Blog Archives

Methi Paneer

கடைலே வாங்குன பனீரும், காஞ்ச வெந்தயக்கீரையும்

தேவையான பொருட்கள்:
பனீர் – 200 கிராம்
இதழ், இதழாய் வெட்டிய வெங்காயம் – 1
கலர் கலராய் குடமிளகாய் – 200 கிராம்
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப
மிருதுவாக்க, ஊறவைக்க தயிர் – 4 மேசைக்கரண்டி
சுவைகூட்ட, காய்ந்த வெந்தயக்கீரை – கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:
மனைவி சொன்னப்ப கேட்கவில்லை, ஆனால் ஒரு நாய்க்குட்டி என்னை முகநூல் பக்கமே வரவிட மாட்டேங்குது,,,என்ன செய்யறது, சொல்லுங்க,,,,
புது வருஷத்தின் முதல் பதிவு,,,அனைவருக்கும் வணக்கம்,,,
மின்னல் வேகத்தில் கலக்கலான ஒரு பனீர் வதக்கல்

பொடிகளுடன் தயிர் சேர்த்து, பனீரை ஒரு அரைமணி நேரம் ஊறவச்சு,
காய்ஞ்ச எண்ணைலே சோம்ப வதக்கிக்கிட்டு,
பொறவு குடமிளகாய் வெங்காயம் போட்டு பொரட்டிக்கிட்டு, பாதி வெந்தவுடன், ஊறவச்ச பனீரை சேர்த்து கிண்டி விட்டு,
கடைசிலே காய்ஞ்ச வெந்தயக்கீரை தூவி இறக்கி வச்சு,
முகநூலில் ஊர்பார்க்க படமும் எடுத்துக்கிட்டு,
பொறந்த வீடு போனவளை மனதுக்குள் திட்டிவிட்டு
——?????? அப்புறம் என்னா செஞ்சேன்னு ஒன்னையாவது நீங்க சொல்லுங்க,,,சரியா?

IMG_20180125_192320IMG_20180125_192325

Advertisements

Paneer Kuruma

பனீர் குருமா
 
தேவையான பொருட்கள் >>> நெய்யில் வறுத்த பனீர், பிடித்தால் காளான்(optional), வெங்காயம், தக்காளி, மஞ்சப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு
அரைக்க – துருவிய தேங்காய், கட்டாயம் கசகசா, 1 மேசைக்கரண்டி சோம்பு, பூண்டு நாலு பல், முந்திரி அல்லது பாதாம் பருப்பு, கொஞ்சம் இஞ்சி, ரெண்டே ரெண்டு மேசைக்கரண்டி முழுக்கொழுப்பு பால் அல்லது கிரீம்,
தாளிக்க கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, தூவி இறக்க கொத்தமல்லி தழை
 
செய்முறை >>> குருமா செய்வது எப்படின்னு உங்களுக்குத்தான் தெரியுமே 😉
 

இந்த ஊர்லே ” Arugula அருகுளா”ன்னு ஒரு கீரை கிடைக்குதுங்க…அதை ஒன்னும் சேர்க்காம, பச்சையா சாப்பிடலாமுங்க..கொஞ்சம் கசக்கும், ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும்…

Shredded Paneer

இன்று என்ன சமையல்?

பனீர் கொத்து (Shredded Paneer)
#மரக்கறி #Veg #பனீர்

தேவையான பொருட்கள்:
பனீர் – 300 கிராம்
1. வேதாஸ் டிக்கா மசாலா – 2 மேசைக்கரண்டி
2. மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி
3. உப்பு – தேவைக்கேற்ப
4. எலுமிச்சை ரசம் – 1/2 தேக்கரண்டி
5. பெரிய வெங்காயம் – 2
6. பச்சை மிளகாய் – 1
7. கருவேப்பிலை – கொஞ்சம்
8. கடுகு – கொஞ்சம்
9. பச்சைக்குடை மிளகாய் – கொஞ்சம்
10. சிகப்புக்குடை மிளகாய் – கொஞ்சம்
11. தக்காளி – 3 கீத்து
12. தேங்காய் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

செய்முறை:
நன்றாக உதிர்த்து விட்ட பனீருடன் 1 – 4 வரை சொல்லியுள்ள பொருட்களை, நன்றாக கலந்து ஒரு அரை மணிநேரம் ஓரத்தில் வைத்தேன்.
தேங்காய் எண்ணையை காயவச்சு கடுகு, கருவேப்பிலை தாளிச்சு, வெங்காயம், ப.மிளகாய் வதக்கி, புரட்டி வச்ச பனீரை நடுவுல கொட்டி, ஒரு ரெண்டு நிமிஷம் புரட்டி (ரொம்ப நேரம் சமைச்சா, ரப்பர் மாதிரி ஆயிரும்) அழகுக்கு குடை மிளகாய் தூவி, புதுசா வாங்குன தட்டுலே, ரெண்டா பிரிச்சு கொட்டி, தக்காளி கீத்தை உப்பு போட்டு சுத்தி வச்சு, சுடு தண்ணி குடிச்சிகிட்டே சாப்பிட்டேன் பாருங்க,,,அப்படி ஒரு ஆனந்தம்…

பின் குறிப்பு: எப்பப் பாரு ஒரே தட்ட போட்டோ எடுத்து போடறேன்னு நீங்க எல்லோரும் திட்டுறீங்கன்னு பொண்டாட்டி கிட்டே சொல்லி, கொற அழுகை அழுது, உண்ணாவிரதம் இருப்பேன் என்று பயமுறுத்தி, புது தட்டு வாங்கிட்டேங்க 🙂IMG_20170428_122107

Pan fried Paneer with Mushroom

இன்று என்ன சமையல்?

வட்ட வட்ட பனீர், வதக்கிய காளான்

தேவையான பொருட்கள்: பனீர் 200 கிராம்,
காளான் 100 கிராம்
வேதா டிக்கா மசாலா 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை ரசம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் 2 மேசைக்கரண்டி

செய்முறை: மின்னல் வேகத்தில் தயாரான மதிய உணவு. வேதா டிக்கா மசாலா, எலுமிச்சை ரசம், உப்பு கலந்து
வட்ட வட்டமாக வெட்டிய பனீர் மேல் தூவி, பத்து நிமிஷம் ஊறவச்சு, எண்ணெயை காயவச்சு, ரெண்டு பக்கமும் பொரட்டி போட்டு பொரிச்சு எடுத்தேன்.
சட்டி சூடா இருக்கும்போதே, ஒரு நாலு காளான பாதி பாதியா வெட்டி உள்ளே போட்டு, சும்மா ரெண்டு கிண்டு கிண்டி எடுத்துட்டேன்.
சமையல் நல்லா இருக்கோ இல்லையோ, போட்டோ பேஸ்புக்கில் போடணுமே, அதுக்காக அழகா அடுக்கி, பதிவு பண்ணுகிறேன், சரிங்களா?
யார் யாருக்கோ ஒட்டு போடுறீங்க, எனக்கும் ஒரு லைக் போடுங்க..(போடலேனா, நான் சாப்பிட மாட்டேன், அம்மா, அப்பா இல்லாத பிள்ளையை பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வேணுமா?)

பின்கதை: என்னாச்சுன்னா, வீட்டுக்காரம்மா காலைலெ கீழே வந்தாங்க. Good Morning Honey, I love youன்னு சொன்னேன்.
அழகான புருவத்தை மேலே உசத்தி, (அதான் மாசா மாசம், eyebrow பண்றீங்களே? அப்புறம் ஏன் புருவம் நல்லாஇருக்காது?)
“என்னா வேணும்” ன்னு கேட்டாங்க. பால்லே இருந்து பனீர் செய்வியே, அது செஞ்சு தர்ரியா-ன்னு கேட்டேங்க.
“எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு” இப்பத்தானே புரியுது, honeyன்னு சொல்லேலேயே நினைச்சேன், ஏன், உங்க  FaceBook IMG_20170407_090537IMG_20170407_115135IMG_20170407_115159groupலே, உங்க தங்கச்சிக யாரும் பனீர் எப்படி செய்வதுன்னு போடலியா – அதைப் பாத்து செய்யுங்க-ன்டு காரை எடுத்துட்டு கிளம்பி போய்ட்டா.
“கடன் பட்டார் நெஞ்சம்போல்” ஒரு நிமிஷம் கலங்கி நின்னேங்க. மாடோட மடிலேருந்து directஆ பனீர் எடுக்கிற மிசின் கண்டு பிடிக்கிறேன்-னு டேபிளில் மூணு தடவை அடிச்சு
சத்தியம் பண்ணிட்டு, கோட்டும், குல்லாயும் போட்டுக்கிட்டு, குளிரைத் தாங்கிக்கிட்டு, (3 degree C)
பொடி நடையா நடந்துபோய், Naanak Paneer வாங்கிட்டு வந்தேங்க. வீட்டுக்கு வந்துட்டு labelஐ பாத்தா,
ஷாக் ஆயிட்டேங்க. Ingredients Listலே Xanthum Gum, Guar Gum, Potato Starch-னு போட்டுஇருந்துச்சுங்கோ .
ஹா, ஹா, அதான் செல்வன் அண்ணாச்சி அடிக்கடி processed food வாங்கதீங்கன்னு சொல்றாரோன்னு நினைச்சேங்க.
நேரம் ஆச்சு, பசி வேற, ஒரு நாள்தானே, லேபில தூக்கிப் போட்டுட்டு சமைச்சு சாபிட்டுடேங்க.
இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டுங்க. நம்ம அட்மின்ஸ், சீனியர்களுக்கு தெரியவேண்டாங்க…
மறுபடியும் சந்திப்போம், விரைவில்…

Paneer Cutlet

பனீர் காய்கறி கட்லெட்
#வெஜ், #Veg

தேவையான பொருட்கள் ===>
துருவிய காய்கறிகள் (கேரட், சிவப்பு முள்ளங்கி, ஜுக்கினி ) – 150 கிராம்
வெட்டிய காய்கறிகள் (பச்சை மிளகாய் 2, காளான் 1, வெங்காயத்தாள் 2, கீரை கொஞ்சம், கொத்தமல்லி கொஞ்சம்)
பனீர் – 200 கிராம்
முட்டை 1
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை ===>
மேலே சொல்லிய காய்கறிகளை வேகும் வரை உப்பு போட்டு வதக்கி எடுத்துக்கோங்க.
துருவிய பனீருடன், வதக்கிய காய்கறிகளைப் போட்டு, முட்டையை நன்றாக அடிச்சு கலந்து,
உருட்டி, வடைகளாகத் தட்டிக்கோங்கோ.
சட்டியில் கொஞ்சமா ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி, மிதமான சூட்டில்
கட்லெட்களை சுட்டு, திருப்பி போட்டு, மறுபடியும் சுட்டு எடுங்கள்.

பின் குறிப்பு ===>
முட்டை இல்லாமலும் செய்யலாம். கொஞ்சம் உடையாமல் பார்த்துக்கோங்க.
முட்டை சேர்த்தால் எண்ணெய் குடிக்காது, கட்லெட் நன்றாக உப்பி, மெதுவாக இருக்கும்.
வீட்டில் உங்கள் மதிப்பு கொஞ்சம் கூடும். மறந்து போன காதல் மறுபடியும் நினைவுக்கு வரும்.

img_20170119_175302

img_20170119_181944

img_20170119_183708