Blog Archives

Mutton Chops – Madurai Style

நேற்று இரவு என்ன உணவு?
மதுரை மட்டன் சாப்ஸ்
என்னென்ன வேண்டும்?
சமைக்க – சாப்ஸ் – 3/4 கிலோ
வறுக்க – நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
                    பொடியா நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 2
ஊறப்போட – தயிர் – 3 மேசைக்கரண்டி
                             மஞ்சப்பொடி – 1/2 தேக்கரண்டி
                             மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
                             ஏலம், பட்டை, கிராம்பு பொடி – 1/2 தேக்கரண்டி
                             உப்பு – 2 தேக்கரண்டி
                             எலுமிச்சைச்சாறு – 2 தேக்கரண்டி
மேலே தூவ – மிளகு – 1/2 தேக்கரண்டி
                            சோம்பு – 1/2 தேக்கரண்டி
எங்கே வாங்கினேன்?
சுல்தான் சூப்பர் மார்க்கெட், ஆட்டவா, கனடா
சாப்ஸ் விலை எவ்வளவு?
CAD$22 (INR 1130/=) Was it worth? YES, every cent. Meat was fresh and tender and my sons loved it.
The Labenese butcher was the funniest butcher I have ever met.
செய்முறை யாரோடது?
கூட்டு முயற்சி – “பெத்தவ நானு, என் மகனுகளுக்கு எப்படி பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா?” என்று அவள் சொல்ல,
“சாப்பிடுவதற்கே உயிர் வாழும் எனக்குத் தெரியாதா?” என்று நான் சொல்ல……அரை மணிநேரம் சண்டை போட்டு, சமாதானம் ஆகி
சமரசமா போயி, பிறகு அவள் சொல்லச்சொல்ல, நான் சமைத்தேன். (ஆண்களுக்கு ஒரு சின்ன அறிவுரை – திருநெல்வேலி மாவட்டத்தில்
பொண்ணு எடுக்காதீங்க, ரொம்ப மிரட்டுறாங்க). நம்ம, கதையை எப்படி ஆரம்பிச்சு, எங்கிட்டு கொண்டு போனாலும், முடிவு “அவுங்க” கைலேதானே !
சரி, வாங்க சமைப்போம் – ஒரு மணி நேரத்தில் உணவாகப் போகும், தோள் பகுதி துண்டுகளை, அன்போட, கொஞ்சம் உப்பு, மஞ்சப்பொடி போட்டு நல்லா கழுவிக்கோங்க.
ஏலம், பட்டை, கிராம்பு வறுத்து, அரை அல்லது முக்கால் தேக்கரண்டி வருமளவு பொடிச்சு, மேலே “ஊறப்போட” பகுதியில் சொல்லியுள்ள பொருட்களுடன் சேர்த்து, மட்டனை நன்றாக “மேரிநேட்” செய்யுங்க. (I left it for 2 hours).
பிறகு கொஞ்சமா தண்ணி ஊத்தி, குக்கரில் 2, 3 விசில் வரும் வரை வேக வைத்து, ஆற விட்டு, வடச்சட்டியில் எண்ணெய் விட்டு, காயவிட்டு, சிவப்பு வெங்காயத்தை மேலும் சிவக்கவிட்டு img_20170206_183247img_20170206_183553mutton-chops-7-2-2017சாப்ஸ் துண்டுகளை அலுங்காமல் பரப்பி, குறை தீயில், தண்ணி சுண்டும்வரை வறுத்து (புரட்டி போட மறக்காதீங்க), புதுசா வறுத்து அரைச்ச சோம்பு, மிளகுப் பொடி தூவி, இறக்கி வைங்க…இதுவரை பேசாத உங்க
பக்கத்து வீட்டு பங்கஜம் அக்கா, தேடி வந்து உங்ககிட்டே பேசிட்டு போவாங்க…:-)
அப்புறம் என்ன, கறி சாப்பிடாத “அம்மாவை” , பக்கத்துலே உட்காரவச்சு, பாக்கவச்சுகிட்டே பகாசுரர்கள் மூணு பேரும் முக்கால் கிலோ கறியை பங்கு போட்டு சாப்பிட்டோம்.

Canada – கனடா

இந்த மண்ணைப் பற்றி …

பாகம் 4 – ஆல்பெர்டா – பான்ப் (Banff)

அதிர்ஷ்டக்காரர்கள் ஆல்பெர்டா வாசிகள். ராக்கிஸ் மலைத்தொடர் முழுவதும், ஆங்காங்கே  மலை வசிப்பிடங்கள், ஓடைகள், குளங்கள், ஏரிகள். கேல்கரியில் இருந்து 90 நிமிடங்களில் பான்ப் அடைந்து விடலாம்.

calgary-to-banf

கொண்டை ஊசி வளைவுகள் இல்லை.
கிறுகிறுக்கவைக்கும் ஏற்ற இறக்கங்கள் இல்லை.
வித விதமான வடிவுகளில், வண்ணங்களில் பாறை மலைகள்,
அவை தாங்கும் வித்தியாசமான தாவரங்கள்,
நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், காடுகள், காட்டு வழிப்பாதைகள் –
மொத்தத்தில் ஒரு நாள் பயணத்தில் பூமியில் கிடைத்த சொர்க்கம்.
கண்வழி புகுந்து மனதை மயக்கும் மாய உலகம்

dsc02437

இயற்கை வரைந்த ஓவியங்கள்.

எங்கு நோக்கினும் எழில் மிகு காட்சிகள்

சென்ற இடங்கள் : ஜான்ஸ்டன் நீர்வீழ்ச்சி, லூயிஸ் ஏரி, மோரேன் ஏரி, மின்னவான்கா ஏரி, சல்பர் மலை, சான்சன் உச்சி மற்றும் சில சுற்றுலா தலங்கள்.

dsc02466dsc02467dsc02469dsc02471dsc02510dsc02511dsc02517dsc02531dsc02544

img_20160826_181823

உறை பனி உருகும் மலை முகடுகள் (Glacier Peaks)

 

மலைமேல் ஏறும் மின் இழுப்பான் (Gondola)

பார்த்து ரசிக்க மரப் பாதைகள், பாலங்கள், பார்க்குமிடங்கள் (Look out points)

நீலம், வெளிர் நீலம், இளம் பச்சை நீர் நிலைகள்

சுத்தமான காற்று மிதமான வெப்பம் (August)

பலவித உணவகங்கள், பருகிட மது வகைகள்

இறங்கவே மனமில்லை, ஒரு நாள் போதவில்லை

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்

அப்ப, ஒரு காணொளி (Video) ???? நீங்களே முடிவு சொல்லுங்கள்…

கண்டு களிக்க இங்கே சொடுக்கவும் >>> https://youtu.be/B3P20iwbREw

அன்புடன் ஆனந்த்

Canada – கனடா – 3

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

பாகம் – 3

டிரம்ஹெல்லர் – ஆல்பெர்டா (Drumheller, AB)

கொசுவும், கரப்பானும், குருவியும், காக்கையும், தேளும், பாம்பும், புழுவும், பல்லியும், பூரானும், சிப்பியும், சிலந்தியும், நத்தையும், நாகமும், மானும், மயிலும், அணிலும், ஆடும், மாடும், மனித இனமும் அழியவில்லை.

ஆனால், பயங்கர உருவமும், பலம் பொருந்திய உடலும் கொண்ட டைனசார்கள் இனமே அழிந்து விட்டது. பரவலாக சொல்லப்படும் காரணம் – வானத்தில் இருந்து விழும் விண்கற்கள். அந்த இனத்தின் எச்சமும், சொச்சமும், எலும்புக்கூடுகளும் (Fossils) உலகிலேயே மிக அதிகமாக ஒரே பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் – டிரம்ஹெல்லர் – ஆல்பெர்டா. மிகப் பெரும் அழிவைச் சந்தித்த இந்த பகுதிக்கு பேட்லேண்ட்ஸ் (Badlands) என்று பெயர்.

கேல்கரியில் இருந்து வடகிழக்கே சாலைவழி இரண்டு மணி நேரத்தில் (185 கி.மீ.) இருக்கிறது.

முதலில் பார்க்க வேண்டியது – ஹூடுஸ் ட்ரேய்ல் (Hoodoos Trail)

இலக்கை அடையும்வரை எழுதுவதற்கு எதுவுமில்லை.

செல்லும் வழியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை

சீரான சமவெளியில் விளைநிலங்கள், மாட்டுப்பண்ணைகள்,

ஆழ்துளைக் கிணறுகள், தானியக்கிடங்குகள்

அங்கொன்றும், இங்கொன்றுமாக கிராமங்கள்

வழிதவறி விட்டோமோ என்றுமனம் எண்ணுகையில்

சட்டென்று தோன்றும் சிற்றாறும் பள்ளத்தாக்கும்

கண்முன் விரியும் காணற்கரிய காட்சி

dsc02573dsc02574இயற்கை செதுக்கிய சிற்பங்கள்

காலம் காலமாக காற்றாலும் நீராலும் அரிக்கப்பட்டு

பூவுலகின் தொன்மைக்கு கட்டியம் கூறும்

மணற்குன்றுகள், பாறைபடிவங்கள்

ஓட்டிவந்த தேரை (காரை) ஓரங்கட்டி நிறுத்திவிட்டு

தாவித்தாவி மேலேறி உச்சிசென்று நோக்கினால்

ஆகா, உலகம் இவ்வளவு, அழகா என்ற எண்ணம் தோன்றும்

dsc02580

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்து ராயல் டைரெல் அருங்காட்சியகம் (Royal Tyrell Museum)

DSC02589.JPG

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பேரிடரால் மடிந்த

பெருமிருக இனம் – டைனசார்கள் (தொன்மாக்கள்)

புதைந்து கிடந்தது எலும்புகளை எடுத்து, சேர்த்து, கோர்த்து,

ஒட்டவைத்து, கூடாக உருவாக்கி (Skeleton) விரிவான

விளக்கங்களுடன் காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள்.

அவைகளின் பிரமாண்டம் பிரமிக்கவைக்கிறது.

படைக்கும் இயற்கையின் அழிக்கும் சக்தி மலைக்க வைக்கிறது.

dsc02597dsc02594

img_2830img_2832~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேட்லேண்ட்ஸில் பார்க்க வேண்டிய மூன்றாவது இடம் –

ஹார்ஸ்தீப் (Horse Thief) பள்ளத்தாக்கு. வேகமாக வீசும் காற்று ஆளைத் தூக்கும். குதிரைத் திருடர்கள் ஒருகாலத்தில் நிறைந்த இடமாம். ஒருபக்கம் ஹார்ஸ்சூ, மறுபக்கம் ஹார்ஸ்தீப் பள்ளங்கள். வளைவும், நெளிவுமாய், பாறையும் மணலுமாய் கண்ணுக்கு விருந்து. சறுக்கும் சரிவுகளில் இறங்கி அடிவாரம் செல்ல ஒற்றை அடிப் பாதைகள் உண்டு.

pano_20160827_190513

dsc02613dsc02612dsc02611

எங்கு நோக்கினும் புத்துணர்ச்சி தரும் பல நிறப் பாறைகள்.

ஒரு மழை பெய்தால் சகதியாகும் களிமண் படுகைகள்

முகத்தில் மோதும் சுத்தமான காற்று

மேலிருந்து நம்மை நோக்கும் மேகம்

திரும்ப மனமில்லை.

முக்கிய குறிப்பு >>> வழுக்காத காலனிகளும், வழுக்கினால் தூக்கிவிட நட்பும் உறவும் கட்டாயம் தேவை.

புசிக்கும் நேரம் வந்தவுடன் கப, கபவென்று பசிக்கும்.

ஆசிர்வதிக்கப்பட்டவர்களும்(எந்த நோயும் இல்லாதவர்கள், இல்லை என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்), சக்கரை நோய்க்கு மாத்திரை, இன்சுலின் போட்டு வாழ்ந்தாலும் வாழ்வோம், ஆனால் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, பொங்கல், ரொட்டி, சப்பாத்தி, சோறு இவைகளை விட மாட்டோம் என்பவர்களும் இங்கு செல்லுங்கள் >>>

http://www.madrascafe.ca/

மண்ணின் மைந்தர்கள் ஆக விரும்புவோர், மாமிசம் (இறைச்சி) மட்டும் எண்ணுவோர், உண்ணுவோர் இங்கே செல்லுங்கள் >>>
http://minassteakhouse.com/

http://pampasteakhouse.com/

 

அடுத்து Banf, AB…

அதுவரை அன்புடன் ஆனந்த்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tyrrellmuseum.com/