Why I want to go to New York – an argument with my wife

Few years back, I wanted to go to NY to attend FETNA Conference. As usual Latha was not in favour of my idea, but after few days and lots of convincing I did go to NY. This is how our conversation went…nAn En NY pOga vEndum

நான் ஏன் அமெரிக்கா போக வேண்டும்?

நியூஜெர்சி வருவாளாம் நியூயார்க் வேண்டாமாம்
மார்கன்வில் வருவாளாம் மன்ஹாட்டன் வேண்டாமாம்

ஏழுமுறை வலம்வந்து இறுதிவரை உடனிருப்பேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
ராமன் நீயெனக்கு சீதை நானுனக்கு
நீயிருக்கும் இடமெல்லாம் அயோத்தி தான்எனக்கு
என்றெல்லாம் உறுதிகூறி எங்கரம் பற்றியவள்
இன்றுமனம் மாறிவிட்டாள் எதேதோ மழுப்புகிறாள்

தமிழுக்குத் திருவிழா நாம் போக வேண்டாமா
கனடா சார்பாக கவி சொல்ல வேண்டாமா
திரைகடல் ஓடிவந்து பெற்றோமா விட்டோமா
பட்டிமன்ற மேடையிலே பங்கு கொள்ள வேண்டாமா

என்று நான் கேட்டதற்கு எழுந்து வந்த என் மனைவி
என்னருகே வந்தமர்ந்து இனிதாக எனை நோக்கி
ஆலையில்லா ஆட்டவாவில் இலுப்பைபூ சக்கரைநீ
ஆன்றோர் நிறைந்திட்ட அமெரிக்கா சரிப்படுமா

கம்பனுக்கு உறவில்லை வள்ளுவனும் சொந்தமில்லை
இளங்கோவும் பாரதியும் எதிர்வீட்டுகாரர் இல்லை .
கூரை ஏறி ஒரு நாளும் கோழி நீங்கள் பிடித்ததில்லை
வானம் ஏறி வையகம்தான் எப்படி நீர் பிடிப்பீராம்

கான மயிலாட கண்டிருந்த வான் கோழி…
கல்லாதான் கற்ற கவி கதை போல ஆகாதா
எனவேதான் சொல்கின்றேன் என் இனிய மணவாளா
கவியரங்கம் பட்டிமன்றம் சரிப்பட்டு வாராது

கலங்காதே கண்மணியே காவியத்தில் ராமனுக்கு
வானர சேனையுடன் மண்சுமந்த அனில்கள் போல
ஆட்டவா சார்பாக அமெரிக்கப் பேரவைக்கு
ஆனமட்டும் உதவிடவே அங்கு நான் செல்கின்றேன்

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on October 27, 2010, in Poetry. Bookmark the permalink. Leave a comment.

Leave a comment