Category Archives: Travelogue

Canada – கனடா

இந்த மண்ணைப் பற்றி …

பாகம் 4 – ஆல்பெர்டா – பான்ப் (Banff)

அதிர்ஷ்டக்காரர்கள் ஆல்பெர்டா வாசிகள். ராக்கிஸ் மலைத்தொடர் முழுவதும், ஆங்காங்கே  மலை வசிப்பிடங்கள், ஓடைகள், குளங்கள், ஏரிகள். கேல்கரியில் இருந்து 90 நிமிடங்களில் பான்ப் அடைந்து விடலாம்.

calgary-to-banf

கொண்டை ஊசி வளைவுகள் இல்லை.
கிறுகிறுக்கவைக்கும் ஏற்ற இறக்கங்கள் இல்லை.
வித விதமான வடிவுகளில், வண்ணங்களில் பாறை மலைகள்,
அவை தாங்கும் வித்தியாசமான தாவரங்கள்,
நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், காடுகள், காட்டு வழிப்பாதைகள் –
மொத்தத்தில் ஒரு நாள் பயணத்தில் பூமியில் கிடைத்த சொர்க்கம்.
கண்வழி புகுந்து மனதை மயக்கும் மாய உலகம்

dsc02437

இயற்கை வரைந்த ஓவியங்கள்.

எங்கு நோக்கினும் எழில் மிகு காட்சிகள்

சென்ற இடங்கள் : ஜான்ஸ்டன் நீர்வீழ்ச்சி, லூயிஸ் ஏரி, மோரேன் ஏரி, மின்னவான்கா ஏரி, சல்பர் மலை, சான்சன் உச்சி மற்றும் சில சுற்றுலா தலங்கள்.

dsc02466dsc02467dsc02469dsc02471dsc02510dsc02511dsc02517dsc02531dsc02544

img_20160826_181823

உறை பனி உருகும் மலை முகடுகள் (Glacier Peaks)

 

மலைமேல் ஏறும் மின் இழுப்பான் (Gondola)

பார்த்து ரசிக்க மரப் பாதைகள், பாலங்கள், பார்க்குமிடங்கள் (Look out points)

நீலம், வெளிர் நீலம், இளம் பச்சை நீர் நிலைகள்

சுத்தமான காற்று மிதமான வெப்பம் (August)

பலவித உணவகங்கள், பருகிட மது வகைகள்

இறங்கவே மனமில்லை, ஒரு நாள் போதவில்லை

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்

அப்ப, ஒரு காணொளி (Video) ???? நீங்களே முடிவு சொல்லுங்கள்…

கண்டு களிக்க இங்கே சொடுக்கவும் >>> https://youtu.be/B3P20iwbREw

அன்புடன் ஆனந்த்

Advertisements

Canada – கனடா – 3

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

பாகம் – 3

டிரம்ஹெல்லர் – ஆல்பெர்டா (Drumheller, AB)

கொசுவும், கரப்பானும், குருவியும், காக்கையும், தேளும், பாம்பும், புழுவும், பல்லியும், பூரானும், சிப்பியும், சிலந்தியும், நத்தையும், நாகமும், மானும், மயிலும், அணிலும், ஆடும், மாடும், மனித இனமும் அழியவில்லை.

ஆனால், பயங்கர உருவமும், பலம் பொருந்திய உடலும் கொண்ட டைனசார்கள் இனமே அழிந்து விட்டது. பரவலாக சொல்லப்படும் காரணம் – வானத்தில் இருந்து விழும் விண்கற்கள். அந்த இனத்தின் எச்சமும், சொச்சமும், எலும்புக்கூடுகளும் (Fossils) உலகிலேயே மிக அதிகமாக ஒரே பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் – டிரம்ஹெல்லர் – ஆல்பெர்டா. மிகப் பெரும் அழிவைச் சந்தித்த இந்த பகுதிக்கு பேட்லேண்ட்ஸ் (Badlands) என்று பெயர்.

கேல்கரியில் இருந்து வடகிழக்கே சாலைவழி இரண்டு மணி நேரத்தில் (185 கி.மீ.) இருக்கிறது.

முதலில் பார்க்க வேண்டியது – ஹூடுஸ் ட்ரேய்ல் (Hoodoos Trail)

இலக்கை அடையும்வரை எழுதுவதற்கு எதுவுமில்லை.

செல்லும் வழியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை

சீரான சமவெளியில் விளைநிலங்கள், மாட்டுப்பண்ணைகள்,

ஆழ்துளைக் கிணறுகள், தானியக்கிடங்குகள்

அங்கொன்றும், இங்கொன்றுமாக கிராமங்கள்

வழிதவறி விட்டோமோ என்றுமனம் எண்ணுகையில்

சட்டென்று தோன்றும் சிற்றாறும் பள்ளத்தாக்கும்

கண்முன் விரியும் காணற்கரிய காட்சி

dsc02573dsc02574இயற்கை செதுக்கிய சிற்பங்கள்

காலம் காலமாக காற்றாலும் நீராலும் அரிக்கப்பட்டு

பூவுலகின் தொன்மைக்கு கட்டியம் கூறும்

மணற்குன்றுகள், பாறைபடிவங்கள்

ஓட்டிவந்த தேரை (காரை) ஓரங்கட்டி நிறுத்திவிட்டு

தாவித்தாவி மேலேறி உச்சிசென்று நோக்கினால்

ஆகா, உலகம் இவ்வளவு, அழகா என்ற எண்ணம் தோன்றும்

dsc02580

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்து ராயல் டைரெல் அருங்காட்சியகம் (Royal Tyrell Museum)

DSC02589.JPG

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பேரிடரால் மடிந்த

பெருமிருக இனம் – டைனசார்கள் (தொன்மாக்கள்)

புதைந்து கிடந்தது எலும்புகளை எடுத்து, சேர்த்து, கோர்த்து,

ஒட்டவைத்து, கூடாக உருவாக்கி (Skeleton) விரிவான

விளக்கங்களுடன் காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள்.

அவைகளின் பிரமாண்டம் பிரமிக்கவைக்கிறது.

படைக்கும் இயற்கையின் அழிக்கும் சக்தி மலைக்க வைக்கிறது.

dsc02597dsc02594

img_2830img_2832~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேட்லேண்ட்ஸில் பார்க்க வேண்டிய மூன்றாவது இடம் –

ஹார்ஸ்தீப் (Horse Thief) பள்ளத்தாக்கு. வேகமாக வீசும் காற்று ஆளைத் தூக்கும். குதிரைத் திருடர்கள் ஒருகாலத்தில் நிறைந்த இடமாம். ஒருபக்கம் ஹார்ஸ்சூ, மறுபக்கம் ஹார்ஸ்தீப் பள்ளங்கள். வளைவும், நெளிவுமாய், பாறையும் மணலுமாய் கண்ணுக்கு விருந்து. சறுக்கும் சரிவுகளில் இறங்கி அடிவாரம் செல்ல ஒற்றை அடிப் பாதைகள் உண்டு.

pano_20160827_190513

dsc02613dsc02612dsc02611

எங்கு நோக்கினும் புத்துணர்ச்சி தரும் பல நிறப் பாறைகள்.

ஒரு மழை பெய்தால் சகதியாகும் களிமண் படுகைகள்

முகத்தில் மோதும் சுத்தமான காற்று

மேலிருந்து நம்மை நோக்கும் மேகம்

திரும்ப மனமில்லை.

முக்கிய குறிப்பு >>> வழுக்காத காலனிகளும், வழுக்கினால் தூக்கிவிட நட்பும் உறவும் கட்டாயம் தேவை.

புசிக்கும் நேரம் வந்தவுடன் கப, கபவென்று பசிக்கும்.

ஆசிர்வதிக்கப்பட்டவர்களும்(எந்த நோயும் இல்லாதவர்கள், இல்லை என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்), சக்கரை நோய்க்கு மாத்திரை, இன்சுலின் போட்டு வாழ்ந்தாலும் வாழ்வோம், ஆனால் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, பொங்கல், ரொட்டி, சப்பாத்தி, சோறு இவைகளை விட மாட்டோம் என்பவர்களும் இங்கு செல்லுங்கள் >>>

http://www.madrascafe.ca/

மண்ணின் மைந்தர்கள் ஆக விரும்புவோர், மாமிசம் (இறைச்சி) மட்டும் எண்ணுவோர், உண்ணுவோர் இங்கே செல்லுங்கள் >>>
http://minassteakhouse.com/

http://pampasteakhouse.com/

 

அடுத்து Banf, AB…

அதுவரை அன்புடன் ஆனந்த்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tyrrellmuseum.com/

 

 

 

கனடா – Canada

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

ஆல்பெர்டா

பாகம் – 2

கேல்கேரி (Calgary) பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 

மொட்டைமாடித் தோட்டங்கள்,  முக்குக்கு முக்கு சிற்பங்கள் 

 செயற்கை நீருற்று, சுவர் முழுக்க செடி கொடிகள் 

ஏழாம் சாலையிலே எழில்மிகு மின்வண்டி (7th Avenue C-Train)

பகட்டான எட்டில் பலரக உணவகங்கள் (Stephan Avenue)

ஒன்பது நடுத்தெரு சந்திப்பில் உயர்ந்து நிற்கும் கோபுரம் (Calgary Tower)

பத்தாம் சாலைவரை பாதசாரி பாலங்கள் (+15 Skywalk)

நகர் மையம் முழுவதும் வானளாவிய கட்டிடங்கள் 

எண்ணெய் நிறுவனங்கள் எண்ணிலடங்கா அலுவலகங்கள் 

காப்பீட்டுக் கழகங்கள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள்  

கண்கவர் பூங்காக்கள், அருங்காட்சி  அகங்கள்  (Devonian Gardens, Glenbow Museum)

 பொழுது போக்கு அரங்குகள் (Entertainment district)

கேளிக்கை கூடாரங்கள் (Night Life district)

இரண்டு இடங்களிலும் இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்ததில்லை.

இளைய தலைமுறையை சிலநேரம் கண்டதுண்டு. நம்மைக் கண்டால் அடுத்த முறை இடத்தை மாற்றி விடுகிறார்கள். (வீட்டில் தான் உங்க மூஞ்சிய பாக்குறோமே,,,இங்கேயுமா? என்று அவர்கள் உள்மனது பேசுவது கேட்டது)

பிரஞ்சு மொழி பிரயோகம் கேட்கவேயில்லை 😉

நகரத் தந்தை (Mayor) நஹீத் நென்ஷி 

முதல் முஸ்லிம் மேயர் – ஒரு பெரிய வடஅமெரிக்க நகரத்துக்கு 

உணவுக்குப் பஞ்சமில்லை – பலவிதம், பலரகம், பலதரம் 
காசுக்கேத்த பனியாரம் 

மாட்டிறைச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் –
பாம்பு திங்கும் ஊரில் நடுத்துண்டு 

கேட்டு வாங்கி சாப்பிடு.
பிரேசில் நாட்டாரின் ஸ்டேக் உணவகங்கள் பிரபல்யம்.
தீயில் சுட்ட துண்டுகளை நம் தட்டில் தள்ளும் லாகவம் 
ஒரேவிலை அளவே இல்லை 

கேல்கரியில் ஒன்றே ஒன்றுதான் பார்க்க வேண்டும், முடியும் என்றால் ….
அது இந்த பாலம்தான் ...

dsc02621

அடுத்த வாரம் – டைனசார்கள் பற்றி 

அதுவரை அன்புடன் ஆனந்த் (முருகானந்தன்)

Canada – கனடா – இந்த மண்ணைப்பற்றி …

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

பாகம் – 1

ஆல்பெர்டா

alberta-canada

ஆல்பெர்டா – கனடாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று.

முல்லையும், மருதமும், குறிஞ்சியும், கொஞ்சம் பாலையும் உண்டு.

எண்ணைமண் (Oil Sands) நிறைந்த நிலம்.

கனிம வளங்களுக்கு குறைவில்லை. கடுங்குளிருக்கும் பஞ்சமில்லை.

மேற்கில் ராகிஸ் மலைத்தொடர் இதன் எல்லை (Rocky Mountain).

விளைநிலங்கள் ஏராளம், பண்ணைத்தொழில் பிரதானம்

தலைநகர் எட்மண்டன், எழில் நகர் கேல்கரி அல்லது கல்காரி (Calgary)

Calgary is a Connected City

DSC02418.JPG

விண்ணில் இருந்து நோக்கினும், மண்ணில் இருந்து நோக்கினும்

முதலில் கண்ணைக் கவர்வது நதி சார்ந்த நகர் மையம்

அழகழகான அடுக்குமாடிக் கட்டிடங்கள்

அமைதியாக ஓடுகின்ற ஆறு – பௌ ரிவர் (Bow River)

இயற்கை படைத்த நதியின் இரு கரையும்

மனிதன் படைத்த மரவனம் மலர் வனம்

dsc02378

இரவு பகல் பாராது நடை பயிலும் நன்மக்கள்

சிலர் நடை, சிலர் ஓட்டம், சிலர் காலில் சக்கரம் (Roller Skates, Skate Board)

dsc02376

இடையறாத உடற்பயிற்சி இடைவிடாத நடைப்பயிற்சி

விளைவு,,,ஆணும் பெண்ணும் அத்தனை அழகு

கோடையில் நடை, ஓட்டம், குளிரில் பனிச்சறுக்கு

எந்தப்பருவத்திலும், எல்லாப்பருவத்தினரும் நடக்கத் தோதாக

நகர் மத்தி முழுவதும் ஊசி ஊசியாக நிற்கும்

உயர் கோபுரங்களை நூல் கோர்ப்பது போல

15 அடி உயரத்தில் 70 க்கும் மேலான

பகட்டான பாதசாரி பாலங்கள்

img_20161122_134148

(Climate Controlled, Covered, Pedestrian Bridges – + 15 Skywalk)

ஆங்காங்கே உணவுச் சந்தைகள், உடற்ப்பயிற்சி சாலைகள்

சிறு வணிகர்கள், சலவை அகங்கள், பல் மருத்துவர்கள்

இடை இடையே சிங்காரச் சிற்பங்கள்

மிகமிகக் குறைவாக கையேந்தும் வறியவர்கள்

நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை

எங்கு நோக்கினும் பாரதி கண்ட புதுமைப்பெண்கள்

கம்பன் சொன்ன “இல்லையோ” என எண்ணவைக்கும் இடைகள்

அழகுமிகு சிகை அதரங்களில் நகை

அலைபாயும் விழி தடையில்லா மொழி

ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை

காளை ஏறும் வீரவிளையாட்டு பூமி அல்லவோ (Calgary Stampede)

பலர் கட்டுடல் காளைகள் வேழம் நிகர்த்த விரி மார்பு கொண்டவர்கள்

விரைவு நடை வேங்கைகள்

நேர்த்தியான உடை, நேரான நடை

ஒட்டிய வயிறு கொண்ட விருகோதரர்கள்

அதிதீவிர உடற்பயிற்சி அதன் விளைவு

பலபேருக்கு கைகட்டு கால்கட்டு – ஆனால்

அதைப்பற்றி கவலையில்லா மனப்போக்கு

ஓதிய மரம் பெருத்தால் உத்தரத்துக்கு உதவாது

என்று நன்கு உணர்ந்தவர்கள்

மின்னுயர்த்தி (Elevators) இருந்தாலும்

மாடிப்படிகளைத் தாவிக்கடப்பவர்கள்

மொத்தத்தில், இந்த பத்தொன்பது ஆண்டு வடஅமெரிக்க வாழ்க்கையில்

நல்லுடல் கொண்டோரை நிறைய வாழும் நகரம் கேல்கரி

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

Smoky Mountains Summer Vacation

ஸ்மோக்கி மௌண்டன்ஸ் சுற்றுப்பயணம்

காலில் சக்கரம் என்று அம்மா சொல்வார்கள், உண்மையா பொய்யா என்று தெரியாது. உள்ளங்கால் ஊறியது, ஊர் சுற்ற வேண்டுமென்று முடிவு செய்தேன். The lure of endless American highways got the better of me. It took hours and hours of dish washing and lawn mowing to convince my better half, Latha to accompany me on the 4000 kms road trip, this time to The Great Smoky Mountains, Tennessee. We took the circuitous route stopping at Niagara Falls to admire the Falls then at Pittsburgh to worship the God, Columbus for job and Cincinnati for window shopping at Gemini Jewelers.

July-2013-road-trip

Niagara falls was, is and will always be amazing any time of the day, month or year. I went on the newest attraction Skywheel to satisfy the child in everyone of us.

ImageImage

————————————————————————————————————————————————————————

It was not even a week and we both craved for some dosai, sambar and chutney. Omnipotent and omnipresent Google God helped us find http://www.ammaskitchen.com/ where we had nice South Indian Vegan food, very bland, not spicy at all. Gulab Jamoon in hot syrup was the best item in the buffet.

ImageImage

Image

Cincinnati also has a beautiful Hindu temple, called Devdham of North America http://www.cincinnatitemple.com/

Image

 —————————————————————————————————————————————————-

Latha was not happy with the choice of hotel near the Ohio riverfront. Ohio river divides Ohio and Kentucky. Newport on the Kentucky side was beautiful with walkways and galleria with shops and cinema. View from the pedestrian purple bridge was pleasing.

ImageImage

 ——————————————————————————————————————————————————————————————–

 The 5 hour drive from Cincinnati to Pigeon Forge, TN was very pleasant, except the last few miles where the traffic was bumper to bumper for the last 45 minutes. 3 lanes leading up to the mountain resort town of Gatlinburg was full of automobiles of every kind known to man. But it was worth the drive and the troubles.

Great Smoky Mountains National Forest was formed from land donated by North Carolina and Tennessee. Smoky Mountains has so much to do and see, 3 days were not enough at all. One can drive, hike, cycle, swim, tube, fly to enjoy the breathtaking views and vistas of the mountain range.

ImageImageImageImageImage

ImageImageImage

ImageImage

The drive to Clingmans Dome was uneventful, but the winding and narrow roads to Cades Cove and Roaring Fork Motor Nature Trail were a bit scary. I think I may have to change the brake shoes of my car sooner than expected.

When it comes to food, you would all agree with me. US has more variety, less expensive, tastier and bigger portions.

Image

 —————————————————————————————————————————————————————–

We always end our trip with a visit to a relative or friend’s home so that we can detoxify our system with home made South Indian delicacies. This trip is no exception.

வனிதா குமார் வீட்டில் வகை வகையான உணவுடன் வித விதமாய் விருந்து

வெங்கட் ஸ்ரீதேவி வீட்டில் வெல்லப்பனியாரமும், வெள்ளைப்பனியாரமும் மாறி மாறி சாப்பிட்டோம்.

Image

விருந்து பனியாரத்தில் ஆரம்பித்து பரோட்டாவில் தொடர்ந்தது…
காரசார காளான் குருமா, அந்த சுவை வேறெங்கும் வருமா?

ImageImage

—————————————————————————————————————————————————————————————————–

After a long, long time met couple of my Thiagarajar College of Engineering friends, had dinner with Rajasekar and Mahesh, relived “Madurai Moments”.

==================================================================================================================

One of the main goals of this trip was to get my wife away from the kitchen and bring out the best in her. I think the mission has been accomplished, See her smile and dance in the Smoky Mountain rain >>>

Image

To Florida by road…

Who wants to go on a long road trip? That is one of the questions, heads of the household or the one who has the car key, routinely ask and always get an enthusiastic “IIII, MEEE, WEEE” answer. I asked the same question over dinner during November and all I got in return was pin drop silence for the next 5 minutes. I had to admit, I am a bit late (10, 15 years) in popping this kind of question. My sons are 23 now. Then I realized SDS struck my family again – “Selective Deafness Syndrome” which is usually followed by ‘no eye contact’ or ‘blank stare’ side effect. SDS usually starts with my wife and quickly spreads to my children whenever I exhibit signs of brilliance or unmatched intelligence for example when I suggested driving around all 5 great lakes few years back.

I demanded a reason for their response. I really wanted to know whether it was my driving skill or my ability or the lack of it to start and maintain a conversation. None was offered to console me because either they could not come up with one immediately or did not want to offend me. I spent the next 2 weeks trying to convince my family how important it is to spend time together (other than dinner, movie, TV etc.). After 2 weeks, Sibi gave a half-hearted “YES” response and Latha and Manu a firm “NO”. A compromise solution was reached. The no-sayers or the non-believers (Manu and Latha) would fly to Orlando and the yes-sayers or the brave and adventurous types (Sibi and I) would drive to Florida and back.

Re-bonding with my wife and sons was not the only reason why I wanted to drive to Florida. Testing the newly leased Audi Quattro Q7 and meeting friends and relatives who live all over USA were other factors that pushed me closer and closer to a road trip. America’s endless highways, bridges and tunnels always fascinate me. My previous two vacations to New Brunswick and Prince Edward Island in the East and British Columbia in the West were by plane, so this time I wanted to drive, drive and drive forever to the South end of Florida, which is Key West.

IMG_0616

So we left Ottawa in the midst of a snow storm on 21st December, 2012. Just as we were pulling out of our driveway, Latha whispered something to Sibi. After few minutes, I couldn’t help asking him about that secret exchange between mom and son. He said in a nonchalant voice “Whatever happens, don’t come back alone leaving your dad stranded on the road”. மணந்தவள் மகனிடம் சொல்லியிருக்கிறாள், “அப்பா ‘ஒரு மாதிரிதான்’ அதற்காக வண்டியில் இருந்து இறக்கிவிட்டு விட்டு வந்திராதே என்று”. Though I trust my son, as an added precaution, I made sure the car key is always with me, even when he was driving for the rest of the trip. Thanks to the auto start option on many cars, the key can be in your pocket and car can still start and run as long as the car senses the key inside the car.

It was not pretty for the first 5 hours. Every few kilometers (miles) we saw some car in the median or right side of the road in the ditches, covered in snow, people waiting for tow trucks or police. Those sights made us even more cautious. We crossed the border at Thousand Islands and after answering few questions by the US Customs and Immigration officer who was friendly and wished us a good vacation, we were on I-81 which would take us through states of New York, Pennsylvania, Maryland and Virginia. We stopped couple of times for gas and food and took turns at the wheel. One of the goals in this trip was to enjoy local food, not the usual fast food at stop overs. You can see those posts in my Facebook account soon.

We stayed at our relative’s home for the first night in Herndon, Virginia. அடுத்த நாள் –

காலையில் காப்பி கேப்பைமாவு புட்டு

அரிசிமாவு தோசை அதுகூட சட்னி

மறுத்தாலும் விடவில்லை மைத்துனரும் மனைவியும்தான்

மாறிமாறி உபசரித்து மனம்மகிழ வைதார்கள், இல்லை வைத்தார்கள்

For lunch, met couple of friends (Sivanathan and Dilliraj) in and around Herndon, Virginia whom I haven’t met since 2000. Our next stop was Atlanta, Georgia to meet my college senior Narendran who helped me get my first job in 1979 and my nephew’s family.

இருவர் மூவரான கதை இயம்பிடுவேன் கேளுங்கள்

அட்லாண்டா அக்கா மகன் ஆனந்தைப் பார்க்க, பேர்பேக்ஸ் தங்கை மகன் அரவிந்தும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். மகனுக்கும் மருமகனுக்கும் நடுவில் நான். அடுத்த தலைமுறையின் எண்ணங்களை, சிந்தனைகளை கேட்டுக் கேட்டு மனதில் சேர்த்து வைத்துக் கொண்டேன்.

We stayed at Hilton Garden Inn, Blacksburg, Virginia for a night before driving to Atlanta. Blacksburg is a beautiful town at the Eastern slopes of Blue Ridge Mountain range, home of Virginia Tech.

அட்லாண்டாவில் அக்காவின் பேரன் ஈசானை அள்ளி எடுத்து அணைத்துக் கொஞ்சி உச்சி முகர்ந்தேன். அவன் கண்களில், கன்னக் கதுப்பில், கள்ளமில்லா சிரிப்பில் எங்கள் பரம்பரையின் மூலக்கூறைத் தேடினேன்.

இரவில் இட்லி மணம் , காலையில் தோசை மணம் .

சக்தியின் சமையலில் நெல்லை மணம்.

We left Atlanta before noon and reached Orlando right in time to receive Latha and Manu at the airport. In between we stopped at Gainesville, Florida to meet another relative (Pappu and Chenthuran) from Madurai.

Now that the family is together again in the same car, we spend the next four days in Orlando, Key Largo, Key West, Miami and Fort Lauderdale to enjoy as much fun, sun, sand and beach before Manu and Latha flew back to Ottawa by Air. Though there are hundreds of hotels in Orlando, we chose the brand new Hampton Inn and Suites near Orlando Airport. We visited Shiva Vishnu temple of South Florida and thanked God for this wonderful travel opportunity. After the temple visit, once again it is dosa time at Udipi.

Manu did the ‘structured swim with dolphins’ at dolphin plus which was to fun to watch. Key Largo Marriott Beach Resort had its own beach resort, boats and dotted with comfortable hammocks. We did not like the Courtyard Marriott at Fort Lauderdale due to very high valet parking charges and the fact that I was not recognized as a loyalty member.

Sibi and I hit the road again, stopped at Daytona Beach for couple of hours, At Daytona Beach, we can actually drive on the beach for miles and miles at 10 mph. Then we drove through states of Georgia, South and North Carolina, stayed overnight at Fayetteville, North Carolina. Next day we were back in Herndon, Virginia to celebrate New Year with Kumar, Vanitha, Sudharsana and their friends. Easiest way to gain weight is to stay at your in-law’s home. Vanitha and Kumar made sure we were always full with food.

ஊறப்போட்டு உளுந்தரைத்து
உப்பு காரம் அளவா சேர்த்து
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
பொன்னிறமா பொரிச்செடுத்து
வட்டில் நிறைய வடை தந்த
வனிதாவே, நீ வாழ்க.

வதக்கி அரச்ச மிளகா சட்னி
வாசமான மாவு தோசை
சாதா 3, முட்டை 1
ஊற்றிக்கொடுத்து உபசரித்த
குமாருக்கும் எங்கள் நன்றி

To summarize, 12 days, 8 states, 6900 kms, reliable German engineering (Audi Q7) one amazing co-pilot(my son) – met long lost friends, made new ones, spend time with relatives, kissed a new born child, enjoyed variety of local food, beaches, nice hotels, bridges, tunnels, tolls, snow, rain, rolling hills, vast plains, fast highways, one beautiful, calm and quite temple (http://www.sfshivavishnu.org/), watched Manu Anand’s close encounters with a dolphin, Universal City Walk, Disney Boardwalk, Biscayne, Daytona and Key West beach walk – overall, a well-deserved break from back-breaking work.

On 1st of January, 2013 when we stopped at the Canadian side of the customs and immigration, the lady officer was surprised and disappointed that we don’t have cigarettes, alcohol, gifts, purchases, drugs, arms and ammunitions, fruits and vegetables or food. All we had was very good memories and a very good feeling that father and son survived each other in a car for more than 80 hours together.

Florida road trip Dec-2012

பொமோனா போகலாமா – Shall we go to Pomona ?

Dear friends and relatives, I like to share with you our recent trip to New York, New Jersey areas of our southern neighbor, USA, a great country, (People love and hate this country for the same reason, being a great country).

Now that you have earned and saved enough money this year, you should pamper yourself by taking this trip (minimum 2 days). It is still not too late to enjoy the fall colours when you drive through upstate New York.

The first two places we visited were Sri Ranganatha Temple at Pomona, NY and the Woodbury Common Premium Outlet Mall at Central Valley, NY.

இம்மைக்கு முதலிடமா இல்லை மறுமைக்கு முதலிடமா என்று எனக்கும் லதாவுக்கும் எழுந்த வாக்குவாதத்தில் நான் வென்று முதலில் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்றோம்.

பிட்ஸ்பர்கிலும் ப்ரிட்ஜ்வாடரிலும் நிற்பவர்
போமொனோவில் பள்ளிகொண்டிருக்கிறார்
கோவிலில் நுழைந்தவுடன் நேர் எதிரே
அற்புதன் அனந்த சயனன் ஆதிபூதன் மாதவன்

ஒரு பக்கம் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீநிவாசன் ஸ்ரீதேவி
மறு பக்கம் ஆண்டாள, லக்ஷ்மி நரசிம்மர், ராம் பரிவார்
முதற்கடவுள் விநாயகனையும் நாம் கடைசியில் சுற்றி வரும்
நவகிரகங்களையும் காணவில்லை ஏனோ தெரியவில்லை

உலகளந்த பெருமாள் ஒருகை தலைக்கு வைத்து  உறங்குகின்ற கோலத்தில்
முருகானந்தன் எதற்கு வந்தான் என்ற மந்தஹாசம் அவர் முகத்தில்

சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வா என்று அவர் சொல்வதுபோல் உணர்ந்தேன்

மெட்ராஸ் போட் கிளப் ரோட்டில் எனக்கும் ஒரு வீடு வேண்டும் என்று கேட்டு வைத்தேன் -தூக்க கலக்கத்தில் சரி என்று சொல்வார் என்ற நம்பிக்கையில் – பார்ப்போம்

கண்களுக்கும் உணர்வுக்கும் விருந்தளித்த வடமதுரை பிறந்தான் (கண்ணன்)

இந்த தென்மதுரைக்காரன் வயிற்றுக்கும் வஞ்சனை செய்யவில்லை

மிளகு மணக்கும் வெண்பொங்கல் நெய் மிதக்கும் சர்க்கரைப்பொங்கல்

கதம்ப சாம்பார் சாதம் கூடவே கெட்டித் தயிர்சாதம்  – அனைத்தும் இலவசமாக

உருவ வழிபாட்டில் உடன்பாடில்லாத ஏனைய நண்பர்களும் போகவேண்டிய இடம் இந்த பொமோனா – Just to enjoy the food and the scenery, rolling hills, lakes and forests.

Now that we have taken care of our next life, we thought we should think about this life and stopped at Woodbury Commons Premium Outlet Mall. You would appreciate the price and the variety of merchandise that you can buy here. A humble warning though – You will re-discover your wife with all that long lost smiles, but this will also set back your savings account by a few thousand dollars.

Most women would like to stay here in Central Valley near the mall for the next day shopping spree. Though there are several lodging options, I like Hampton Inn for their hot breakfast.

Then we had a pleasant surprise. We found a little known South Indian restaurant Sri Ganesh Dosa Place at 209 Littleton road, Parsipany, New Jersey, about 40 minutes from the temple, where 65 different dosas are served with piping hot sambar, coconut and tomato chutney. You have other choices too like poori, chapathi, roti, rice thali etc.

பெருமாளை சேவிச்ச மாதிரியும் ஆச்சு பெசரட்டு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு

கிடந்தவரைக் கண்ட கண்கள் பின் நிற்பவரைத் தேட ஆரம்பித்தன. அங்கிருந்து நேராக ப்ரிஜ்வாட்டர்   சென்று “அடி பணிந்தால் அரவணைப்பேன்” எனச் சொல்லாமல் சொல்லி விளங்க வைக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம்.

ரெண்டு பக்கம் காடு நடுவுல ரோடு
யு.எஸ். ஹை வே இருநூத்தி ஆறு
பிரிட்ஜ்வாட்டர் என்னும் ஊரு
நெடியவன் திருமேனி வந்து நீ பாரு

அங்கே விட்டுப்போன விநாயக தரிசனம் இங்கே கிடைத்துவிட்டது. அம்பிகைக்கு கண்ணைப் பறிக்கும் அழகில் ஆடை. நிம்மதியான தரிசனம்.

மனைவியை மார்பில தாங்குகிறார் அந்த மாயவன்
அவருக்கு கோவில் கட்டும் மனிதர்களோ
ஸ்ரீதேவி, பூதேவி சிற்பங்களை சில அடிகள்
பின்னே தள்ளிக் கட்டுகிறார்கள், ஏன்

கிழே மடப்பள்ளியில் மிகக் குறைந்த விலையில் சுவையான தென்னிந்திய உணவுகள் .

நிறைவான நினைவுகளோடு ஆட்டவா திரும்பினோம்

Some useful links for you >>>

http://ranganatha.org/     –

8 Ladentown Rd, Pomona, New York 10970
Tel: (845) 364-9790
===========================================================

http://www.premiumoutlets.com/outlets/outlet.asp?id=7

60 Centre Drive, Central Valley, NY, United States 9.4 mi N
+1 845-782-9600 ‎ · hamptoninn.hilton.com
============================================================
http://www.venkateswara.org/index.shtml
1075 Route 202/206, Bridgewater, NJ-08807
Ph: (908) 725-4477
==============================================================
அன்புடன் ஆனந்த்

Back in NY !

Magnificent.. that is how I would describe when my plane approched Newark, NJ. Sorry friends, I am not talking about NJ. It is about NY, the city everyone loves and hates for the same reason – big and beautiful.
The river, the bridges, miss.liberty, empire state building and all other land marks. I could even see the store where I am going to buy the next lottery ticket which is going to make me a multi-millionnaire !!!

Tarrytown

Tarrytown is not a scary town !
Though it is near Sleepy Hollow !
Not shallow either, but with lots of ups and down !
So close to NYC, but still looks like a sleepy town !

Mahalaksmi Temple, Hockessin, DE, USA

பணிக்கிடையே பக்தியும் தேவை தானே

பக்கத்தில் உள்ள Hockessin, DE சென்றேன்

கம்பீரமாய் அமர்ந்த கோலத்தில் அன்னை மகாலக்ஷ்மி

பக்கத்தில் பாலகன் போல் தோற்றமளிக்கும் பாலாஜி

என்னாட்டவர்க்கும் இறைவனாம் எங்கள் சிவன்

வினை தீர்க்கும் விநாயகன் அவன் தம்பி வேலவன்

தந்தை சொல் கேட்ட ராமன், துணைவி, தம்பி, பக்தன்

காதல் தெய்வம் கண்ணன், ராதை

சாஸ்தா சபரிமலை ஐயப்பன், சகல சுகம் தரும் சத்யநாராயணன்

நாம் நம்பும் நவகிரகங்கள் அனைவரையும் வணங்கி

அருளும் பெற்றேன் துளசி மணக்கும் தீர்த்தம் பெற்றேன்

பசிக்கு தயிர்சாதம் ருசிக்கு ரவாகேசரி பிரசாதம்

இரண்டுமே பிரமாதம்