Blog Archives

கனடா – Canada

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

ஆல்பெர்டா

பாகம் – 2

கேல்கேரி (Calgary) பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 

மொட்டைமாடித் தோட்டங்கள்,  முக்குக்கு முக்கு சிற்பங்கள் 

 செயற்கை நீருற்று, சுவர் முழுக்க செடி கொடிகள் 

ஏழாம் சாலையிலே எழில்மிகு மின்வண்டி (7th Avenue C-Train)

பகட்டான எட்டில் பலரக உணவகங்கள் (Stephan Avenue)

ஒன்பது நடுத்தெரு சந்திப்பில் உயர்ந்து நிற்கும் கோபுரம் (Calgary Tower)

பத்தாம் சாலைவரை பாதசாரி பாலங்கள் (+15 Skywalk)

நகர் மையம் முழுவதும் வானளாவிய கட்டிடங்கள் 

எண்ணெய் நிறுவனங்கள் எண்ணிலடங்கா அலுவலகங்கள் 

காப்பீட்டுக் கழகங்கள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள்  

கண்கவர் பூங்காக்கள், அருங்காட்சி  அகங்கள்  (Devonian Gardens, Glenbow Museum)

 பொழுது போக்கு அரங்குகள் (Entertainment district)

கேளிக்கை கூடாரங்கள் (Night Life district)

இரண்டு இடங்களிலும் இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்ததில்லை.

இளைய தலைமுறையை சிலநேரம் கண்டதுண்டு. நம்மைக் கண்டால் அடுத்த முறை இடத்தை மாற்றி விடுகிறார்கள். (வீட்டில் தான் உங்க மூஞ்சிய பாக்குறோமே,,,இங்கேயுமா? என்று அவர்கள் உள்மனது பேசுவது கேட்டது)

பிரஞ்சு மொழி பிரயோகம் கேட்கவேயில்லை 😉

நகரத் தந்தை (Mayor) நஹீத் நென்ஷி 

முதல் முஸ்லிம் மேயர் – ஒரு பெரிய வடஅமெரிக்க நகரத்துக்கு 

உணவுக்குப் பஞ்சமில்லை – பலவிதம், பலரகம், பலதரம் 
காசுக்கேத்த பனியாரம் 

மாட்டிறைச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் –
பாம்பு திங்கும் ஊரில் நடுத்துண்டு 

கேட்டு வாங்கி சாப்பிடு.
பிரேசில் நாட்டாரின் ஸ்டேக் உணவகங்கள் பிரபல்யம்.
தீயில் சுட்ட துண்டுகளை நம் தட்டில் தள்ளும் லாகவம் 
ஒரேவிலை அளவே இல்லை 

கேல்கரியில் ஒன்றே ஒன்றுதான் பார்க்க வேண்டும், முடியும் என்றால் ….
அது இந்த பாலம்தான் ...

dsc02621

அடுத்த வாரம் – டைனசார்கள் பற்றி 

அதுவரை அன்புடன் ஆனந்த் (முருகானந்தன்)

Canada – கனடா – இந்த மண்ணைப்பற்றி …

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

பாகம் – 1

ஆல்பெர்டா

alberta-canada

ஆல்பெர்டா – கனடாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று.

முல்லையும், மருதமும், குறிஞ்சியும், கொஞ்சம் பாலையும் உண்டு.

எண்ணைமண் (Oil Sands) நிறைந்த நிலம்.

கனிம வளங்களுக்கு குறைவில்லை. கடுங்குளிருக்கும் பஞ்சமில்லை.

மேற்கில் ராகிஸ் மலைத்தொடர் இதன் எல்லை (Rocky Mountain).

விளைநிலங்கள் ஏராளம், பண்ணைத்தொழில் பிரதானம்

தலைநகர் எட்மண்டன், எழில் நகர் கேல்கரி அல்லது கல்காரி (Calgary)

Calgary is a Connected City

DSC02418.JPG

விண்ணில் இருந்து நோக்கினும், மண்ணில் இருந்து நோக்கினும்

முதலில் கண்ணைக் கவர்வது நதி சார்ந்த நகர் மையம்

அழகழகான அடுக்குமாடிக் கட்டிடங்கள்

அமைதியாக ஓடுகின்ற ஆறு – பௌ ரிவர் (Bow River)

இயற்கை படைத்த நதியின் இரு கரையும்

மனிதன் படைத்த மரவனம் மலர் வனம்

dsc02378

இரவு பகல் பாராது நடை பயிலும் நன்மக்கள்

சிலர் நடை, சிலர் ஓட்டம், சிலர் காலில் சக்கரம் (Roller Skates, Skate Board)

dsc02376

இடையறாத உடற்பயிற்சி இடைவிடாத நடைப்பயிற்சி

விளைவு,,,ஆணும் பெண்ணும் அத்தனை அழகு

கோடையில் நடை, ஓட்டம், குளிரில் பனிச்சறுக்கு

எந்தப்பருவத்திலும், எல்லாப்பருவத்தினரும் நடக்கத் தோதாக

நகர் மத்தி முழுவதும் ஊசி ஊசியாக நிற்கும்

உயர் கோபுரங்களை நூல் கோர்ப்பது போல

15 அடி உயரத்தில் 70 க்கும் மேலான

பகட்டான பாதசாரி பாலங்கள்

img_20161122_134148

(Climate Controlled, Covered, Pedestrian Bridges – + 15 Skywalk)

ஆங்காங்கே உணவுச் சந்தைகள், உடற்ப்பயிற்சி சாலைகள்

சிறு வணிகர்கள், சலவை அகங்கள், பல் மருத்துவர்கள்

இடை இடையே சிங்காரச் சிற்பங்கள்

மிகமிகக் குறைவாக கையேந்தும் வறியவர்கள்

நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை

எங்கு நோக்கினும் பாரதி கண்ட புதுமைப்பெண்கள்

கம்பன் சொன்ன “இல்லையோ” என எண்ணவைக்கும் இடைகள்

அழகுமிகு சிகை அதரங்களில் நகை

அலைபாயும் விழி தடையில்லா மொழி

ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை

காளை ஏறும் வீரவிளையாட்டு பூமி அல்லவோ (Calgary Stampede)

பலர் கட்டுடல் காளைகள் வேழம் நிகர்த்த விரி மார்பு கொண்டவர்கள்

விரைவு நடை வேங்கைகள்

நேர்த்தியான உடை, நேரான நடை

ஒட்டிய வயிறு கொண்ட விருகோதரர்கள்

அதிதீவிர உடற்பயிற்சி அதன் விளைவு

பலபேருக்கு கைகட்டு கால்கட்டு – ஆனால்

அதைப்பற்றி கவலையில்லா மனப்போக்கு

ஓதிய மரம் பெருத்தால் உத்தரத்துக்கு உதவாது

என்று நன்கு உணர்ந்தவர்கள்

மின்னுயர்த்தி (Elevators) இருந்தாலும்

மாடிப்படிகளைத் தாவிக்கடப்பவர்கள்

மொத்தத்தில், இந்த பத்தொன்பது ஆண்டு வடஅமெரிக்க வாழ்க்கையில்

நல்லுடல் கொண்டோரை நிறைய வாழும் நகரம் கேல்கரி

தொடரும்…