Category Archives: Poetry

Rubiny, Rubiny, We Love You Rubiny

Rubiny - Bharath Wedding

Rubiny, Rubiny, We Love You, Rubiny

ஜெயந்தி நவநீ பொண்ணு நீ ரூபினி
செல்லத்தங்கை வைஷுவுக்கு அக்காநீ
நெல்லை விட்டு சென்னை வந்த சிட்டு நீ
கணினி துறையில் பட்டம் பெற்ற சமத்து நீ

படிச்சஉடனே பணியில் சேர்ந்த கில்லாடி
பாத்தஉடனே புடிச்சுப் போகும் பொண்ணு நீ – பரத்துக்கு
பாத்தஉடனே புடிச்சுப் போகும் பொண்ணு நீ – நாம எல்லோருக்கும்
பாத்தஉடனே புடிச்சுப் போகும் பொண்ணு நீ

அடையாறில் அன்றிரவில் மின்னல்மழைமோகினி
கொட்டு மழையில் குடை பிடித்த வள்ளல்நீ
ரூபினி
கலகலன்னு பேசி என்னைக் கவர்ந்துவிட்ட ரூபினி
உரையாடல், உறவாடல், உலகெங்கும் நட்பாடல்
இயல்பாக வரப்பெற்ற (வரம்பெற்ற) ரூபினி

கண்டம் விட்டு கண்டம் தாவும் கன்னிநீ ரூபினி
ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா
கண்டம் விட்டு கண்டம் தாவும் கன்னிநீ
படிக்கப் போன சிகாகோ, பணிக்குப் போன ஒமாஹா
பார்க்கவந்த ஆட்டவா, எங்களைப் பார்க்கவந்த ஆட்டவா

என்றும் எங்கள் வாழ்வில்ஒரு அங்கம்நீ ரூபினி
அதுக்காக சொத்தில் பங்கு கேட்காதே, தரமாட்டேன் ரூபினி

கண்டம் விட்டு கண்டம் போயி கண்டெடுத்த பிரசன்னா – பரத் பிரசன்னா
அண்டம் புகழும் வண்ணம் உனைக் காத்திடுவார்
சொல்லவே வேணாம், யாரும் சொல்லவே வேணாம்

எங்கள் வாழ்த்து என்றும் உண்டு ரூபினி
சீக்கிரம், பொண்ணு ஒண்ணு பெத்துக்கொடு ரூபினி

அன்புடன் முருகானந்தன்                       23 ஆகஸ்ட் 2018

Advertisements

Spring, where is it?

வசந்தம் வந்தும் பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை
மழை நின்றும் தூவானம் எங்களை விடவில்லை

உறைந்து போன நீர்நிலைகள்
முழுசா இன்னும் உருகவில்லை

திரும்பிவந்த பறவைக் கூட்டம்
நீந்த ஒரு குளம் இல்லை

வெளிச்சம் தரும் சூரியனால்
வெப்பம் தர இயலவில்லை

மேகமூட்டம் விலகவில்லை
பகலவனை காணவில்லை

செடிகொடிகள் சிலிர்க்கவில்லை
இலைமரங்கள் துளிர்க்கவில்லை

இன்னும் இந்த குளிர்காலம்
ஊரை விட்டு போகவில்லை

 

Coconut Shrimps

Simple Shrimps Version 2

இலகுவான இறால்

இறால் – அரைக்கிலோ
உப்பு, வேதாஸ் மீன் மசாலா, மஞ்சள் பொடி, எலுமிச்சை ரசம், வறுத்த, காய்ந்த தேங்காய்த் துருவல், முட்டை, தேங்காய் எண்ணெய் – உங்கள் விருப்பம்
 
செய்முறை >>>
ஓடோட வாங்கி வந்த இறாலை,
ஒவ்வொன்னா உடச்செடுத்து,
வால் நீக்கி, அழுக்கெடுத்து,
புளிப்புக்கு எலுமிச்சை
ஒரப்புக்கு மீன் மசாலா,
உப்பு, மஞ்சள் உடன் சேர்த்து,
மணி நேரம் ஊற வச்சு,
ஒரு முட்டை அடிச்செடுத்து,
ஒவ்வொன்னா உள்ள முக்கி,
தேங்காயில் புரட்டிக்கிட்டு,
எண்ணெயிலே வறுத்தெடுத்தேன்,
V
V
V
இரு மகன்கள் உண்ட பின்பு,
எனக்கு ஒன்னும் மிஞ்சலியே, 😦

Tuna Stirfry

மீன் கொத்து

தேவையான பொருட்கள் >
முள்ளில்லா சூரை மீன் (Tuna) – 500 கிராம்
முட்டை – 3
தாளிக்க – சோம்பு- 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சுவைக்கு – வெங்காயம் – 6
உப்பு – 3 தேக்கரண்டி
காரத்துக்கு – மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி
கலருக்கு (நலனுக்கும்) – மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
அலங்கரிக்க – கொத்தமல்லி – ஒரு கட்டு
மிளகுப்பொடி – 1/2 தேக்கரண்டி
இறுதியாக – எலுமிச்சை சாறு

செய்முறை >
சரசு: லச்சுமியக்கா, லச்சுமியக்கா,
லட்சுமி: என்னா சரசு, இந்த நேரத்துல?
சரசு: என் கஷ்டத்த வேற யாருகிட்ட சொல்வேன்க்கா
லட்சுமி: அப்படி என்ன கஷ்டம், உட்காரு, சூடா சுக்குத்தண்ணி போடுறேன், குடிச்சிகிட்டே பேசுவோம், ம்ம், சொல்லு,
சரசு: (குரலைத் தாழ்த்தி) எம் புருஷன் போற போக்கு சரியில்லேக்கா. பத்து நாளைக்கு முன்னாடி, மருதைக்கு ஏதோ கூட்டம்ன்னுட்டு போனாருக்கா..
வந்ததுலேருந்து ஒழுங்காவே சாப்பிட மாட்டேன்கிறார்க்கா. நானும் பிள்ளைகளும் ரேஷன் அரிசி சாப்பிட்டுட்டு, அவருக்கு சம்பா அரிசிலேதான் சமைக்கிறேங்க்கா.
வெறுஞ்சோறக் கூட தட்டு தட்டா வெட்டுற மனுஷன், சோற வுட்டுட்டு, வெஞ்சனத்த மட்டும் தின்னுட்டு போயிறார்க்கா.
லட்சுமி: நீ ஏன்னு கேட்டியா?
சரசு: கேட்டேனே – பேலியோ, போலியோன்னு உளர்றார்க்கா..வாயிலே வராத வார்த்தையா சொல்றார்க்கா. வேற எங்கேயும் கை நனைக்கிறாரோன்னு பயமாயிருக்குக்கா
லட்சுமி: சே, சே, உம்புருஷன் நல்லவேம்மா… அப்படியெல்லாம் போகமாட்டான், சரசு…
சரசு: நைட் ஷிப்ட் முடிஞ்சு வரலே, அந்த ஒத்த புளியமரத்துக்கு கீழே காத்து, கருப்பு அடிச்சிருக்குமாக்கா
லட்சுமி: (சிரித்துக்கொண்டே) ஓம்புருஷன்தான் காத்து, கருப்ப அடிச்சிட்டாருன்னுதான் பேப்பர்லே படிச்சேன் !
சரசு: போங்கக்கா, உங்களுக்கு கிண்டல் பண்றதுதான் வேல, மல்லிகைப்பூ மாதிரி இட்லி அவிச்சாலும், நாலு முட்டைய கொடுன்னு, வாங்கி சாப்பிட்டுட்டு போறாரு..
நெய்யும் முந்திரியும் மிதக்க நான் செஞ்ச பொங்கல, மக ஊட்டினதாலே, ஒரு வாய் சாப்பிட்டார்க்கா.
பொங்கல் பானைலெ சுத்தி வச்ச மஞ்ச கிழங்க உருவி, பச்சையா மென்னு முழுங்கினார்க்கா.
நம்ம கோடி வீட்டு ஜோஸ்யர் கிட்டே கேட்டேன்க்கா, இன்னும் 7 1/2 வருஷத்துக்கு இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லிட்டார்க்கா.
என்ன சமைக்கிறதுன்னே தெரிலே, எதாவது புதுசா சொல்லுங்க்கா
லட்சுமி: சொல்லிருவோம்…நீ நம்ம (மஸ்தான்)பாய் கடைலே கூப்பிட்டு அரைக்கிலோ சூரை மீனு, சுத்தமா, முள், எலும்பு, தோல், எதுவும் இல்லாம, வீட்டுக்கு அனுப்ப சொல்லீரு.
வீட்டுக்கு வந்தமீனை, உப்பு, மஞ்சள் நீ போட்டு, வேக வச்சு , ஆறவச்சு, புட்டு, புட்டு, எடுத்து வையி.
கொஞ்சம் பெரிய வடச்சட்டிய அடுப்புல வச்சு, நாலு கரண்டி நல்லெண்ணெ நல்லா சூடுபண்ணி,
சோம்பு, சீரகம் போட்டு பொரிஞ்சதுமே, வெட்டிவச்ச வெங்கயத்த கொட்டிநல்லா வதக்கிக்கிட்டு,
சரசு: அக்கா, அக்கா, கொஞ்சம் மெதுவா சொல்லுங்கக்கா
லட்சுமி: சரிஈஈஈ….உப்பு கொஞ்சம் கூடப் போட்டு, பிச்சு வச்ச மீனப்போட்டு
காரத்துக்கு மிளகாய்ப்பொடி, கலருக்கு மஞ்சப்பொடி, போட்டு நல்லா கிண்டி விட்டு,
நாட்டுக்கோழி முட்டைமூண, நடுவிலதான் உடைச்சு ஊத்தி, வேகும் வரை கொத்தி விட்டு,
கொத்தமல்லி மேலே போட்டு, இறக்கி கீழே வச்சு, எலுமிச்சை சாறு ஊத்தி,
மிளகை மேலே தூவி, மணக்கும் மீன் கொத்தை, உன் மாமனுக்கு பரிமாறு, பாதிய நீ தின்னு.
சரசு: (அதிர்ச்சியில்) அக்கா, அப்ப சோறு…
லட்சுமி: சோறு இல்லே, கருவேப்பிலை கிள்ளிப்போட்டு, சொம்பு நிறைய (நீர்)மோரக்கொடு.
சரசு: அக்கா, என்ன, நீங்களும் அவுக மாதிரியே அரிசி, பருப்பு ஒதுக்குறீக !
லட்சுமி: அதுவா, எம்புருஷனும் ஏழாம் தேதி, மதுரைக்கு அதே கூட்டத்துக்கு போய்வந்தாங்க. அப்ப இருந்து, நாங்களும் இட்லி, தோசை, வடை, பூரி, ரொட்டி, சப்பாத்தி
எல்லாம் விட்டுட்டோம்.
சரசு: சரிக்கா, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், மீன் வந்திருக்கும், நான் கிளம்புறேன்…நாளைக்கு பேசுவோம்..

1484795118419

dsc04193

Mom for few weeks

இடைக்கால அம்மா பதவி

மனைவி வெளி ஊரில்
அதிகாரம் என் கையில்

இடைக்கால அம்மா பதவி எனக்கு
ரொம்ப ரொம்ப பிடிச்சுத்தானே இருக்கு
அடுக்களையின் ஆட்சி இப்ப எனக்கு
பிள்ளைகளை விரட்ட, துணிவு தருது

காய்கறிகள், பால், பழங்கள்
கோழி, முட்டை, மீன், இறைச்சி
அரிசி, பருப்பு, பலசரக்கு
ஆக இவை அனைத்தையுமே
ஆகா, இவை அனைத்தையுமே
வாங்கும் திறன் வந்திருக்கு

உப்பு காரம் என் இஷ்டம்
குழம்பின் நிறம் என் இஷ்டம்
அவிக்கனுமா, வதக்கனுமா
அந்த முடிவு என்னிஷ்டம்

கூட்டுவதும் நானே, பெருக்குவதும் நானே
துணிமணியை துவைத்துலர்த்தி
மடிப்பவனும் நானே
இன்னும் ஒருவாரம் இங்கு எல்லாமும் நானே

Thindukkal

அபிராமி அம்மன் ஆளும் எங்க ஊர் எங்க ஊர்
கோட்டைமாரி காவல் காக்கும் எங்க ஊர் எங்க ஊர்
மலைவாழைப் பழம் காய்க்கும் எங்க ஊர் எங்க ஊர்
மும்மதமும் தழைத்தோங்கும் எங்க ஊர் எங்க ஊர்

புகையிலைக்குப் பேர்பெற்ற எங்க ஊர் எங்க ஊர்
பூட்டுக்கும் புகழ்பெற்ற எங்க ஊர் எங்க ஊர்
பட்டுநூல் நெசவு நடக்கும் எங்க ஊர் எங்க ஊர் – (தோல்)
பதனிடும்தொழில் நடக்கும்ஊர் எங்க ஊர் எங்க ஊர்

தலைப்பாகட்டி பிரியாணி தந்த எங்க ஊர் எங்க ஊர்
பங்காருசாமி பச்சைக்குருமா எங்க ஊர் எங்க ஊர்
வாணிவிலாஸ் காப்பி தந்த எங்க ஊர் எங்க ஊர்
ராஜாமணி ரவாதோசை எங்க ஊர் எங்க ஊர்

சிறுமலையின் தென்றல் வீசும் எங்க ஊர் எங்க ஊர்
கொடிகாத்த குமரன் பூங்கா உள்ளஊர் எங்க ஊர்
குளிர்நீரைக் கொட்டும் ஒடுக்கம் உள்ளஊர் எங்க ஊர்
மலைக்கோட்டை உயர்ந்து நிற்கும் எங்க ஊர் எங்க ஊர்

Eshaan’s 2nd Birthday 2014

Eshaan’s 2nd Birthday Greeting

அக்கா மகன் ஆனந்த் அவன் மணந்தான் சக்தி
சக்தி, பெற்றுத் தந்தாள் ஈஷான் – இன்று
ஆண்டு இரண்டு ஓடி – ஈஷானுக்கு
இனிய பிறந்த நாளாம்

வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க
கல்வி, செல்வம், வீரம் பெற்று வாழ்க
ஈசன் அருள் என்றும் கிடைக்கும் வாழ்க – ஈஷானுக்கு
நீண்ட ஆயுள் அவன் தருவான் வாழ்க

தங்கத் தட்டில் ஏந்தும் தந்தை வாழ்க – உன்னை
கண்இமை போல் காக்கும் சக்தி வாழ்க
பாட்டி தாத்தா செல்லம்நீ வாழ்க – எங்களின்
அன்பு ஆசி என்றும் உண்டு வாழ்க

Welcome to the summer picnic – 2014

 

               சோலை விழா – 2014

வாங்க வாங்க பூங்காவுக்கு வாங்க – ஆட்டவா

ஆண்ட்ரு ஹேடன் பார்க்குக்தான் வாங்க

ஆத்துக் கரையில் காத்துவாங்க, வாங்க – அங்கே

ஆடி ஓடி விளையாடலாம் வாங்க

கூட்டாஞ்சோறு கூடித் தின்போம் வாங்க – அங்கே

பங்குஉணவு பகிர்ந்து தின்போம் வாங்க

புது நட்பு கிடைத்திடுமே வாங்க – உங்க

பழைய நட்பை புதுப்பிக்கத்தான் வாங்க

இனிப்பு, காரம், காப்பி உண்டு வாங்க – மேலும்

கேலி, கிண்டல் நிறைய உண்டு வாங்க

வாங்க வாங்க பூங்காவுக்கு வாங்க – ஆட்டவா

ஆண்ட்ரு ஹேடன் பார்க்குக்தான் வாங்க

 

Summer so far…

Dear Ottawa Tamil Sangam members,

Every May and June, mostly girls who graduate grade 12 and going to university somehow convince their parents to arrange a party and I get invited to some. After reading a poem written by one of our members, Sabitha Rajan, I thought I should write one in English too. I know it is a bit late, I should have started when I was 5, not when I am 55.

So I wrote something, like a stock greeting, that any one can give to anyone who graduates and go to college.

That was the first mistake that I did, trying to write something in English.

Secondly I showed it Manu, one of my twin sons, who gave a quick glance and said “Don’t embarrass yourself dad, this sounds like something a second grader wrote”.

Giving up not being my virtue, I showed that to two retired head-mistress of higher secondary schools in India, soliciting their support.

They lowered the rating to “Grade 1” material and promptly threw my poem into waste bin.

Then I remembered I can always rely on our Ottawa Tamil Sangam members / friends who would definitely give me at least a pass grade.

Here it is >>>

From school you go to university
We wish you always prosperity

Life may take you East or West
We wish you always the best of best

Life may take you North or South
We wish you always healthy growth

Ups and downs may come across
Values learned will make you cross

Turns and twists may slow you down
Waver not, you’ll get your crown

Duedates and deadlines will stress you out
Yoga if you practice will get you out

God-given siblings and parents are with you
Carefully chosen friends and family are with you

Culture and tradition you have learned
Common sense you also gained

Life may make you run run run
Knowledge will make you win win win

We wish you always the best of best

Anbudan Anand (muruganandan)

To Shakthy Subramanian

Floor refinishing

தமிழி-நம்பி மருமகளே எம் வீட்டுத் திருமகளே

சக்தி சுப்பிரமணி, சார்லடின்(Charlotte) குடியரசி

காலி வீடு காத்திருக்கு ஒம்மகன நீ அனுப்பு – அவன்

காலில் தட்ட எதுவுமில்லே ஒம்மகன நீ அனுப்பு

ஓடி விளையாட ஒம்மகன நீ அனுப்பு- என்கூட

ஒளிந்து விளையாட ஒம்மகன நீ அனுப்பு

சறுக்கி விளையாட ஒம்மகன நீ அனுப்பு – என்கூட

சடுகுடு விளையாட ஒம்மகன நீ அனுப்பு

பாட்டிகதை பல சொல்வேன் ஒம்மகன நீ அனுப்பு

பத்திரமா பாத்துக்குவேன் ஒம்மகன நீ அனுப்பு

உண்ண வைப்பேன் உறங்க வைப்பேன் ஒம்மகன நீ அனுப்பு

பெருமாளின் திருவருளால் …

அடுத்து மகள்பிறப்பாள் அவளையுந்தான் நீ அனுப்பு