்த வீட்டில்தானே என்று படபடத்தாள்

செல்லமாய் வளர்ந்த பெண்கள் புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும்
உறவுக்கும், நட்புக்கும் பொங்கி பரிமாறி, கழுவி, துடைத்து, தூர்த்து, பெருக்கி, துவைத்து, தேய்த்து, அடுக்கி, செலவைச் சுருக்கி சேமிப்பைப் பெருக்கி, வீடு வாகனம் வாங்க உதவி, வேலைக்கும் போய் வந்து இல்விருத்தி செய்யும் இல்லத்தரசிகள் – இவர்கள் மட்டும் தென்னை இல்லையோ என்று பிடி பிடி என்று பிடித்துவிட்டாள்.

தேன் கூட்டில் கை வைத்த திருடன் போல் திகைத்து நின்றேன்.
எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவனை நினைவில் கொண்டேன்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் இந்த ஆண்டி
வம்பை விலை கொடுத்து வாங்கினேனே விரும்பி வேண்டி

Investment with highest returns !!!

Dear Friends and Family,

It is not what you think. I will be the last person to offer financial advice to others. Neither I have the qualification nor do I have the expertise, experience, prowess, power and success in that area.The closest I have ever been to financial acumen and success was when my brother-in-law Gopi drove me along the street in Omaha, Nebraska where Warren Buffet lives in a modest home. That is about it.

I am talking about investment in one’s own self – happiness and health. I listen to both 580 CFRA and 91.5 CBC (Ottawa’s most popular radio channels) to understand both right and left of the spectrum. I may not agree with everything what Lowell Green talks about, but I definitely trust the businesses and companies that he recommends (Henderson Security, J.C.Robinson and BMI medical to name a few).

When my weight reached 100 kgs – 220 pounds, my own feet and knees refused to obey my commands and went on illegal strikes. Free Yoga at the Sai Centre and fee based 22 weeks weight loss program at http://www.bmimedical.ca transformed me from a person who lives to eat to a person who eats to live. I used to love my sofa, TV and laptop. A small electronic Pedometer which came with the weight loss program changed all that. I started walking again, motivated by the numbers that tells me how good or bad I am everyday. Latha’s stringent diet and my sons’ fitness training brought me back to 82kgs – 180 pounds.

So personal health is the first investment that gave me very high returns. Here is the proof from my pedometer which measures every step I have taken every day >>> an average of 8960 steps / day

Image

The second best investment was books. After a long time chasing money, I stopped and started reading books again. I hit a gold mine soon. First book was a classic Sahithya Academy winning 1000 pages novel Kaaval Kottam காவல் கோட்டம் by Su.Venkatesan. It is all about Madurai and its history, rich and por, boom and bust, bravery, blood, wins and losses, people, culture, customs and of course food.

வால்காவில் இருந்து கங்கை வரை

கோபல்லப கிராமம்

Wheat Belly

Low Carb Coach

– some of the books that kept me busy and made me happy the last few years.

And the third investment with high returns is Songs and Dance functions of our cultural associations in Ottawa. After every event, I had the same feeling – everybody is a winner in these functions.

Forth in my list is travel and everything that comes with it. Food still remains one of my favourites, but quality matters more than the quantity nowadays.

Looking forward to a more promising new year…till then

நல்லறிவு, நன்னலம், நற்செல்வம், நன்மக்கள், நல்லரசு நம் அனைவருக்கும் கிடைக்க, நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்கும் உங்கள் நண்பன் முருகானந்தன்

அன்புடன் ஆனந்த்

Why Why Why

                                                                                          ஏன் ஏன் ஏன்

கம்பு கேப்பை வரகு சாமை ஏன் மறந்தோம் – நாம ஏன் மறந்தோம்

கைக்குத்தல் அரிசியையும் ஏன் விட்டோம் – நாம ஏன் விட்டோம்

தினை மாவும் தேனும் திங்க ஏன் மறந்தோம் – நாம ஏன் மறந்தோம்

கொழுப்பு சக்கரை கூடிப்போயி உழல்கின்றோம் – பிணியால் உழல்கின்றோம்

பனைவெல்லம் கருப்பட்டி வேண்டாமென நாம் ஒதுக்கி

வெள்ளைச் சீனிக்கு அடிமை ஆனோம் – ஏன் அடிமை ஆனோம்

நல்லெண்ணெய் உபயோகம் நாம் குறைத்தோம் – நாம ஏன் குறைத்தோம்

கொள்ளு சேர்க்க மறந்து இன்று பெருக்கின்றோம் – உடல் பெருக்கின்றோம்

மரபணு மாற்றம் செய்த மைதாகோதுமை, மக்காச்சோளம் இவை

மெல்ல மெல்ல நம்மைக் கொல்ல அனுமதித்தோம் – ஏன் அனுமதித்தோம்

நீர்மோர் நீராகாரம் பானகம் பானைத்தண்ணீர்

உடலுக்கு உகந்த இவை உதறித்தள்ளிவிட்டு

பெப்சி கோகோகோலா காப்பி டீ என்று

விலை கொடுத்து வினையை ஏன் விருப்பமுடன் வாங்குகின்றோம்

சொந்தக்காசு செலவு செய்து  சூன்யம் செய்வினை நமக்கு நாமே வைக்கின்றோம்

நம் வீட்டுக் கொள்ளி கொண்டு  நம் தலையைச் சொரிகின்றோம்

எனவே ஒழுங்கான உடல் வளர்ப்போம் – அதன்விளைவால் உயிர் வளர்ப்போம்

உங்கள் அனைவரின் நலம் விரும்பும் – ஆனந்த்

The search for a perfect dosai….

Latha and I stopped at Mississauga on our way back from the great Niagara Falls last week after dining and shopping with Manu and I remembered Sambath mentioned about Guruluxshmi, the newest South Indian restaurant in Greater Toronto Area (GTA).

http://www.gurulukshmi.com/

Your search for the good dosa ends here – this is the restaurant’s slogan, motto. Did it end here for me? I don’t know yet..but you tell me when you visit there…
ஆச தீர தோசை திங்க அருமையான உணவகம்
சட்னியும் சாம்பாரும் குறையில்லா ஒருரகம்
மிஸ்ஸிஸாகா நகரினிலே குருலக்ஷ்மி பிரபலம்
வேண்டுமளவு காரத்துடன் கிடைக்குமிங்கே சகலமும்
ரவையில் செய்த கேசரியின் சுவையும் மணமும் முதல்தரம்
ஆனால்….
நல்ல காப்பி குடிக்கநீங்க தமிழகம்தான் போகோணும்.
அன்புடன் ஆனந்த்
Image

போளி சாமியார்

போளி(போலி) சாமியார்Image சாமியார்
தீபாவளிக்கு செய்த தேங்காய் போளியில் சமபங்கு கிடைக்கததால், மனமுடைந்து, சாமியாராக முடிவு செய்து  கதிரவன் கிளம்புமுன்னே காரை எடுத்துக்கொண்டு கிழக்கு நோக்கி சென்றேன். முதல் தப்பு – காரில் சென்றது. முற்றும் துறக்க நினைத்தவன் நடந்தோ, பஸ்ஸிலோ, ரெயிலிலோ அல்லவா சென்றிருக்க வேண்டும்? ரெண்டாவது தப்பு – கட்டியவளிடம் சொன்னது. கொஞ்சம் கூட பதறாமல் “கதவைப் பூட்டிட்டு போங்க” -ன்னு சொல்லிட்டு திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டாள், கல்மனசுக்காரி. நெல்லைச் சீமையிலே அல்வா மட்டும்தான் இளகும் போலிருக்கு, பெண்கள் ரொம்ப ஸ்ட்ராங்.
M.S.சுப்புலட்சுமி அவர்களின் சுப்ரபாதம், பிறகு ABBA, BONEY M (கனடாவில் ABBA, BONEY M கேட்கும் ஒரே ரசிகன் நானாகத்தான் இருப்பேன்), சுகி சிவம், ஞானசம்பந்தன் இவர்களின் சமய, சமுதாய சொற்பொழிவுகள் கேட்டுக்கொண்டே மொண்ட்ரியல் (Montreal) முருகன் கோவில் வந்து சேர்த்து விட்டேன். ஏழு கடல் கடந்து ஏழுமலையான் இங்கு வந்து திருக்கல்யாணக் காட்சி தருவதாகக் கேள்விப்பட்டு உள்ளே சென்றேன். கோவிந்தனைப் பார்க்க காசு கேட்டார்கள், அதுவும் 101 டாலர்கள்.விசிட் விசாவில் வந்திருக்கும் வெங்கடேஷ்வரரைப் பார்க்கத்தான் கட்டாயக் கட்டணம். ஆனால் மருமகன் முருகனுக்கு இடது பக்க சன்னதியில் அபய ஹஸ்தம் காட்டி நிற்கும் பெர்மனென்ட் ரெசிடென்ட் வெங்கடேஷ்வரரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கண்குளிர தரிசிக்கலாம் – பணம் கொடுக்காமல். படைத்தவனிடம் இருந்து பதினாறு செல்வங்களையும் பெறுவதுதான் என் குறிக்கோள். அந்த கோவர்தனனிடம் ஒரு 100 மில்லியன் டாலர்களாவது கறந்துவிடவேண்டுமென்று ப்ரிட்ஜ்வாட்டருக்கும்(New Jersey) பிட்ஸ்பர்குக்கும்(Pennsylvania) நான் அலைவது அவர்களுக்கு தெரியவில்லை. தெரிந்திருக்க நியாயமில்லை. எனக்கும் இறைவனுக்கும் இடையில் தரகன் எதற்கு? கண்மூடி நின்றால் காட்சி தரும் கோபாலனை, closed circuit திரையில் சேவித்தேன். திரக்கில் (busy, பிஸி) அல்பம் நேரம் எனக்கும் தருமாறு திருவேங்கடனிடம் வேண்டி, அப்படியே அந்த 100 மில்லியன் பற்றி நினைவு படுத்திவிட்டு வெளியே வந்தேன்.
வயிறு பசித்தது. வைராக்கியம் குறைந்தது. முனிவனாக முடிவு செய்து மூன்று மணி நேரம் கூட ஆகவில்லை, மனைவியையும் மகன்களையும் மனது தேடியது. மறுபடியும் திரும்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
சுடச்சுட சோறு, பருப்பு, பாவக்காய் – மதிய உணவு அமுதமாய் இனித்தது. ஆனால் பக்கத்தில் இருந்து பரிமாறிய பாரியாள் முகத்தில் இழையோடியது பாசமா பரிகாசமா என்று புரியவில்லை.

Going live with a new release !

Giving birth to a child and implementing new software system ….almost same or similar game.

So much excitement, pain, frustration, blame game..but in the end when you hold, touch and feel what you achieved.. lots of joy, happiness, celebration and a feeling of…..let us do it again!!???